(Reading time: 15 - 30 minutes)

என்ன புரிந்ததோ கண்களின் விளிம்பில் கண்ணீர் வழிந்தது அவளிடம்..”தி..வா..என்ன வெ..று..த்து..டுவி..யா..எ..ன்ன..விட்..டு..போகா..த..”

“கண்ணம்மா..”,என்றவன் அவள்மேல் சாய்ந்துகொள்ள அவன் விழியும் தானாய் கண்ணீரில் கரைய ஆரம்பித்திருந்தது.

மாலை வேளையில் சற்றே காய்ச்சல் குறைந்திருக்க லேசாய் கண் விழித்தவளுக்கு எங்கிருக்கிறோம் என்பதே குழப்பமாய் இருக்க ட்ரிப்ஸ் ஏறிய கையை அசைக்க முடியாமல் வலியில் முகம் சுளிக்கத் திரும்பியவளின் மறுகையை பற்றியவாறு அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான் திவ்யாந்த்.

“கண்ணம்மா..”

“திவா..”

“ஒண்ணுமில்ல டா சீக்கிமே சரி ஆய்டும்..ஏன் உன்னை நீயே இப்படி கஷ்டப்படுத்திக்குற..”

“என்னவிட்டு போக போறியா திவா..”

“அந்த தைரியம் எனக்கு இருக்குனு நினைக்குறியா கண்ணம்மா..”

“நீ சொன்னியே..”

“நீ என்னோட வந்துரணும்னு கூடதான் சொன்னேன் அதை ஏன் யோசிக்கல நீ?”

“மனசாட்சி இடம் கொடுக்க மாட்டேங்குது திவா..உன்னையும் சிந்தாம்மாவையும் அவ்ளோ படுத்திட்டு மறுபடியும் அதே இடத்துல அதே வாழ்க்கைக்கு என்ன நினைச்சு எனக்கே அசிங்கமா இருக்கு திவா..”

“கண்ணம்மா..நீ என் தேவதை டா இன்னோரு தடவை இப்டி பேசாத..நாளைக்கு நாம நம்ம வீட்டுக்கு போறோம் அவ்ளோ தான் புரியுதா..”

“என்னை மன்னிச்சுட்டியா திவா??”

“என்னை நானே எதுக்கு மன்னிக்கனும் கண்ணம்மா..நானும் நீயும் வேற வேறனு நா எப்பவுமே நினைச்சதில்ல..”

“இந்த காதல் தான் என்னை குற்றவுணர்ச்சியை மறக்க விடாம பண்ணுது திவா..”

“போதும்டா நிறைய பேசியாச்சு நிறைய வருத்தப்பட்டாச்சு நிறைய கண்ணீர் விட்டாச்சு கொஞ்சம் தூங்குடா நா கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போய்ட்டு திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு வரேன்.சிந்தாம்மாவையும் அழைச்சுட்டு போறேன் நீ ரெஸ்ட் எடுடா..”

அவள் கண்ணயரும் வரை அவளருகிலேயே இருந்தவன் அதன்பின் வெண்பாவின் வீட்டிற்கு சிந்தாம்மாவோடு சென்று அனைத்தையும் பேக் செய்ய ஆரம்பித்தான்.

அவளறைக்குள் வந்தவன் அனைத்தையும் எடுத்து வைக்கத் தொடங்க அலமாரியில் இருந்து ஒரு புடவையை எடுத்தவன் அதிலிருந்து விழியகற்றாமல் கைகளால் வருடிக் கொண்டிருந்தான்.அவனது முதல் திருமண நாளுக்காக அவனது கண்ணம்மாவிற்கு அவனே பார்த்து பார்த்து வாங்கியிருந்தான்.அந்த புடவையும் அதன் பின்னான வாழ்க்கையின் முதல்  சலனமும் அவன் முன் நிழலாடியது.

ன்று,

அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா என்ற சிந்தனை தான் வந்தது திவாவிற்கு.ஏனெனில் அந்த 365 நாட்களும் அவன் வாழ்வின் சொம்ம சிப்பனமாக இருந்தது.காதல் அன்பு இதை தவிர யோசிப்பதற்கு ஒன்றுமே இருந்திருக்கவில்லை.

தன்னவளுக்காக பரிசு வாங்க புடவை கடைக்குச் சென்றவன் பட்டுப்புடவை செக்ஷனில் பார்வையை சுழற்றிக் கொண்டிருந்தான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த புடவையை கையில் எடுத்திருந்தான்.அழகிய மஞ்சள் வண்ணப்பட்டு தங்க சரிகையோடு பார்த்தவுடன் பிடித்துவிட்டது அவனுக்கு.

அதுமட்டுமில்லாமல் வெண்பாவிற்கும் மஞ்சள் என்றால் விருப்பம் என்பதால் மறு யோசனையின்றி அதை வாங்கிவிட்டிருந்தான்.

மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்தவள் திவாவிற்கான காபியோடு வர அதை அவன் கையில் கொடுத்துவிட்டு ஹாப்பி அர்னிவர்சரி திவா..என்றாள்.

“இன்னும் நிறைய நிறைய வருஷம் வேணும் கண்ணம்மா..உன் காதலை உன்னை எனக்கே எனக்காக பத்திரமா வச்சுக்கணும்.”

என்றவனின் நெற்றியில் இதழ் பதித்து எழுந்தவள் அலமாரியை திறந்து ஒருபெட்டியை எடுத்துக் கொண்டு வந்தாள்.

இன்னைக்கு இந்த ட்ரெஸ் தான் போட்டுக்கணும் என்று அவனிடம் நீட்ட திறந்து பார்த்தவனின் கண்கள் விரிந்தது.அழகான லெமன் எல்லோ நிற ஷர்ட்டும் ப்ளாக் பார்மல்ஸும் இருந்தது.

“என்ன திவா பிடிச்சுருக்கா?”

“ரொம்பவே டா..ஆனா அதுக்கு முக்கிய காரணம் என்றவன் தன் பரிசை எடுத்துக் கொடுக்க அதுவும் மஞ்சள் நிறம் என்றதை பார்த்தவளுக்கு அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது.

“ஹே என்ன ஒரு கோஇன்சிடென்ஸ் இல்ல..லவ் யூ சோ மச்”,என்றவள் சலுகையாய் சாய்ந்து கொண்டாள்.

இருவருமாய் புது உடை உடுத்தி சிந்தாம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கி எழ,”அடுத்த வருஷம் மூணு பேரா கல்யாண நாளை கொண்டாடணும்.சீக்கிரமே நல்ல செய்தி சொல்லு கண்ணு”,என அவள் முகத்தை தழுவிச் சென்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.