அருகில் இருந்த நாத்தனாரையும் பார்த்து வரவேற்கும் விதமாய் புன்னகைத்தாள்.
“அண்ணி.”
என்று அன்போடு அழைத்து அவளது கைகளைப் பற்றித் தன்னருகில் அமர்த்திக்கொண்டாள் அவள்.
“என்ன அண்ணி உங்க அண்ணியைப் பார்த்ததும் என்னை மறந்துட்டீங்களே?”
குற்றப்பத்திரிக்கை வாசித்தாள் மனோரஞ்சனி.”
“வா மனோ. உன்னை எப்படி மறக்க முடியும்?”
அவளையும் அழைத்து தனக்கு மறுபக்கத்தில் அமர்த்திக்கொண்டாள்.
எல்லோரும் அமர அவன் வண்டியை எடுத்தான்.
ஒருவேளை கண்ணாடி வழியாகப் பார்ப்பானோ?
சந்தேகத்துடன் முன்பக்கம் இருந்த கண்ணாடியைப் பார்த்தாள்.
அவனோ கடமையேக் கண்ணாய் கருத்தாய் காரோட்டுவதிலேயே முழுக்கவனத்தையும் வைத்திருந்தான்.
இடையிடையில் அவனது தங்கை கவிதாதான் “அண்ணா. அண்ணா.” என்று அவனிட
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் போது தன் மீது வைத்துப் பார்த்துப் பார்த்து எடுத்தாள்.
அந்த நேரத்தில் அவளது அழகை ரசித்துக்கொண்டிருந்தாள்.
தன்னை நினைத்து அவளுக்கு சிரிப்பாய் வந்தது.
தன்னை மணக்கப் போகும் வருங்கால மாப்பிள்ளையை நினைத்து ரசிக்க வேண்டிய தருணத்தில் அவனது தங்கையை ரசித்துக்கொண்டிருக்கிறேனே?