Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes

”டேய் யாருடா நீ என்னடா வேணும் உனக்கு வாடா நீயும் ஸ்டேஷனுக்கு” என அவன் கையை பிடிக்கவும் யாமினி தடுத்தாள்

”சார் நீங்க பண்றது தப்பு நாங்க டூருக்குதான் வந்திருக்கோம் இவர் என்னோட ஹஸ்பென்ட் சார் எங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சி சார் நாங்க ஹனிமூன் வந்திருக்கோம்” என்றாள்

”கல்யாணமா எங்கம்மா உன் தாலியை காட்டு” என இன்ஸ்பெக்டர் சொல்லவும் உடனே அவள் நேத்ரன் தன்னிடம் கட்ட வந்த தாலியை அவனிடம் இருந்து பிடுங்கியவள் பத்திரமாக தன் கைபையில் வைத்திருக்க அதை எடுத்துக் காட்டினாள்

”இதோ சார் இங்க இருக்கு”

”அதை ஏன் பையில வைச்சிருக்கனும் கழுத்தில தானே மாட்டியிருக்கனும்”

”சார் கழுத்திலதான் சார் இருந்திச்சி அவர்தான் குத்துதுன்னு கழட்டிட்டாரு சார் ப்ராமிஸ் சார்” என அவள் சொல்லவும் இன்ஸ்பெக்டருக்கு பெருத்த ஏமாற்றமாகி ஏட்டிடம் பேசினார்

”என்னய்யா இது பிகர் சூப்பரா இருக்கு கூட்டிட்டு போலாம்னு பார்த்தா தாலியை காட்டறா அந்த கம்பெனி எம்டியும் உண்மையை சொல்றான் என்னய்யா செய்றது இப்ப”

”சார் எனக்கு சந்தேகமா இருக்கு சார், டூர் வந்ததா சொல்றா இப்ப ஹனிமூன்னு சொல்றாளே சார்”

“இப்ப என்ன செய்றது?”

“தாலியிருக்குல்ல அவனை அந்த பொண்ணு கழுத்தில கட்டச் சொல்லுங்க கட்டிட்டா போயிடலாம் கட்டலைன்னா இவளை இழுத்துட்டு போயிடலாம்” என சொல்லவும் இன்னொரு போலீசும் அதை ஒப்புக்கொள்ள இன்ஸ்பெக்டரும் அவளிடம் வந்து

”இதப்பாரு நீ சொல்றத எங்களால நம்ப முடியாது முதல்ல என்னடான்னா கம்பெனி டூர்ன்னு சொன்ன இப்ப ஹனிமூன்ங்கற என்ன எங்களை ஏமாத்த பார்க்கறியா”

“சார் இல்லை சார் கம்பெனி டூர்தான் சார் அப்படியே ஹனிமூன் கொண்டாடலாம்னு செலவு மிச்சம் பண்ண இப்படி வந்தோம் சார்”

“எதுக்கு சிங்கிள் ரூம் புக் பண்ணியிருக்க”

”சார் வேற ரூம் கிடைக்கலை சார் அதான் அவசரத்துக்கு இப்படி”

”நீ சொல்றது நம்பற மாதிரியில்லையே ஏன் இவன் பேசமாட்டானா“

”சார் அவருக்கு பேச்சு வராது சார் அதான் இங்கிருந்து நேரா கேரளாவுக்கு போய் அங்க சிகிச்சை செய்யலாம்னு”

“நீ  சொல்றதெல்லாம் ஒரே பொய்யாவே தெரியுதே”

”இல்லை சார் நான் உண்மையைதான் சொல்றேன். இவரோட சொந்தக்காரங்க கூட இதே ஓட்டல்லதான் சார் இருக்காங்க அவங்களை வேணா கேட்டுப்பாருங்க சார்”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”இல்லை நீ எங்களை ஏமாத்தற சரி இந்த தாலியை அவனை உன் கழுத்தில கட்ட சொல்லு அவன் கட்டிட்டா சரி இல்லை ஸ்டேஷனுக்கு நட” என சொல்லவும் யாமினிக்கு திக்கென்றது

”சார் என்ன சார் இவ்ளோ சொல்லியும் எங்களை நீங்க நம்ப மாட்டேங்கறீங்களே”

“நீதானே சொன்ன அவன் உன் புருஷன்னு அவன்தானே கழட்டி வைச்சான் இப்ப கட்டமாட்டானாமா” என சொல்லிவிட்டு அவளை ஒரு மாதிரியாக பார்த்து சிரித்துக்கொண்டே

”ஏய் இதப்பாரு பொய்யா சொல்ற நீ எனக்கு தெரியும்டி உன்னை மாதிரி நான் எத்தனை பேரை பார்த்திருக்கேன்  வா ஜீப்ல ஏறு” என அவள் கையை பிடித்தான் ஒரு ஏட்டு உடனே ஆதி அவனை தடுத்துவிட்டு இன்ஸ்பெக்டரிடம் இருந்த தாலியை வாங்கி சடாரென யாமினி கழுத்தில் கட்டிவிட்டு அவளை அணைத்துக் கொண்டு இன்ஸ்பெக்டரை முறைத்தான்.

அவனது உருவம் ப்ளஸ் முறைப்பை பார்த்து பயந்த ஏட்டு, போலீசுகளும் இன்ஸ்பெக்டரிடம்

”சார் வேணாம் சார் இவன் ஒருத்தனே 3 பேரை அடிப்பான் போலிருக்கு வாங்க போலாம்” என

சொல்லவும் அவரும் அவளிடம்

”சரி சரி ஒழுங்கா இருங்க கதவை சாத்திக்க” என சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட ஆதி அறைக் கதவை சாத்திவிட்டு அவள் முன் வந்து நின்றான். அவளோ இன்னும் திக்பிரமையில் இருக்கவே அவளது முகத்தை தன் கைகளால் தூக்கிப் பார்த்தான். அவள் பயந்து போய் இருந்தாள். அந்த அறையில் இருந்த தண்ணீரை கொண்டு வந்து அவளிடம் தர இருந்த பயத்தில் தண்ணீரை மொத்தமாக குடித்துவிட்டு அவனிடம் நீட்டி மூச்சு வாங்கினாள்.

அவளை நிதானமாக பார்த்துவிட்டு தான் கட்டிய தாலியின் மீது கைவைத்து அதை கழட்ட நினைக்க கெட்டியாக அவன் கையை பிடித்தாள் யாமினி

”ஏய் என்ன செய்ற நீ”

அவன் புரியாமல் அவளை பார்த்துவிட்டு தாலியை கழட்ட முனைய

”ஏய் விடு என்ன நினைச்சிட்டு இருக்க நினைச்சா தாலி கட்டுவ நினைச்சா கழட்டுவியா விடு தூரம் போ” என விரட்டவும் அவன் யோசனையுடன் அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு சுவர் ஓரமாக சென்று நின்றுகொண்டான். யாமினியோ அவனை முறைத்துவிட்டு தன் தாலியை எடுத்து பார்த்துவிட்டு கெட்டியாக அதை பிடித்துக்கொண்டு கட்டிலில் படுத்து போர்வையை இழுத்து மூடிக்கொண்டு உறங்கலானாள்.

5 நிமிடம் கழித்து அவள் அருகில் வந்தவன் தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பாமல் போர்வையை விலக்கிவிட்டு அவன் கட்டியை தாலியை மெதுவாக கழட்டலானான். அந்த அசைவில் கண் திறந்தவள் அவனை தள்ளிவிட்டு எழுந்து அமர்ந்தாள். தாலியையும் அவனையும் பார்த்தவள் கோபத்தில் அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டாள். அது அவனை துளியளவும் பாதிக்கவில்லை அவளையே சந்தேகமாக பார்த்தான்.

எனக்கு புரியுது நீ என்னை காப்பாத்த தான் இப்படி தாலி கட்டின சரி அதுக்காக இப்படி செய்யறதா அவசரத்தில கட்டினியோ என்னை காப்பாத்த கட்டினியோ எப்படியோ தாலி கட்டிட்டல்ல விடு நான் உன்னை தொல்லை பண்ண மாட்டேன். காலையில நான் சென்னைக்கு போயிடறேன்” என சொல்லவும் அவன் யோசனையுடன் அவளை படுக்க வைத்துவிட்டு போர்வை கொண்டு போர்த்தியவன் மீண்டும் தரையில் படுத்து உறங்கலானான்.

யாமினிக்கோ இன்று நடந்த விசயங்களால் துளி கூட தூக்கம் இல்லாமல் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருந்தாள். அந்த தாலி வேறு அவள் நெஞ்சை அழுத்தமாக குத்திக்கொண்டிருக்க அவளுக்கு என்ன செய்வது என தெரியாமல் உறங்காமலே விடியலை எதிர்நோக்கினாள்.

முறையற்ற இத்திருமணத்தினால் யாமினி மற்றும் ஆதியின் எதிர்காலம் என்னவாகும்? ஆதியின் திருட்டு பழியை நீக்க யாமினி உதவுவாளா?? அல்லது ஆதியை விட்டு விலகுவாளா???

தொடரும்...

Episode # 02

Go to En vazhvu unnodu thaan story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகாsasi 2018-11-07 08:41
Quoting ராணி:
nice starting :GL:

நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகாராணி 2018-11-07 08:39
nice starting :GL:
Reply | Reply with quote | Quote
+1 # AadhiPriyadharsini 2018-11-07 00:44
Aadhiga Mela thirutu paliya Adhu enaku Puriyala. But nalla iruku aarambam. Aadhiya yamini pesa vechuduva future LA solla mudiyadhu romantic hero VA marinalum aachiriya padaradhuku illa. Enaku ennavo aadhiya vittu yamini Chennai pomata nu thonudhu. Aadhiya adha pola Andha ponnunga torture pandradhu Porukama sandaiku poga appadiye kathai move aagum nu thonudhu. Pakalam. But nice starting sasireka...
Reply | Reply with quote | Quote
# RE: Aadhisasi 2018-11-07 08:37
Quoting Priyadharsini:
Aadhiga Mela thirutu paliya Adhu enaku Puriyala. But nalla iruku aarambam. Aadhiya yamini pesa vechuduva future LA solla mudiyadhu romantic hero VA marinalum aachiriya padaradhuku illa. Enaku ennavo aadhiya vittu yamini Chennai pomata nu thonudhu. Aadhiya adha pola Andha ponnunga torture pandradhu Porukama sandaiku poga appadiye kathai move aagum nu thonudhu. Pakalam. But nice starting sasireka...

நன்றி Priyadharsini தொடர்ந்து படித்து கதைக்கும் கதையின் கதாபாத்திரங்களுக்கும் ஆதரவு அளியுங்கள்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகாsasi 2018-11-05 22:00
நன்றி சில்சி இந்த கதையின் மூலம் எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தமைக்கு மிகவும் நன்றி தங்களுக்கு என்னுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சில்சி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகாராஜேந்திரன் 2018-11-05 15:55
கதை போகும் விதம் அருமை யாமினியின் திடீர் திருமணத்தால் என்னென்ன பிரச்சனைகள் இருவீட்டிலும் நடக்கும் என தெரிந்துக் கொள்ள ஆவலாக உள்ளது ஆதி பாவம்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகாsasi 2018-11-05 21:56
Quoting ராஜேந்திரன்:
கதை போகும் விதம் அருமை யாமினியின் திடீர் திருமணத்தால் என்னென்ன பிரச்சனைகள் இருவீட்டிலும் நடக்கும் என தெரிந்துக் கொள்ள ஆவலாக உள்ளது ஆதி பாவம்

:cool: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகாBujji 2018-11-05 15:53
aadhi nalavana kettavana? heroina kapatharenu thaali kattitane kadasi varaikum vechi kapathuvanan :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகாsasi 2018-11-05 21:57
Quoting Bujji:
aadhi nalavana kettavana? heroina kapatharenu thaali kattitane kadasi varaikum vechi kapathuvanan :Q:

:cool: அடுத்து வரும் எபிகளில் உங்களின் கேள்விக்கான விடையை எழுதுகிறேன் நன்றி தொடர்ந்து படித்து கமெண்ட் தாருங்கள் thanks
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகாமனஸ்ஸாக்ஷிந் 2018-11-05 15:51
good start oru ponnuku pora idathula problem vandha adha ethirthu porada theriyalaye netran mosam yamini aadhi kitta poi adaikalam agarathala periya problemla mattikitanga oru problemla irundhu thappika innoru problemlaya mattuvanga yedho solvangale ennaiku bayandhu eriyara adupla vizhundha kadhainu athu yamini vishathula nadakuthu aadhi thanniye kappathika mudiyala idhula thali katiyachu yaminiyoda vazhvana illai indha kalyanam poiyanadha :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகாsasi 2018-11-05 21:59
Quoting மனஸ்ஸாக்ஷிந்:
good start oru ponnuku pora idathula problem vandha adha ethirthu porada theriyalaye netran mosam yamini aadhi kitta poi adaikalam agarathala periya problemla mattikitanga oru problemla irundhu thappika innoru problemlaya mattuvanga yedho solvangale ennaiku bayandhu eriyara adupla vizhundha kadhainu athu yamini vishathula nadakuthu aadhi thanniye kappathika mudiyala idhula thali katiyachu yaminiyoda vazhvana illai indha kalyanam poiyanadha :Q:

கதையை படித்து கமெண்ட் அளித்தமைக்கு நன்றி தோழி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகாmahinagaraj 2018-11-05 14:06
அம்மாடியோ ரொம்ப சூப்பரா இருக்கு மேம்.... :clap: :clap:
எனக்கு தெரிஞ்சு ஆதி சூழ்நிலைக்கைதியாக இருப்பார்ன்னு தோணுது... :Q: :yes:
ரெண்டுபேரும் ஒண்ணா வாழ்வாங்களா.. இல்லை பிரிஞ்சிருவாங்களா.. :Q:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகாsasi 2018-11-05 21:59
Quoting mahinagaraj:
அம்மாடியோ ரொம்ப சூப்பரா இருக்கு மேம்.... :clap: :clap:
எனக்கு தெரிஞ்சு ஆதி சூழ்நிலைக்கைதியாக இருப்பார்ன்னு தோணுது... :Q: :yes:
ரெண்டுபேரும் ஒண்ணா வாழ்வாங்களா.. இல்லை பிரிஞ்சிருவாங்களா.. :Q:
:thnkx:

கதையை படித்து கமெண்ட் அளித்தமைக்கு நன்றி தோழி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகாSAJU 2018-11-05 13:55
INTERESTING UD SIS
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகாsasi 2018-11-05 21:56
Quoting SAJU:
INTERESTING UD SIS

thanks :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகாAdharvJo 2018-11-05 12:17
Interesting start sasi ma'am :clap: :clap: indha nethranai innum Pini pedaleduthu irukka kudadha namba bhim boy.... :P after knowing abt him en ivanai velaiyala vachi irukanga.. :yes: hero Ena mounam viradhama panuraru?? Sema pavama aga irukarure ma'am indha kalathula ippadi Oru amanji-a facepalm yam's adhi mathiri Oru innocent Kita matinadhala es agitinga ippadi unknown person kuda entha thairyathila room share panuninga ji :sad: anyway adhi looks good but why is he.like dis sasi ma'am Oru emotions-um katamal....look forward to know have u move the story. Thank you and keep rocking :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகாsasi 2018-11-05 21:55
Quoting AdharvJo:
Interesting start sasi ma'am :clap: :clap: indha nethranai innum Pini pedaleduthu irukka kudadha namba bhim boy.... :P after knowing abt him en ivanai velaiyala vachi irukanga.. :yes: hero Ena mounam viradhama panuraru?? Sema pavama aga irukarure ma'am indha kalathula ippadi Oru amanji-a facepalm yam's adhi mathiri Oru innocent Kita matinadhala es agitinga ippadi unknown person kuda entha thairyathila room share panuninga ji :sad: anyway adhi looks good but why is he.like dis sasi ma'am Oru emotions-um katamal....look forward to know have u move the story. Thank you and keep rocking :GL:

நன்றி ஆதர்வ் bhim boya nice nameதொடர்ந்து படித்து கமெண்ட் தாருங்கள் ப்ளீஸ்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகாவைத்தியநாதன் 2018-11-05 10:51
It looks a fantasy story!
Keep rocking! All the best!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகாsasi 2018-11-05 11:28
Quoting வைத்தியநாதன்:
It looks a fantasy story!
Keep rocking! All the best!

நன்றி தொடர்ந்து படித்து இந்த கதைக்கு ஆதரவளியுங்கள்
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 18 Mar 2019 03:50
கடலூர்

மாலை 6 மணிக்கு ஆதியின் வீட்டை அடைந்த 10 கார்களும் வரிசையாக வீட்டின் போர்டிகோவில் நின்றன. வீட்டில் வேலை செய்பவர்கள் அவசரமாக அந்த கார்களிடம் சென்றனர். கார்களை விட்டு இறங்கிய இரண்டு குடும்பமும் தங்களின் லக்கேஜ்கள் கூட எடுக்காமல் வீட்டுக்குள் தடாலாடியாக நுழைந்தனர்.

ஆதியோ முற்றத்தில் அமர்ந்துக் கொண்டு வெறும் வேட்டியுடன் பனியன் சட்டையில்லாமல் நிம்மதியாக காத்து வாங்கிக் கொண்டிருந்தான்.

***********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...thaan-sasirekha-20_1
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 11 Mar 2019 05:46
ஆதித்யவர்மன் வீட்டை விட்டு சென்ற ஒரு வாரம் கழித்து சோமசுந்தரம் வீட்டிற்கு ஒருவன் வந்தான் கையில் பெரிய பையுடன், வீட்டு வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்த சந்திரன் கோபத்துடன் அவனிடம் சென்று கத்தினான்

”டேய் நீயாடா பாவி உன்னை நான் எவ்ளோ நம்பினேன், என்னை மோசம் பண்ணிட்டியே, நம்ப வைச்சி கழுத்தை அறுத்திட்டியேடா பாவி, இங்க எதுக்கு வந்த இன்னும் எதையாவது பேசி என்னை ஏமாத்தலாம்னா போடா வெளிய” என அவன் பாட்டுக்கு கத்தவும் சோமசுந்தரம் சந்திரனைத் தடுத்தார்

*****

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-19
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 04 Mar 2019 06:57
தனலட்சுமியின் மனதை நன்றாக குழப்பிவிட்ட சந்தோஷத்தில் மகாவின் அறை கதவைத் தட்டினான் ஆதி. அதைக் கேட்டு மகா கதவு திறக்க வெளியில் இருந்த ஆதி உள்ளே வந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். அவன் முகம் வெறுப்புடன் இருப்பதைக் கண்டு அதிர்ந்த மகாவோ அவனிடம்

”ஆதி” என பாசமாக அழைக்க அவனோ

“நீ எப்ப வீட்டைவிட்டு போற” என கோபமாக கேட்க அவள் அதிர்ந்தாள்.

******
படிக்கத் தவறாதீர்கள்!!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-18
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 25 Feb 2019 05:33
காலையில் அவசரமாக யாமினி உறங்கிக் கொண்டிருந்த ஆதித்யவர்மனை எழுப்பினாள்.

”ஆதி எழு ஆதி” என கத்த அவனும் உறக்கம் கலைந்து மெல்ல கண்களை கசக்கிக் கொண்டு எழுந்த ஆதி தனக்கு எதிரில் அமர்ந்திருந்தவளைப் பார்த்து

”என்ன இங்க உட்கார்ந்திருக்க”

”ஏன் நான் உன் கூட இருக்க கூடாதா” என ஆசையாக பேசியபடியே அவனது தோளில் சாய்ந்துக் கொண்ட யாமினியைக் கண்ட ஆதியோ

*********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-17
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 18 Feb 2019 07:03
கஜலட்சுமியை அனுப்பிவிட்ட சந்தோஷத்தில் குஷியாக வீட்டுக்குள் வந்த ஆதித்யவர்மனிடம் முதல் ஆளாக எதிர்பட்டு பேசினாள் மகாலட்சுமி

”என்ன ஆதி நீ வந்தது எதுக்கு, உன் கல்யாணத்துக்கா இல்லை இங்கிருக்கற பிரச்சனைகளை சரிசெஞ்சி எல்லாரையும் அனுப்பி வைக்கிறதுக்கா” என மகா சந்தேகமாக கேட்க அதற்கு ஆதி

“ரெண்டும்தான்” என சிரிப்புடன் சொன்னவனை சந்தேகமாகப் பார்த்தவள் அவனிடம் அதிகாரமாக

”எப்படி” என கேட்டதும் ஆதி அவளை கலாய்க்கலானான்.

*********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-16
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top