(Reading time: 10 - 20 minutes)

வேகமாக எழுந்த பருவதம் அம்மாள் கீதாவை பார்ப்பதற்காக ICU வார்டு க்கு செல்ல ரிஷியை பார்த்தார்.

ஆனால், ரிஷியோ கீதாவை பார்க்க மறுத்து விட்டான்.... ரிஷியை முறைத்தவார்... ஏதும் பேசாமல் கீதாவின் அறைக்கு செல்ல திரும்பினார்.....

அங்கயே, ICU வாசலலில் தனது அண்ணன் சதாசிவம் நிற்பதை பார்த்த பருவதம் அம்மாள்  பயந்து விட்டார்.

அண்ணா.... எப்படி இங்கு வந்தார்???? இப்பொழுது வந்து அவர் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வது????

நானும் ரிஷியும் பேசி கொண்டு இருந்ததை கேட்டு இருப்பாரோ???? என்று பல கேள்விகளுடன் தனது அண்ணனை பார்த்தவாறு நின்று கொண்டு இருந்தார்.

ICU வார்டு க்கு போகாமல் தனது அத்தை ஏன் நின்று கொண்டு இருக்கிறார்??? என்று பார்த்த ரிஷிக்கும் அங்கே நின்று கொண்டு இருக்கும் சதாசிவத்தை பார்த்து பேரதிர்ச்சி தான்.

தனது தந்தை எப்படி இங்கு வந்தார்???  கீதாவின் மீது இப்போதுதான் அவர்க்கு நல்ல எண்ணம் வர ஆரம்பித்தது. அதுவும் அத்தையின் உதவியால்.....

ஆனால், இப்பொழுது கீதாவோ கையை கிழித்து கொண்டு ICU வில் இருக்கிறாள்.... என் உடம்பு எங்கும் இருக்கும் இரத்தமேயே அவர்க்கு அனைத்தையும் சொல்லிவிடும்.

இந்த ஒரு காரணத்திற்காவேயே,  தனது தந்தை இனி தங்களுக்கு திருமணம்  செய்து வைக்க ஒத்துக்கொள்ளமாட்டார்....

ஒரு வேளை, அத்தை கூட்டி கொண்டு வந்து இருப்பாரோ..... என்று பருவதம் அம்மாளை பார்த்தான்....

அவரோயோ, தனது அண்ணனை பயத்துடன் பார்த்து கொண்டு இருந்தார்.

அப்போது, ICU வில் இருந்து வெளியில் வந்த நர்ஸ் ரிஷியிடம் வந்து patient கண் முழித்து விட்டார்.... சென்று பாருங்கள் என்று கூறிவிட்டு வெளியில் சென்றார்....

நர்ஸ் கூறியதை கேட்ட சதாசிவம் ரிஷியையும் பருவதம் அம்மாளையும் உள்லேயே வருமாறு சைகை செய்து விட்டு கீதாவின் அறைக்குள் சென்றார்....

அப்பொழுதான் கீதா, கண் விழித்து இருந்தாள்.... ஆனால் அவளது கை கொடுத்த வலியினால் அவளுக்கு அனைத்தும் ஞாபகத்தில் இருந்தது....

கடைசியாக, ரிஷியின் மடியில் அவள் இருந்தாள்..... என்பது வரை அவள் நினைவில் இருந்தது.....

தனது தாய்யினை பற்றிய உண்மையை ரிஷியிடம் கூறிவிட்டாள்..... இனி, தன்னை ரிஷி ஒருபோதும் விரும்ப மாட்டான் என்று நினைக்கும் போதேயே அவளுக்கு அழுகை அதிகமானது....

தான் இருப்பது மருத்துமனை என்பதால் ஒரு கையால் தனது வாயினை போத்திகொண்டு அழுதாள்....

ஆனால், திரும்ப திரும்ப ரிஷியின் முகமேயே அவள் நினைவுக்கு வர கீதாவின் வேதனை அதிகமானது.....

கீதாவினால், அழுகையை கட்டுப்படுத்த முடியமால் வாய்விட்டு அழுதாள்.

தீடிர் என்று யாரோ தனது தோலை தொடவும் திரும்பி பார்த்தவள் அங்கேயே சதாசிவம் நின்று கொண்டு இருப்பதை பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை....

இவர் எப்படி இங்கேயே????? என்று நினைத்தவள் ...... அவர் பின்னால் நின்று கொண்டு இருந்த பருவதம் அம்மாள் , ரிஷியையும் பார்த்தாள்.

கீதாவை, அண்ணன் எதும் திட்டி விடுவாரோ என்ற பயத்தில் பருவதம் அம்மாள் நின்று கொண்டு இருந்தார்.

ரிஷிக்கும் அதேயே பயம் இருந்தது.... அறையின் உள்ளேயே நுழையும் போது கேட்ட கீதாவின் அழுகுரல் தான் ரிஷிக்கு இப்போது பெரிசாக தெரிந்தது.

தன்னை பயத்துடன் பார்க்கும் கீதாவை பார்த்த சதாசிவம் அவளது கண்ணீரை முதலாளில் துடைத்து விட்டார்.

பின்னர், அவளது தலையை வாஞ்சையுடன் தடவி விட்டார்.

சதாசிவம், இவ்வளவு அன்புடன் தன்னிடம் நடந்து கொள்வார் என்று கீதா சிறிதும் நினைக்கவில்லை.

ஏன்???? பருவதம் அம்மாள் ரிஷி கூட இதை எதிர்பார்க்க வில்லை......

கீதாவிற்கு மேலும் அழுகை அதிகரித்தது. சதாசிவம் தான் கீதாவிற்கு ஆறுதல் கூறினார்.

இதோ பாரும்மா..... நடந்தது எல்லாம் மறந்திடு.... இனி நடக்குறது எல்லாம் நல்லதா நடக்குனு நம்புமா.....

மேலும், அழுது உன் உடம்ப கஷ்டப்படுத்திக்காதம்மா...... நாங்க எல்லாரும் உன் கூட இருக்கோம்.... நீ எதுக்கும் கவலைப்படக்கூடாது...

இந்த மாதிரி முடிவு எல்லாம் இனி நீ எடுக்க கூடாது சரியா????? என்று கேட்டவருக்கு கீதாவும் சரி என்பது போல தலை ஆட்டினாள்.

சதாசிவம், கீதாவிடம் இந்த அளவிற்கு அன்பாக பேசுவார் என்று பருவதம் அம்மாள் ரிஷி எதிர்பார்க்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.