Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 18 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 18 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

தோழமைகளே " உன்னில் தொலைந்தவன் நானடி கதிர் இளம்பிறையை" மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்புறேன். காரணம் ஆயிரம் சொல்லி மன்னிப்பு கேட்டு உங்களை கடுப்பேத்த விரும்பலை, அதுக்கு பதிலா 2018 முடியறதுக்குள்ள இந்த தொடர்கதையை முடிக்க திட்டமிட்டு அதில் ஓரளவு ஜெயிச்சிடலாம்னு நினைக்கிற அளவு வேலையை முடிச்சிருக்கேன்னு தெரிவிச்சுக்கிறேன். இனி பேபி மூனும் கதிரும் அடிக்கடி உங்களை பார்க்க வருவாங்க. இனியும் உங்கள் ஆதரவு உண்டு என்ற நம்பிக்கையில் இதோ அடுத்த எபிசொட்.

ருத்துவமனையில் இருந்து தனது இல்லம் நோக்கி ஆட்டோவில் புறப்பட்டவள் மனம் முழுக்க கதிரின் நினைவே நிரம்பி இருந்தது.சமீப காலமாக  அவனின் பிடிவாத குணம் பற்றியே கேள்விப்பட்டுக்கொண்டு வந்ததை மனம் அசை போட்டது. அன்று ஜாஸ்மின் தன்னிடம் கூறிய “கதிர் சார் எவ்வளவு நல்லவரோ அவ்வளவு பிடிவாதக்காரர் இளா, முடியவே முடியாதுன்னு சொன்ன என்னை எத்தனை தரம் சந்தித்து பேசி தைரியம் கொடுத்து, இன்னிக்கு உங்க முன்ன நான் இப்படி இருக்கேன்னா அதுக்கு அவர் தான் காரணம்” என்று அவள் சொன்னதை நினைத்து இப்போதும் இவள் இதழ் விரிந்தது.

“அதே போல் தானே அந்த பெங்களூரு ப்ரொஜெக்ட்டை “நீ தான் பொறுப்பேற்று செய்ய வேண்டும்” என்று பிடிவாதமாய் எவ்வளவு சொல்லியும் கேளாமல் சம்மதிக்க வைத்தான்.  அது மட்டுமா இன்றுவரை என்னை இரு சக்கர வாகனத்தை எடுக்க விடவில்லையே, உருட்டி மிரட்டியாவது காரியத்தை சாதித்து கொள்கிறான் பிடிவாதக்காரன்” என்று அவள் தனக்குள் சிரிக்க,  அவள் இல்லம் வந்து விடவும் ஆட்டோவிற்கு பணத்தை கொடுத்துவிட்டு உள்ளே வந்தவளை இன்னும் தலைவலி விட்ட பாடில்லை.

எப்போதும் போல் தன் தந்தையிடம் நலன் விசாரணையை வைத்தவள் தேனீர் தயாரிக்க செல்ல தலை வலி இப்போது மண்டையை பிளப்பதாய் இருந்தது. சோர்வு உடலை வாட்ட தேனீர் மட்டும் சற்றே சிரமப்பட்டு குடித்துவிட்டு, வீட்டை உள்ளே தாளிட்டுவிட்டு படுக்கையறையில் தன் பிரியமான கரடி பொம்மையோடு படுத்தவள், மெல்ல அதன் மூக்கை பிடித்து கிள்ளி பிடிவாதக்காரா, நீ சொல்றதுக்கு எல்லாம் என்னால ஏன் மறுப்பு சொல்லவே முடியல? இத பாரு ஒழுங்கா சொல்றேன் நீ பழையபடி என்னை திட்டு, முறை, ரொம்ப கேவலமா என்னை பார்ப்பியே ப்ளீஸ் அப்படியே இரு, அதைவிட்டுட்டு இப்படி நீ என்கிட்டே உருகி பேசினா நான் எப்படி உன்னை விட்டுட்டு போக முடியும் சொல்லு.

சோ என் கதிர் செல்லம் நீ என்ன பண்ணுவியாம் என்னை எந்த சிரமமும் இல்லாம உன்னை விட்டுட்டு போக அனுமதிப்பீங்களாம் வேற ஒரு கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருப்பீங்களாம், உன் பாட்டி பாவம் டா அவங்க ஆசையை சீக்கிரம் நிறைவேத்தி கொடு அதைவிட்டுட்டு என்கிட்டே இப்படி பேசி டைம் வேஸ்ட் பண்ணாத ம் ஓகே” என்று சொல்லி அதற்கு முத்தமிட்டுவிட்டு மறக்காமல் அதை தனது ரகசிய பையுள் வைக்க  அவள் மனமோ இன்று தன்னவன் மேல் கொண்ட காதலில் அவனை முதன் முதலாக சந்தித்த நாள் முதல் அசை போட தொடங்க அவள் அறியாமல் அவள் உடல் வெப்பநிலையும் ஏறி கொண்டே சென்றது.

அப்போது கதிர் KJ  நிறுவனத்தை தொடங்கி இருந்த ஆரம்ப கால கட்டம், இளம்பிறையும் கூட தாயிடம் மல்லு கட்டி,  தான் விரும்பிய படிப்பை படிக்க தொடங்கியிருக்க, ஒரு நாளுக்கு ஒரு முறையேனும்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சந்திராவின் திருமணம் குறித்து பேசிவிட்டு பின் இவ கல்யாணம் முடிஞ்ச அடுத்தே ஆறே மாசம் உனக்கும் டும் டும் டும் தான் அது வரைக்கும் தான் இந்த காலேஜ் கீலேஜ் எல்லாம் என்று மறக்காமல்” இவளையும் மிரட்ட தவறியதில்லை சுந்தரி.

என்னதான் தன் தந்தை மீது நம்பிக்கை இருந்த போதும் சுந்தரியின் எச்சரிக்கை அவளை வெகுவாய் பயம் கொள்ளவே செய்தது. ஒரு ஞாயிற்று கிழமை உடன் படித்த பள்ளி தோழிகள் அனைவரும் வந்து

ராசாத்தியை அழைத்து கொண்டு கடற்கரைக்கு சென்றிருக்க அங்கேயும் அவர்களிடம் அதையே புலம்பி தள்ளினாள் ராசாத்தி. அவள் தோழிகளுள் ஒருத்திக்கு திருமணம் வேறு நிச்சயித்து இருக்க இவளுள் பீதி கிளம்பி விட்டது. எதையும் ரசிக்க முடியாமல் குழம்பிய மனதோடு இருந்தவளை தோழி ஒருத்தி 

அவளின் தோள் தட்டி “ஏய் அங்க பாருங்க, இங்க வந்த நியாபகமா நாம எல்லாரும் அந்த பொம்மைகளை வாங்கிப்போமா” என்று சொல்லவும் ஐந்து பேரும் சென்று விலையை விசாரித்தனர்.

அப்போது தான் தெரிந்தது கடற்கரையின் அந்த பரப்பில் தொங்கவிடப்பட்டிருந்த அந்த பொம்மைகள்

விற்பனைக்கு  அல்ல விளையாட்டில் வெற்றிபெறுவோருக்கு என்று

என்ன விளையாட்டு என்று தோழிகள் விசாரிக்க இருபது டம்பளர்கள் தலைகீழாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.பத்து டம்ளர்கள் தலை கீழாக வைக்கப்பட்டிருக்க அதன் மேல்  ஐந்து, அதன் மேல் மூன்று பின்

இரண்டு என்று கோபுரம் போல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளவற்றை குறிப்பிட்ட தொலைவில் நின்று  மூன்றே சுற்றில், கொடுக்கப்பட்டுள்ள மூன்று பந்துகளால் அடித்து வீழ்த்த வேண்டும். அவ்வாறு

வீழ்த்தினால் பரிசாக அந்த கரடி பொம்மை.

பத்து டம்பளர்களை வீழ்த்தினால் கி செயின் என்று சொல்ல, அனைவரும் ஆர்வத்தோடு பங்கேற்று

தோற்று விட  இவள் மட்டும் தனக்கு விருப்பம் இல்லை என்று சொல்ல, அதில் நல்ல உள்ளம் கொண்ட

About the Author

Prama Subbiah

Like Prama Subbiah's stories? Now you can read Prama Subbiah's full novels at Chillzee KiMo. No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 18 - பிரேமா சுப்பையாmahinagaraj 2018-09-10 13:46
ரொம்ப நல்லாயிரிருக்கு மேம்.... :clap: wow :clap:
அவளோட கதிரே இப்போ அவளுக்கு சொந்தம் ஆகினதுல சந்தோசம்... :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 18 - பிரேமா சுப்பையாsaaru 2018-09-09 19:01
Nice and cute babu
Late ah vandalum niraya pages super
ila voda nature super ha ha
Mala kalaikura
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 18 - பிரேமா சுப்பையாmadhumathi9 2018-09-09 15:20
:clap: nice epi sis.late aga koduthaalum adhiga pages koduthu manathai cool panni vitteergal. :thnkx: 4 this epi & more pages. (y) waiting to read more.adutha epi seekkiram koduppeergala :Q: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 18 - பிரேமா சுப்பையாSaju 2018-09-09 14:41
Nice ud sis
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top