(Reading time: 13 - 25 minutes)

எல்லாம் மொழியின் மாயம்..

தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்துக்கொடுதிருந்தாள் மொழி..

மதுரை வீட்டைப் போலவே அதுவும் தனி வீட்டு சிறிய தோட்டத்துடன்..

அது மிகவும் பிடித்துவிட்டது சமுவிற்கு..

கோவையிலும் அண்டை வீட்டில் இருப்போர்களது கண்களில் ஒரு ஒதுக்கம் தெரிந்தாலும் அதை சுத்தமாக ஒதுக்கித்தள்ளியிருந்தாள் சமுத்திரா..

வாழ்க்கை அங்கும் மிக அழகாகச் செல்வதுபோலவே தோன்றியது அவளுக்கு..

பெரிதாக எந்த மாற்றம் இல்லாதபோதும் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் கடந்துகொண்டிருந்தது நாட்கள்..

தாயின் மாற்றங்கள் இதற்கு ஒருகாரணம் என்றே சொல்லலாம்..

விரக்தித்தன்மை மறைந்திருந்தது அவரிடம்.. பேச்சிலும் தெளிவு பிறந்திருந்தது..

சமுவென்ற மரத்தில் கொடியாகப் படர்ந்திருந்தார் அவர்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இலையுதிர் காலம் தொடங்கியிருந்த காலம் அது.. சமுவிற்கு அது வசந்தகாலமாகவே தோன்றியது..

அவளை மேலே படிக்க அனுமதி வழங்கியிருந்தார் லீலா..

அருகிலிருந்த கல்லூரிக்கெல்லாம் படை எடுத்துக்கொண்டிருந்தாள் சமுத்திரா..

அப்ளிக்கேஷன் வாங்க அதை பூர்த்தி செய்துகொடுக்கவென சக்கரம் போல் ஓட்டம் அவளிடம்..

“என்ன கோர்ஸ் சமூ எடுக்கப்போற..??”, போனில் பேசும்பொழுது ஒருமுறைக் கேட்டாள் மொழி..

“எனக்கு சோஷியல் வர்க்ல மாஸ்டர்ஸ் பண்ணனும் மொழி.. சோ இப்போ ஏதாவது ஒரு யூஜி டிகிரி படிக்கணும் அதுக்கு..”

“உனக்கு எஞ்சினியரிங் படிக்கணும்னு தானே ஆசை சமூ.. பிறகு ஏன் இந்த மாஸ்டர்ஸ் இன் சோஷியல் வர்க் எல்லாம்..??”

“படிக்கணும்னு ஆசை இருந்துச்சு மொழி.. ஆனால் இப்போ அது இல்லை.. எனக்கு மனுஷங்களோட கனெக்ட்டடா இருக்க மாதிரி ஒரு லைப் வேணும்.. அவங்களோட லைப்ல துணை நிற்பது மாதிரி ஒரு வாழ்க்கை வேண்டும்.. முக்கியமாக என்னை மாதிரி திருநங்கைகளோட வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பணி செய்ய வேண்டும்..”

“உனக்கு கண்டிப்பா சீட் கிடைக்கும் சமுத்திரா..”, நம்பிக்கையுடன் வந்தது மொழியின் வார்த்தைகள்..

இடம் கிடைக்குமா சமுத்திராவிற்கு..??

குறிப்பு

வணக்கம் தோழமைகளே..

மாதம் ஒருமுறை உங்களைச் சந்திக்க வரும் தாரிகை இனிமேல் வாரம் ஒரு முறை சனிக்கிழமை தோறும் உங்களைக் காண வருவாள்..

நன்றி..

உருவெடுப்பாள்..

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.