(Reading time: 15 - 30 minutes)

அதிகாலையில் சூடு நன்றாகவே குறைந்திருக்க அந்த நிம்மதியும் பயணக் களைப்புமாய் சேர்ந்து திவ்யாந்தை சற்றே கண்ணயர வைத்தது.

லேசாய் விழிப்பு வந்தவளுக்கு தன்னவனின் வாசம் நாசியை தொட்ட அடுத்த நொடி சிறு அசைவுகூட இல்லாமல் அப்படியே படுத்துக் கொண்டாள்.

எங்கே தன்னிடமிருந்து பொம்மையை பறித்து விடுவார்களோ என்பது போன்ற குழந்தையின் பாவம் ஒருபுறம் எனில் தன் சிறு நெளிவும் தன்னவனின் தூக்கத்தை கலைத்துவிடும் என்ற பயத்தினாலேயே துளியும் அசையாது கண்மூடி அவன் அருகாமையை உணர்ந்து உணர்ந்து மனம் தேறினாள்.

ஏழுமணியளவில் கண்விழித்தவன் அவள் நெற்றியையும் கழுத்தையும் தொட்டுப் பார்த்து காய்ச்சல் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான்.

“திவா..”

“கண்ணம்மா..எப்படிடா இருக்க ஒரு வாரத்துக்குள்ள என்ன வேலை பண்ணி வச்சுருக்க பாத்து பயந்துட்டேன் டா..”

“சாரி திவா..எவ்வளவோ முயற்சி பண்ணியும் என்னால மைண்டை மாத்தவே முடில மொத்தமும் உங்க நியாபகம் தான்.அதை உங்ககிட்டேயும் காட்டிக்காம மனசுலயே வச்சுருந்தது காய்ச்சல்ல கொண்டுபோய் விட்டுருச்சு போல..இனி இப்படி பண்ண மாட்டேன் திவா..ப்ராமிஸ்..”

“கண்ணம்மா இனி நானும் எங்கேயும் உன்னை விட்டு போறதாயில்ல..சரி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு நா போய் சிந்தாம்மாகிட்ட காபி வாங்கி கொண்டு வரேன்..”

“ரெஸ்டா அதெல்லாம் ஒண்ணும் வேணாம் ஐ அம் பெர்பெக்ட்லி ஆல் ரைட்..நீங்க தான் டயர்டா தெரியுறீங்க ஒழுங்கா நா தர்ற காபியை சாப்ட்டு தூங்குங்க..”,என்றவள் எழுந்து நகர நினைத்த நொடி அவளை தன்புறம் இழுத்து நெற்றியில் அழுந்த இதழ் பதித்தவன்,”மிஸ்ட் யூ சோ மச் கண்ணம்மா..”,என்று கூறி அப்படியே படுத்து கொண்டான்.

சிவந்திருந்த அவன் கண்களும் சோர்வான முகமுமே இரவு அவன் தூங்காததை தெரிவிக்க வேகமாய் அவனுக்கான காபியை வாங்கச் சென்றாள். அதை அவனுக்கு கொடுத்து தூங்க வைத்த பின்னே தனக்கான தேவையை கவனிக்கச் சென்றவளை சிந்தாம்மா புன்னகையோடு பார்த்திருக்க சிறு பிள்ளையாய் தலையை சொரிந்து கொண்டு நின்றாள்..

“நல்ல பிள்ளைங்க ஒரு வாரத்துக்கு நீங்க படுத்துற அட்டகாசம் தாங்க முடில..இருந்தாலும் இதெல்லாம் பாத்து கண்ணும் மனசும் நிறைஞ்சுபோய் இருக்கேன்.நூறு வருஷம் நல்லாயிருக்கணும் ரெண்டுபேரும்..”

இத்தனையையும் சிந்தாம்மா இப்போது நினைப்பதற்கு காரணம் நேற்று இரவில் இருந்து விடாத காய்ச்சலில் தவிக்கும் வெண்பாவினால் தான்.திவ்யாந்த் அவளுக்கு கொடுத்திருந்த பதினைந்து நாட்கள் முடிவடைய இன்னும் இரு தினங்களேயிருக்க அந்த பயத்தில் தான் வெண்பாவின் இன்றைய நிலைமை இது.

காலை பத்து மணி வரையுமே நிலைமை மாறாமல் இருக்க அதற்கு மேல் சமாளிக்க முடியாமல் திவ்யாந்தை அழைத்திருந்தார்.

“சொல்லுங்க சிந்தாம்மா..என்ன காலையிலேயே கூப்டுருகீங்க?”

“தம்பி வெண்பாக்கு நைட்லேயிருந்து ஒரே ஜுரம்..கொஞ்சம் கூட குறையலப்பா..நீ கொஞ்சம் சீக்கிரம் வர்றியா?”

“இவளுக்கு இதுவே வேலையா போச்சு..தானும் நிம்மதியை தொலைச்சு என்னையும் உயிரோட கொன்னுட்டு இருக்கா..இதுக்கு இன்னையோட ஒரு முடிவு கட்றேன்..நீங்க பயப்படாதீங்கம்மா..நா கிளம்பிட்டேன்.”,என்றவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

வேகமாய் உள்ளே நுழைந்தவன் சிந்தாம்மாவிடம் விஷயத்தை கேட்டுவிட்டு வேகமாய் அவளறைக்குள் சென்று பார்க்க கண்கள் சொருகி கிடந்தவளை கண்ட  ஒருநொடி அதிர்ந்து தான் போனான்.

அவசரமாய் அவளை கைகளில் ஏந்தியவன் காரில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த சிந்தாம்மா மடியில் படுக்க வைத்தவாறு வீட்டை பூட்டிவிட்டு காரை கிளப்பினான்.

மருத்துவமனையை அடைந்து அவளை கைகளில் ஏந்தியவாறே உள்ளே சென்றவனை கண்டு பதறியவர்களாய் அங்கிருந்த நர்ஸ் மருத்துவர் அறைக்குச் செல்ல அனுமதித்தனர்.

பரிசோதித்த மருத்துவரோ,”மிஸ்டர் திவா ரொம்ப வீக்கா இருக்காங்க டெம்பரேச்சர் குறையவே இல்லையா..இப்போதைக்கு இன்ஜெக்ஷன் போட்றேன்.அட்மிட் பண்ணுங்க கொஞ்சம் ட்ரிப்ஸ் ஏறட்டும் அதுக்கப்பறமும் அப்படியே இருந்தா நாம சில டெஸ்ட் எடுக்கலாம்..நத்திங் டு வொரி..”,என தோள் தட்டிச் சென்றார்.

அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் ட்ரிப்ஸ் ஏற ஆரம்பித்திருக்க மெதுவாய் அவளருகில் அமர்ந்தவன் அவள் கையை எடுத்து தனக்குள் வைத்துக் கொண்டான்.

மருந்தின் வீரியத்தில் நல்ல உறக்கத்திற்குச் சென்றவள் மெதுவாய் ஏதோ பேச ஆரம்பித்திருந்தாள்.

“கண்ணம்மா”

“திவா..எ..ன்..ன.. வி..ட்..டு..போ..கா..த..”

“நா உன்னைவிட்டு போனா என் உயிரை நா விடுறதுக்கு சமம் டா..உனக்கு ஏன் புரில..ஏன் உன்னை நீயே கஷ்டப்படுத்திக்குற கண்ணம்மா..நா வாழ்றதே உனக்காக தான் டா..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.