ஏன்..... கீதா கூட இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை..... அனைவரின் முகத்தையும் பார்த்த சதாசிவத்திற்கும் அவர்களின் மனஓட்டம் புரிந்தது.
ஆனால், அவர்களுக்கு எதையும் விளக்கி சொல்ல அவர் விரும்பவில்லை.
பருவதம், நீ இங்கு இருந்து கீதாவை பார்த்து கொள்.... நான் சென்று சிவகாமியிடம் நடந்ததை எடுத்து கூறி
கீதாவிற்கு தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு வர சொல்கிறேன்.....
அண்ணா, வேண்டாம் நானேயே வீட்டிற்கு வந்து சிவகாமியிடம் சொல்கிறேன்..... அப்படியே, கீதாவிற்கு தேவையான பொருள்களையும் எடுத்து கொள்கிறேன்....
அதுவரைக்கும்.... ரிஷி கீதாவை பார்த்துக்கொள்வான்.... என்று கூறிய பருவதம் அம்மாளை ரிஷியும் கீதாவும் ஒன்றாக பார்த்தனர்...
ஏனோ, தெரியவில்லை.... கீதாவிற்கு ரிஷியின் அருகாமை தேவைப்பட்டது... கண்கள் இரண்டும் அவனையே பார்த்தது.
ஒருவார்த்தை தன்னிடம் அவன் பேச மாட்டான்யா.... என்ற ஏக்கத்தில் கீதா இருந்தாள்.
ஆனால், ரிஷியோ.... அறையில் நுழைந்ததில் இருந்து கீதாவை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.....
தன்னால் தான் கீதா கையை கிழித்து கொண்டால் என்ற குற்ற உணர்ச்சியில் ரிஷி நின்று கொண்டு இருந்தான்.
இவர்கள் , இருவரின் மனநிலையும் பருவதம் அம்மாவிற்கு நன்றாக புரிந்து இருந்தது.
இதை , இவர்கள் தான் பேசி தீர்க்க வேண்டும். என்று எண்ணியே கீதாவை பார்த்துக்கொள்ள ரிஷியை இருக்க சொன்னார்.
அத்துடன், தனது அண்ணனிடம் சில கேள்விகளும் கேட்கவேண்டும். எப்படி, இந்நேரத்தில் தனது அண்ணன் இங்கு வந்தார்????
தீடிர் என்று கீதாவிடம் அன்பாக நடந்து கொள்வது ஏன் என்று கேட்க வேண்டும்.
இவை எல்லாத்திற்கும் மேலாக இப்பொழுது சிவகாமியிடம் என்ன சொல்வது????? என்ற யோசனையே அவருக்கு பெரிதாக இருந்தது.
ரிஷியும் கீதாவும் ஒன்றாக பருவதத்தை பார்ப்பதை உணர்ந்த சதாசிவம், கார்யில் தான் காத்திருப்பதாக தனது தங்கையிடம் கூறிவிட்டு வெளியில் சென்று விட்டார்....
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
கீதா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என்று அழுகையுடன் பருவதம் அம்மாளிடம் கூறினால்....
ஆனால், பருவதம் அம்மாள் கீதாவின் மன்னிப்பை ஏற்கவில்லை....
கீதா, உன்னிடம் இதற்கு மேல் நான் எதையும் மறைக்க விரும்பவில்லை....
எனது அண்ணன் இங்கு வந்த போதேயே உன்னை பற்றி எல்லா விஷயத்தையும் தெரிந்து கொண்டேன்.
ரிஷியும், அப்பொழுதுதான் உங்கள் காதல் விஷயத்தை எனக்கு கூறினான்....
என் மகன் சேகரின் மனைவி நீ இல்லை என்பதும் எனக்கு புரிந்தது.... ஆனால், அவன் எதற்காக உன்னை இங்கு அனுப்பினான் என்று எனக்கு தெரியவில்லை.
எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் நீயும் ரிஷியும் ராஜகுட்டியை பார்த்து கொள்வீர்கள் என்று நினைத்தேன்....
ஆனால், அது எல்லாம் இப்பொழுது பொய் ஆகிவிட்டது..... உங்கள் இருவருக்கும் உங்கள் வாழ்க்கை தான் முக்கியம் என்று இப்பொழுது புரிகிறது....
இதற்கு மேல் உங்கள் வாழ்க்கையில் நான் தலை இட விரும்பவில்லை.... என்று கூறியவர். அறையில் இருந்து வேதனையுடன் வெளியில் சென்றுவிட்டார்.
கீதாவிற்கு, தனது காதல் விஷயம் பருவதம் அம்மாவிற்கு தெரியும் என்பதை அவளால் நம்ப முடியவில்லை.
பருவதம் அம்மாள் என்னை வெறுக்க வில்லை... தன்னை மிகவும் நம்பி இருக்கிறார்...
ஆனால், நான் தான் ராஜகுட்டி யை விட்டு செல்ல நினைத்து விட்டேன்.
சேகருக்கு கொடுத்த வாக்கு எதையும் யோசிக்காமல் அவசரப்பட்டு இந்த முடிவு எடுத்து விட்டேன்... என்று தன்னையே நொந்து கொண்டாள்
பருவதம் அம்மாளை தொடர்ந்து ரிஷியும் வெளியில் சென்றான்.... திரும்பி வந்தவன், கையில் பிரெஷ் ஜூஸ் இருந்தது....
கீதாவின் ஒரு கையில் ட்ரிப்ஸ் போட்டு இருந்தது ... மறுகையில் அவள் வெட்டிக்கொண்டதால் பெரிய கட்டு போடா பட்டு இருந்தது .....
கீதா, சாய்ந்து உட்கார ரிஷி உதவி செய்தான்.... பின்னர், அவனேயே அவள் ஜூஸ் குடிக்கும் வரை அவளுக்கு ஊட்டிவிட்டான்...
ரிஷி, கீதாவிடம் ஒரு வார்த்தை கூட அவன் பேச வில்லை...
கீதாவும், எதற்கும் மறுக்க வில்லை... ரிஷி தனது பக்கத்தில் இருந்தால் போதும் என்று அவளுக்கு தோன்றியது....
இருவர் மனதிலும் பேசுவதற்கும் பல விஷயங்கள் இருந்தது....
தொடரும்
Go to Ennavale story main page
{kunena_discuss:1184}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.