(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - என்னவளே - 12 - கோமதி சிதம்பரம்

ennavale

கீதா, தனது அறையின் கதவை இழுத்து சாத்தினாள். ஆனாலும், அவளது மனது சமாதானம் ஆகவில்லை.

இதேயே, போன்று இரெண்டு முறை செய்தும் கூட ரிஷி தனது அறைக்குள் எப்படி வந்தான். என்று அவளுக்கு இன்று வரை புரியவில்லை.

அவளது அறையை நன்றாக நோட்டம் விட்டாள். அந்த அறையின் இடது புறத்தில் ஒரு பெரிய திரை போடப்பட்டு இருந்தது.

அது பிளாஸ்டிக்யால் செய்யப்பட்ட திரை . AC யும் மிதமான குளிரில் இருந்ததால் அது அசைய கூட இல்லை.

ஒருவேளை, ஜன்னல்யாக இருக்குமோ???? என்ற சந்தேகத்துடன் அந்த திரையை விலக்கினாள்.

அவள், சந்தேகப்பட்டது போலவேயே திரையின் பின்புறம் ஒரு கதவு தெரிந்தது.

ஒருவேளை, இந்த வழியாகத்தான் ரிஷி வந்து இருப்பானோ என்று கீதா யோசித்து கொண்டு இருக்கும் போதேயே அந்த கதவை பட்டென்று திறந்து கொண்டு ரிஷி வந்தான்.

ஒரு நிமிடம் கீதா பயந்து கத்தியே விட்டாள். வந்தது ரிஷி என்றாலும் இப்படி தீடிரென்று கதவை திறந்து கொண்டு வருவான் என்று அவள் நினைக்கவில்லை.

பயந்து கத்தி  கொண்டு கீதா பின்னாடி சென்றதை பார்த்த ரிஷியால்  சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஆனால் , கீதா மேலும் கத்தி விடுவாளோ என்ற பயத்தில் அவளது வாயை ரிஷி அவனது கையினால் அழுத்தமாக மூடினான்.

ஹேய்! பைத்தியமா உனக்கு என் டீ இப்படி அர்த்த ராத்திரியில் கத்துறா????? வீட்டில் இருக்குறவங்க காதில் விழ போது......

கீதா, கத்தமாட்டேன் என்பது போல கண்களால் சைகை செய்தாள். ரிஷி, கீதாக்கு மிக அருகில் இருந்ததால்  கீதாவால் அவளது கைகளை கூட அசைக்க முடியவில்லை.

ரிஷியும் , அவன் கீதாவுடன் நெருக்கமாக நிற்பதை  அப்போதுதான் உணர்ந்தான். இரவு நேர வெள்ளை உடையில் தேவதை போன்று கீதா அழகாக இருந்தாள்.

அவளை விழுங்கி விடுவதை போல ரிஷி பார்த்தான். அவனது பார்வை வீச்சை தாங்காமல் கீதா அவனிடம் இருந்து விலக முயன்றாள். 

ரிஷி, கீதாவிடம் மயங்கி நின்றது சில நொடியே...... அவனுக்கு கீதாவிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருந்தன.

கீதா சொல்ல போகும் பதிலில் தான் அவரகளது எதிர்கால வாழ்க்கையும் இருந்தது.

மெதுவாக, அவளது கையை விட்ட ரிஷி.... தலையை உலுக்கி தனது கவனத்தை மாற்றினான்.

அவன் இப்பொழுது கீதாவுடன் பேச போகும் வார்த்தைகள் அவளுக்கு வலியை ஏற்படுத்தும்.

கீதாவிடம், இருந்து உண்மையை வர வைக்க அன்பாக அவளிடம் நடந்து கொண்டால் முடியாது என்பதை அவன் உணர்ந்து இருந்தான்.

ஒரு அழ்ந்த மூச்சை உள் இழுத்தவான். கடவுளேயே, நான் பேச போகும் வார்த்தைகளை தாங்கி கொள்ளும் அளவிற்கு கீதாவிற்கு மனவலிமையை கொடு....

நான் நினைத்து வந்ததும் இன்று நிறைவேற வேண்டும். என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டான்.

தன் எதிரில் நிற்கும் கீதாவை முறைத்து பார்த்தான். 

தீடிர் என்று, ரிஷியின் கண்களில் தெரிந்த காதல் மறைந்து அவனது கோபத்தை பார்த்தாள் கீதா.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

எதுக்கு? என் ரூம் கதவை திறக்க ட்ரை பண்றா ????? அதும் இந்த டைம்லா ???? 

என்ன இவன்????என் ரூம்குள்ள இவன் வந்துட்டு??? இவன் என்னடா னா  என்னையே கேள்வி கேட்குறான்???? தன் மனதிற்குள் நினைத்தவாறு ரிஷியை கீதா பார்த்தாள்.

கேள்வி கேட்ட பதில் சொல்லணும்..... இப்படி என் முஞ்சியையே பார்த்துட்டு இருக்க கூடாது..... என்று கோபத்துடன் கீதாவை பார்த்து கத்தினான் ரிஷி  

இதற்கு மேல சும்மா இருக்க கூடாது என்று நினைத்த கீதா.... உங்க ரூம்குள்ள நான் ஏன் வர போறேன்..... 

நீங்கதான் என் ரூம்குள்ள வந்து இருக்கீங்க.... என் ரூம்ல ஒரு கதவு இருந்ததா இன்னைக்குத்தான் பார்த்தேன்.

அத திறக்க ட்ரை பண்ணேன் நீங்க வந்துட்டீங்க????  இந்த வழியா தானேயே ரெண்டு தடவை என் ரூம்க்கு வந்திங்க?????

அய்யோ என் அறிவுக்கொழுந்து எவ்ளோ சீக்கிரமா கண்டுபிடிச்சிட்டா.... என்று மனதிற்குள் சிரித்தவன் ....

ஆமா..... உன்ன கண்காணிக்க தான் என் ரூம் பக்கத்துலயே உனக்கும் ரூம் கொடுத்தேன்..... என்று தெனாவெட்டாக கூறிக்கொண்டேயே அவளது படுக்கையில் போய் உட்கார்ந்தான்.

அர்த்த ராத்திரியில் அதும் இவளது படுக்கையில் ரிஷி உட்கார்ந்து இருப்பது கீதாவிற்கு சரி என்று படவில்லை......

யாரேனும் பார்த்தாள் கண்டிப்பாக இவர்களை தப்பாக நினைத்து விடுவார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.