(Reading time: 5 - 10 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 32 - தேவி

Kaathalana nesamo

மித்ராவிற்கு தான் கேட்டதைப் பற்றி என்ன மாதிரி உணர்வது என்று தெரியவில்லை.

ஏனென்றால் அவளை அறியாமலே இதே வார்த்தைகளை அவள் மூன்றாவது முறையாகக் கேட்கிறாள். இதை எளிதாக எடுத்துக் கொள்ள  முடியவில்லை அவளால்.

அதிலும் சரவணன் அனுப்பிய வாய்ஸ் ரெகார்டிங்கிலும் இதே வார்த்தைகளைக் கேட்டது அவளுக்குச் சற்று வருத்தமாக இருந்தது.

அதோடு கதவை மூடிவிட்டு வெளியே வந்து அமர்ந்து கொண்டாள். முதலில் வீட்டிற்கு செல்லத் தான் எண்ணி இருந்தாள். பின் தான் வந்து இருப்பது சுமித்ராவிற்கு தெரியும் என்பதால், இப்படி சொல்லாமல் செல்வது தவறாகப் போகக் கூடும் என்று எண்ணியே, விசிடர் ஹாலில் காத்து இருந்தாள்.

அவள் எண்ணியது போல் சற்று நேரத்தில் சுமி வந்து ,

“என்ன மித்து, உள்ளே போகலையா?

“உள்ளே பேஷன்ட் இருக்காங்க சுமி. அதான் இங்கேயே வெயிட் பண்ணிட்டு இருக்கேன் “ என்றாள் மித்ரா.

“ஹேய்.. ஷ்யாம் அண்ணா தான் இருக்காங்க. நீ போய்ப் பாரு?

“இருக்கட்டும் டா. பிரெண்ட்ஸ வேறே. ஒருத்தர் உள்ளே பேசிட்டு இருக்கும் போது போறது நாட் எ குட் மேனர்ஸ்.” எனவும்,

“அடிப்பாவி மத்து.. நீ திருந்தின விஷயத்தை எல்லாம் ப்ரேகிங் நியூஸ் மாதிரி சொல்றியே? பாரு இந்த சின்ன புள்ள ஹார்ட் எப்படி எப்படி பட படன்னு துடிக்குது?

“ஏய் லூசு? இதுக்கு என்ன இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாகன்னு ப்ரோமோ போட்டா சொல்ல முடியும்?

என்று மித்துவும் பதிலுக்கு கவுன்ட்டர் கொடுத்தாள்.

அதைக் கேட்ட சுமி,

“அடி ஆத்தி.. இந்தப் பொண்ணு என்ன இப்படிப் பேசுது? “ என்று மேலும் கிண்டலடித்துக் கொண்டு இருந்தாள்.

இவர்கள் பேசும்போதே வெளியில் வந்த ஷ்யாம், மித்ரா நிற்பதைப் பார்த்து விட்டு, வேகமாக அவள் அருகில் வந்தான்.

“மித்ரா டார்லிங்..என்னடா அத்தானத் தேடி ஓடி வந்திட்டியா?” என்று கேட்கவும், சுமித்ரா தொண்டையைக் கணைத்தாள்.

“ம்ஹூம்.. நானும் இங்கே தான் இருக்கேன் மிஸ்டர் ஷ்யாம் அவர்களே” என்று கூறவும்,

“அடியே.. நீ இங்கேதான் இருக்கன்றது ஏற்கனவே எனக்குத் தெரியுமே. என் செல்லத்த இங்கே பார்த்தது தான் எனக்கு சர்ப்ரைஸ்” என்றான்.

“ஹ. உன் செல்லத்தை வரவழைத்ததே நான் தான். இப்படி எல்லாம் பேசின, அப்படியே அபௌட் டர்ன் போட வச்சிடுவேன். பார்த்துக்கோ” என,

“அம்மா.. தாயே.. ராட்சசி.. நீதான் என் தெய்வம். போதுமா?”

“அப்போ மிது டார்லிங்க என்ன சொல்லுவியாம்?

“அவ என் குல தெய்வம். நல்லா இருக்கிற குடும்பத்திலே குண்டு வச்சிடாத”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“நோ.நோ. மீ நாட் திஸ் டைப்யா? நம்ம ஸ்டேப் எல்லாம் ஸ்ட்ரைட் அட்டாக் தான்” எனவும், எல்லோரும் சிரித்தனர்.

“நீ எப்படி வந்த மித்து?

அதற்கு பதில் சுமி சொன்னாள். ஷ்யாம் நம்பர் கிடைக்காததால் மித்ராவை வரச் சொன்னதை சொல்லவும்,

“உன்னோட இல்லாத மூளைக்கு ஏன் இத்தனை பெரிய வேலை கொடுக்கிற? அது பாவம் கதறி அழறது உனக்கு கேட்கலை?” என்று ஷ்யாம் பதில் மீண்டும் ஒரு சிரிப்பலை.

“சரி. வேறே ஒன்னும் இல்லையே? கிளம்பலாமா?” என ஷ்யாம் கேட்க, இருவரும் ஷ்யாம் காரிற்கு சென்றனர்.

காரில் வரும்போது சுமித்ரா, ஷ்யாமின் டெஸ்ட் ரிபோர்ட் எடுத்துப் பார்க்க, மித்ராவும் இன்னொரு பைல் எடுத்துக் கையில் வைத்துக் கொண்டாள்.

ஷ்யாம் சுமிப் பார்த்ததை மட்டுமே கவனித்தவன், சுமித்ரா கேட்கும் முன்,

“என்னடா . ரிப்ரோட் எல்லாம் நார்மலா இருக்கா?

“எல்லாம் நார்மல் தான். ஆமாம் இப்போ எதுக்கு டெஸ்ட் எடுத்தீங்க?

“அந்த பைக் ரேஸ் ஸ்கிட்டிங்கில் அடிப்பட்டது சரியானப் பின் சேகர், ஒரு யூசுவல் செக்கப் செய்யச் சொன்னான். அதான் எடுத்தேன்.”

“அவ்வளவு தானா? இந்த ரிபோர்ட்ட என்கிட்டே கொடுத்து அனுப்பி இருக்கலாமே.. அதை விட்டு உன்னை ஏன் வரச் சொன்னது அந்த சிடுமூஞ்சி சிங்காரம் ?

“சுமி.. ஒழுங்கா பேசிப் பழகு. அதோட நீ இப்போ அவருக்குக் கீழே இன்டர்ன் பண்ணிட்டு இருக்க. அதை நியாபகம் வச்சுக்கோ”

“நோ ப்ரோப்லேம் டார்லி.. அவரையும் சோப்போட்டு கவுத்திகலாம்”

“மச்.. நீ திருந்தவே மாட்டே” என்றுவிட்டு ரோடைப் பார்த்து ஒட்ட ஆரம்பித்தான் ஷ்யாம்.

இவர்கள் வாக்கு வாதத்தில் இருவருமே மித்ராவைக் கவனிக்கவில்லை. அவர்கள் பேச்சை வாய் பார்த்துக் கொண்டு இருந்த சுமித்ரா, தன் கையில் உள்ள பைலை திறந்து பார்க்க, அதில் மித்ராவின் டெஸ்ட் ரிபோர்ட் இருக்கவே எடுத்துப் பார்த்தாள்.

அது நார்மல்ஆக இருக்கவும், அப்படியே பார்த்துக் கொண்டு வந்தவள், கீழே, ரிபோர்ட் டெக்கேன் பி அஸ் பேர் டாக்டர் அட்வைஸ் “ என்று போட்டு இருக்க, டாக்டர் பெயரோடு, அவரின் துறையும் இருக்க அதைப் பார்த்து அதிர்ந்தாள் மித்ரா.

அதில் மனநல மருத்துவரின் பெயர் இருக்க, மித்ராவின் மனம் தன்னை அறியாமல் பயம் கொள்ள ஆரம்பித்து விட்டது.

இந்த யோசனையிலே வந்தவள், வீட்டிற்குச் சென்றதையோ, அங்கே ஷ்யாம், சுமித்ராவின் கலாட்டக்ககளை அவளால் கண்டு கொள்ள முடியவில்லை.

அவர்களின் கலாட்டாக்களுக்கு சிரித்து, மற்றவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லி, இதை எல்லாம் எப்படிச் செய்தாள் என்று மித்ராவிற்கே தோன்றவில்லை.

சற்று நேரம் வெளியில் அமர்ந்து இருந்த மித்ரா, தங்கள் அறைக்குச் சென்று, அவளின் வின்னியோடு கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

மித்ராவின் பயம் உண்மையாக மாறுமா?

ஹாய் பிரெண்ட்ஸ்.. எல்லோரும் தீபாவளி நல்லா கொண்டாடி இருப்பீங்க என்று நம்புகிறேன். தீபாவளி அலுப்புக் காரணமாக இந்த அப்ட்டே மிகச் சிறிதாகக் கொடுத்து இருக்கிறேன் பிரெண்ட்ஸ். ப்ளீஸ் அட்ஜஸ்ட் செய்யுங்க மக்களே

தொடரும்

Episode # 31

Episode # 33

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.