(Reading time: 15 - 30 minutes)

ஏனோ அந்தநொடி வெண்பாவின் மனம் ஒரு நொடி சுணங்கியது நிஜம்.இருந்தும் எதையும் காட்டிக் கொள்ளாமல் திவாவோடு கோவிலுக்கு கிளம்ப அவளின் சிறு கண்ணசைவை கூட கணிப்பவனுக்கு அவளின் மனம் புரியாதா என்ன?

ஆதரவாய் அவள் கைப்பற்றியவாறே காரை செல்லுத்த ஆரம்பித்தவன்,”என்ன யோசனை கண்ணம்மா?”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல திவா.சும்மா ஏதோ யோசிச்சுட்டு..”

“அதான் என்னனு கேக்குறேன்டா..”

“இல்ல சிந்தாம்மா சொன்ன விஷயம்தான்..குழந்தை..”

“கண்ணம்மா இப்போ தான் ஒரு வருஷமே ஆகியிருக்கு அதுக்குள்ள என்ன இவ்ளோ கவலைபடுற..வர்றப்போ வரட்டும் டா..”

“கவலைனு இல்லை..ஒரு மாதிரி என்ன சொல்றது..ஒன் இயர் தான் ஆகுது ஆனாலும் நாம இப்போ குழந்தை வேண்டாம்னு நினைக்கலையே திவா..அதான்..ஒரு வேளை ப்ராப்ளம் எதாவது..”

“கண்ணம்மா..”

“இல்ல திவா இந்த காலத்துல இதெல்லாம் சாதாரணமா வர பிரச்சனை ஆய்டுச்சே..புட் ஹேப்பிட்ஸ் வொர்க் எது வேணாலும் ரீசனா இருக்கலாம் இல்லையா..”

“பரவால்லையே டாக்டர் பொண்டாட்டினு ப்ரூவ் பண்றியே...நீ சொல்றதெல்லாம் சரி தான் பட் நம்ம விஷயத்துல அப்படி ரொம்ப எல்லாம் யோசிக்காத..எல்லாம் நல்லதுதான் நடக்கும்.இன்னைக்கு டேவை என்ஜாய் பண்ணு..”,என்றவன் பேச்சை நிறுத்தி அவளைப் பார்த்தான்.

அவனின் பேச்சு அவள் காதை எட்டியதே தவிர மனதை தொட்டதாய் தெரியவில்லை.காரை ஓரமாய் நிறுத்தியவன்,”கண்ணம்மா இப்போ என்ன பண்ணணும்னு நினைக்குற தயங்காம சொல்லு?”

“இல்ல திவா..வந்து ஏன் மெடிக்கல் செக்கப் பண்ணி பாக்க கூடாது..”

திவாவிற்கும் அது ஒன்றும் தப்பான விஷயமாய் தெரியவில்லை தான் இருந்தும் தன்னவளை அப்படி ஒருநிலைக்கு கொண்டு செல்ல மனம் விரும்வில்லை.இருந்தும் அவளது விருப்பத்தை மதித்துதான் ஆக வேண்டும் என்றெண்ணியவன்,”சரி டா நாளைக்கு நாம போலாம் ஹேப்பியா..இனியாவது கொஞ்சம் சிரிக்கலாமே?”

“தேங்க் யூ திவா..”,என்றவள் கைப்பற்றி தோள் சாய்ந்து கொண்டாள்.அதன் பின்னான அன்றைய தினம் அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது வெண்பாவிற்கு.கோவில் ஹோட்டல் ஷாப்பிங் என மொத்த நாளையும் அவளோடு அவளுக்காக ஒதுக்கியவனின் மேல் காதல் கரை காணாமல் தான் சுழன்று கொண்டு இருந்தது.

ஒரு வருடம்  சண்டையே இல்லாமல் அவ்வளவு ஏன் ஒரு வார்த்தை அவன் அதிர்ந்துகூட பேசியதில்லை அவளிடம்.இப்படியும் வாழ்க்கை இருக்குமா.இப்படியும் ஒருவனால் இருக்க முடியுமா..இருந்தான் அவளின் திவ்யாந்த்.

மறுநாள் அவனின் மருத்துவமனையிலேயே பரிசோதனைக்காய் வந்திருந்தனர்.மருத்துவரிடம் ஏற்கனவே அவன் பேசியிருக்க அவர்களை உள்ளே அழைத்த மருத்துவர் பொதுவான நல விசாரிப்புகளுக்குப் பின்,

“மிஸஸ் வெண்பா நீங்க சிஸ்டரோட போங்க உங்களை கைட் பண்ணுவாங்க..திவா ஹோப் யூ டோண்ட் நீட் எனி அசிஸ்டன்ஸ்”,என்றவர் சிரிக்க புன்னகையோடே எழுந்தவனை விழி விரிய பார்த்திருந்தாள் வெண்பா.

“திவா நீங்க ஏன்???”

“என்ன கண்ணம்மா நீதான டெஸ்ட் பண்ணிக்கலாம்னு சொன்ன?”

“ஆனா உங்களுக்கு எதுக்கு?”

“இது என்ன கேள்வி ப்ராப்ளம் ரெண்டு பேர்ல யாருக்கு வேணா இருக்கலாம் தான?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல நா என் திருப்திக்காக தான்..”,அவளால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.தன்னவனை இப்படி ஒரு சூழலில் ஏற்க மனம் முரண்டு பிடித்தது.

“கண்ணம்மா எதையும் குழப்பிக்காம போ..”,என்று தோள்தட்டி அனுப்பி வைத்தவன் தானும் தனக்கான பரிசோதனைக்காகச் சென்றான்.

அனைத்தையும் முடித்து காரில் அமர்ந்தவளுக்கு மனம் இன்னுமே நெருடலாய் இருந்தது.கொஞ்சமும் வருத்தமின்றி கவலையின்றி அவன் வேலையிடத்திலேயே இந்த பரிசோதனையை அவனும் செய்து கொண்டது ஏனோ வருத்தமாகவே இருந்தது.

“கண்ணம்மா இதெல்லாம் இங்க சாதாரணம்..என்ன நடந்தாலும் நம்ம சீக்ரெட்ஸ் வெளில போகாது கண்டிப்பா..சோ ரிலாக்ஸ்..”

“திவா ஒரு வேளை ஏதாவது ப்ராப்ளம்னு ரிசல்ட் வந்தா என்ன வெறுத்துடுவீங்களா?”

“அதே கேள்வியை நானும் கேட்கலாம் தான?”அத்தனை பொறுமையாய் அவனின் எதிர்கேள்வி.

தன்புறமாய் இழுத்து ஒற்றை அழுத்தமான அந்த அணைப்பு அத்தனை ஆறுதலைக் கொடுத்திருந்தது அவளுக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.