(Reading time: 12 - 23 minutes)

‘ஓகே. எல்லா ஏரியாவும் கவர் பண்ணிக்கோங்க. உங்களுக்கு பின்னாடி யூஸ் ஆகும். நீங்க தேவைப் பட்டா நைட் சிப்ட்டும் பார்க்கிற மாதிரி இருக்கும். வீட்டில் முன்னாடி சொல்லிடுங்க. அப்புறம் வீட்லே திட்டுவாங்கன்னு சொன்னால் எனக்குப் பிடிக்காது”

“டாக்டர் சார் , இந்த ப்ரோபெஷன்லே இது எல்லாம் சகஜம்ன்னு எல்லோருக்கும் தெரியும். சோ நீங்க டோன்ட் வொர்ரி. “ என்று கூற,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சரி. யு கேன் கோ நொவ். “ என்றவன் “ தென், தினமும் என் ஷெட்யூல் கேட்டு, என்னோட ப்ரீ டைம்லே வந்து ரிபோர்ட் பண்ணிட்டு போயிடுங்க” என்று கூறவே, அவனிடம் வேகமாக தலையாட்டிவிட்டு,

“ஆமாம். இவர் பெரிய மைசூர் மகாராஜா. சார் பிஸி டைம்லே வந்து தொந்தரவு பண்ணக் கூடாதாக்கும்” என்று புலம்பிக் கொண்டே சென்றவள்,

“ஹலோ மேடம். மைன்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா பேசிட்டு இருக்கீங்க” என, சுமித்ரா அசடு வழிய அவனைப் பார்த்து சிரித்து விட்டு வெளியேறிவிட்டாள்.

ரவணன் இரண்டு நாட்கள் மித்ராவைத் தொடர்ந்தவன், மூன்றாம் நாள், மைதிலி ஆபீஸ் வந்த சற்று நேரத்தில் வெளியே செல்லவே, இதுதான் சமயம் என்று எண்ணினான்.

நேராக மித்ராவின் அலுவலகத்திற்குள் வந்து,

“மித்ரா மேடம் பார்க்கணும்” என்றான்

“என்ன விஷயமா வந்து இருக்கீங்க? ஆபீசியல் என்றால், எங்கள் மார்க்கெட்டிங் பெர்சொன்ஸ் போய்ப் பாருங்க.”

“இல்லைங்க. பர்சனல் “

“சாரி சார். இங்கே யாரையும் பர்சனல்லா மேடம் பார்க்கிறது இல்லையே”

“இல்லை ஆபீசியல் தான். ஆனால் எனக்கு மித்ரா மேடம் தெரியும். அதான் அவங்ககிட்டே நேரடியா பேசி என்னோட நீட்ஸ் பற்றி சொல்லலாம்னு நினைச்சேன்.

“என்ன சார் குழப்பறீங்க? அப்படி எல்லாம் இதுவரை யாரும் வந்தது இல்லை இங்கே”

“இல்லை மேடம். சரவணன்னு சொல்லுங்க. அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்” என்று கூறவே, சரி என்று அரை மனதோடு அந்த ரிசெப்ஷனிஸ்ட் மித்ராவைத் தொடர்பு கொண்டு கேட்டாள்.

சரவணன் பேரைக் கேட்டு சற்று அமைதியாக இருந்தவள், பின் அவனை அனுப்பசொல்லி சொன்னாள்.

தொடரும்

Episode # 27

Episode # 29

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.