(Reading time: 10 - 20 minutes)

"அண்ணா நல்லா தாங்க இருக்காரு! சின்ன காயம் தான், இரண்டே நாட்களில் குணமாகிடுச்சு. தோப்புக்கு பின்னாடி இருக்கிற குளக்கரையில தான் இருக்காரு! பார்க்கிறதா இருந்தா போய் பாருங்க." எந்த உண்மையும் அறியாத அவரோ அவர்களிடத்தில் மேலும் நெருக்கத்தினை அதிகரிக்க வழிவகுத்தார். தர்மாவின் மனம் எதைக் குறித்தும் சிந்திக்கவில்லை, குளக்கரை நோக்கி பயணப்பட்டார். சூரிய நாராயணன் குளக்கரையில் அமர்ந்தவண்ணம் சிறு சிறு கல்லாய் குளத்தில் வீசிக் கொண்டிருந்தார். வெகு நேரம் இவ்வாறு செய்துக் கொண்டிருந்ததால், சலித்துப் போய் அவர் எழ, தனது பின்னால் நின்றிருந்த தர்மாவின் மேல் அவர் மோத, தடுமாறி விழப்போனவளை தாங்கினார் நாராயணன். சில பொழுதுகள் காலம் நின்றிருக்கலாம், உறைந்துப் போய் நின்றிருந்தனர் இருவரும்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"இங்கே என்னப் பண்றீங்க?" நிலை உணர்ந்தவராய் கேட்டார் நாராயணர்.

"உங்கக் காயம் எப்படி இருக்கு?" மனதில் குற்றவுணர்வோடு கேட்டார் அவர்.

"நான்தான் அன்னிக்கே சொன்னேனே சின்ன காயம் தான். எப்போதோ சரியாகிவிட்டது." பதில் புன்னகை தந்தார். அவர் அதை நம்புவதாக இல்லை என்பதை தயங்கி நின்ற அவர் விழிகளே உணர்த்தியது.

"ஏங்க..நம்புங்க!"

"ம்..." எனினும் அதே கவலை.

"ப்ச்...!" என்று தனது சட்டை பொத்தான்களை கழற்றினார் அவர்.

"என்னப் பண்றீங்க நீங்க?" ஒருவித பதற்றம் தர்மாவின் மனதில் தொற்றிக் கொண்டது.

"அட! பயப்படாதீங்க. இங்கே பாருங்க, பாருங்க!"- மூடியிருந்த விழிகளை மெல்ல திறந்தார் அவர்.

"காயம் ஆறி இருக்கா? நான்தான் சொன்னேனே!" தனது காயத்தை வெளிச்சமாக்கினார் அவர். காயம் ஆறி, லேசாக தோல் கூடி இருந்தது. எனினும் வடு மறையவில்லை.மனம் நொந்துப் போனது. தன்னால் தானா அனைத்தும் என்ற எண்ணம் தோன்றியது. தன்னையறியாமல் தனது கரம் அந்தக் காயத்தை தீண்டினார் அவர். இது சூரிய நாராயணரும் எதிர்நோக்காத நிகழ்வே!! தர்மாவின் விழிகள் தாரை தாரையாய் நீரை சேகரிக்க, அதற்கு மேலும் மனதின் எண்ணங்களைக் கட்டுப்படுத்த இயலாதவராய் தன் பதியை அணைத்துக் கொண்டார் தர்மா.சற்றும் எதிர்நோக்காத ஒரு தடுமாற்றம் இரு மனங்களின் மத்தியில்! சூரிய நாராயணனின் கரங்கள் மெல்ல அவரை அமைதிப்படுத்தின. நீண்ட நேரமாய் ஒருவர் மற்றொருவரை தியாகிக்க மனம் அற்று நின்றிருந்தனர். ஏதோ இனம் புரியாத மாற்றம் அந்த ஆண்மகனின் நெஞ்சத்துள்!

"இவள் தாயை பழி வாங்க அல்லவா துடித்தேன். ஆனால், இவளது நெருக்கத்தை, இந்த அன்பை ஏன் விரும்புகிறேன்.?" கேள்வி எழுப்பியது மனம். பொழுதுகள் கடப்பதை உணர்ந்தவள், அவரை விலகி நின்றாள். நாராயணனின் விழிகள் அவளைத் துளைத்து எடுத்தன. அதற்கு மேலும் அங்கு இருப்பது சரியாகா என்பதை உணர, அங்கிருந்து விலகியவரின் கரத்தைப் பற்றி இழுத்தது நாராயணனின் கரம்!! அந்தத் தீண்டலில் உறைந்துப் போனாள் அந்தக் கன்னிகை.

"உன் மனசுல இருக்கிறதை சொல்லு!" விழிகள் உற்று நோக்கி, அவர் தொடுத்த வினாவில் உண்மையாய் இருந்தது ஒருவித ஏக்கமே! அவளோ தயங்கி நின்றாள், பதில் ஏதும் உரைக்காமல்! தன்னிரு கரம் கொண்டு தர்மாவின் கன்னத்தைத் தாங்கியவர், இன்னும் ஆழமாக அவள் விழிகளை துளையிட்டார்.

"ப்ளீஸ்...மறைக்காம சொல்லு!" கண்ணீர் திரண்டது அவள் கண்கள்.

"எ...என...எனக்கு..!" நடுங்கினார் அவர்.

"உனக்கு?"

"நான்...உங்களை...!"

"என்னை?"

"விரும்புறேன்!" போட்டு உடைத்தார் தன் மன இரகசியத்தை, தனது கட்டுப்பாடுகள் அனைத்தையும் மறந்து!!நாராரணனுக்கு அந்நொடி அனைத்தும் மறந்துப் போனது. அந்த விழிகளில் இருந்த கள்ளமில்லாத அச்சம், அது மட்டுமே இருதயத்தை வியாபிக்க, சற்றும் தயங்காமல் தன்னவளை இழுத்து அவளது இதழ்கள் மேல் பதில் மடல் எழுதினார் அவர். அந்நொடி இனம் புரியாத தடுமாற்றம் இரு நெஞ்சங்களுக்குள். இருவரும் ஒருவரே என்ற உறுதிமொழியினை தத்தம் இருவரும் பரிமாறிக் கொண்டனர். சில நொடிகள் கடந்து ஏற்பட்ட விலகல் தர்மாவின் இதயத்துடிப்பை அதிகரித்தது. அதற்கு மேலும் அங்கிருக்க எண்ணம் கொள்ளாதவர், சிரம் தாழ்ந்தவண்ணம் அங்கிருந்து ஓடினார் ஒரு நாணத்துடன்! அவர் செல்வதையே கண்ட சூரிய நாராயணனின் விழிகள் துளிக் கண்ணீரை சிந்தின. அதன் பொருள் யாதென அவர் ஒருவரே அறிவார்!!

Episode 13

Episode 15

தொடரும்!

{kunena_discuss:1149}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.