(Reading time: 12 - 23 minutes)

“சரி , சரி மூஞ்சைத் தூக்காதே. அத்தானுக்கு அக்சிடென்ட் ஆனது உனக்குத் தெரியும் தானே? அவங்களைக் கவனிச்சதில் உன்னைப் பார்க்க வரலை” என்றாள். இதைப் பேசிக் கொண்டு இருக்கும் போதே மித்ராவின் பின் வந்து நின்று இருந்தான் ஷ்யாம்.

“நீ கேட்க வரது தெரியுது. உனக்கு உன் அத்தான் தான் முக்கியம். நான் இல்லை அப்படின்னு நீ கேட்கற? என்ன செய்ய? எனக்கு அத்தானுக்கு ஒன்னுனா பயமா இருக்கே. அதான் உன்னைக் கூட மறந்துட்டு ஓடிப் போயிட்டேன்”

என்னவோ வின்னி கோபமாக இருப்பது போலவும், இவள் சமாதானப் படுத்துவது போலவும் பேசிக் கொண்டு இருக்கவே, ஷ்யாமிற்கு சிரிப்பு வந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல்,

“ஹேய். மொசக் குட்டி” என்று மித்ராவை அழைக்க,

“என்னது மொசக் குட்டியா? அப்படின்னா என்ன? என்று கேட்டாள்.

“ஹ்ம்ம்.. மொசக் குட்டின்னா, முயல் குட்டின்னு அர்த்தம்”

“ஐ. அழகா இருக்கே. நான் முயல் குட்டியா?

“ஆமாம்.. நீதான் முயல் குட்டி. உன்னோட கண்ணு ரெண்டும் துரு துறுன்னு சுத்துது. பார்க்கவும் காது எல்லாம் நீளமா இருக்கா. அதான் முயல் குட்டின்னு சொன்னேன்”

“ம். என் காது சரியா தான் இருக்கு. நீளமா எல்லாம் இல்லை” என்று மூஞ்சை சுருக்கிக் கொண்டு சொல்லவும்

“சரி. சரி. எல்லாம் சரியா தான் இருக்கு” என்று குழைந்த குரலில் சொன்னனவன், அவள் உணரும் முன்

“அது என்ன? உன் வின்னி கூட இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்க?

“மச்.. அதுக்கு கோபம். இத்தனை நாள் நான் அவனைக் கவனிக்கலைன்னு”

“அஹான்.. அது வந்து உன்கிட்ட சொல்லுச்சா? உன்னோட டூன்னு ?

“பாருங்க.. இப்படி எல்லாம் கிண்டல் பண்ணினால், நான் உங்க கூட டூ சொல்லிடுவேன்”

“ஆத்தி. என் அடிமடியிலேயே கை வைக்கிறியே. ஏற்கனவே நண்பன்னு பேர்லே இருக்கிற வில்லன் ஆப்பு வைச்சு அனுப்பிட்டான். நீ வேறே அதுக்கு எண்ணெய் ஊத்தி டைட் பண்ணிடாதே”

“அது . அந்த பயம் இருக்கட்டும்” என்று கெத்தாகக் கூறியவள்,

“ஆமாம். சேகர் அண்ணா என்ன சொன்னாங்க?

இப்போது ஷ்யாமிற்குப் புரை ஏறியது.

“அது நான் அவன்கிட்டே ஒன்னு கேட்டேன். அதுக்கு தடா போட்டுடான். அதத் தான் சொன்னேன்”

“என்ன விஷயம்?

அவளை ஏற இறங்கப் பார்த்தவன் “இபோதைக்கு அதைத் தெரிஞ்சு எந்த யூசும் இல்லை. அதனால் அப்புறமா சொல்றேன்” என்று கூறிவிட்டு,

“சரி, சரி வா. படுக்கலாம்” என்று கையோடு அழைத்துச் சென்றான்.

அடிபட்ட இடத்தில் வெயிட் கொடுக்கக் கூடாது என்பதால் அவனின் இடது புறம் படுத்து இருந்தவளை, நன்றாக அணைத்துப் படுத்தான் ஷ்யாம்.

றுநாளில் இருந்து ஷ்யாம் தன் அலுவலகத்திற்கு செல்ல, மித்ரா மைதிலியின் அலுவலகத்திற்கு சென்றாள்.

சரவணன் மித்ராவை எப்படி தனியாக சந்திப்பது என்று யோசனை செய்து கொண்டு இருந்தவன், மித்ரா, மைதிலியோடு அலுவலகம் செல்வதைப் பார்த்து, அவளைப் பற்றித் தெரிந்து கொண்டான்.

அன்று முழுதும் மைதிலியோடு மட்டுமே அவள் சென்று வருகிறாள் என்று கண்டு கொண்டவன், அவள் கண்ணில்லேயே படவில்லை.

அன்று மாலை ஷ்யாம் , மித்ராவை அழைத்துக் கொண்டு மீண்டும் தன் நண்பன் ஹாஸ்பிடல் சென்றவன், ஒரு ஹெல்த் செக் அப் என்று சொல்லி, இருவரின் ப்ளட் டெஸ்ட் சாம்பிள் கொடுத்து விட்டு வந்தார்கள்.

அன்றிலிருந்து சுமித்ராவும் மூன்று மாதத்திற்கு அந்த ஹாஸ்பிடலில் இன்டர்ன்ஷிப் சேர்ந்து இருந்தாள்.

முதல் நாள் தன் அண்ணனோடு வந்தவள், மறுநாள் காலை ஒன்பது மணிக்கு எல்லாம் சேகரைக் காண வந்து இருந்தாள்.

அவளைக் கண்டவுடன் பார்த்து பேசி அட்மின் பிரிவிற்கு அனுப்பி வைத்தவன், மாலையில் போகும்போது தன்னை சந்திக்க சொன்னான்.

அவள் மாலையில் வரும்போது

“ஹாய் டாக்டர்” என்றாள். ஹாஸ்பிடல் என்பதால் சார் என்றபழைப்பதை விடுத்து, டாக்டர் என்றே அழைத்தாள்.

“ஹாய் சுமித்ரா. ஹொவ் வாஸ் யுவர் பர்ஸ்ட் டே?

“குட் டாக்டர். இப்போதைக்கு என்னை ஜெனரல் மெடிசின்ல தான் போட்ருக்காங்க. அங்கே டாக்டர்கு அசிஸ்ட் பண்றேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.