Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 25 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 25 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

ஜாஸ்மினை கண்ட இளம்பிறைக்கு பேரதிர்ச்சி!

"ஏய் ஜாஸ்மின்! நீ… இங்க எப்படி? ஹைதெராபாத் ல இருந்து எப்ப வந்த? முதல்ல உள்ள வா, நீ மட்டும் கதிர் கைல சிக்கின, நம்ம ரெண்டு பேருக்கும் சங்கு தான் என்று சொல்ல, கேட் அருகில் இருந்து ஒரு உருவம் நடந்து வருவது தெரிந்தது. நீ ஏற்கனவே அவன் கிட்ட சிக்கிட்டியா என்பது போல் பார்த்தாள்.

கடவுளே என்று வாய்விட்டு புலம்பியவள் ஜாஸ்மினை முறைக்க அவளோ பரிதாபமாய் இளம்பிறையை பார்த்தாள்.

படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டியா நீ? அவசரம் உனக்கு என்று அவளை அடிக்குரலில் திட்ட நேராக அவள் முன் வந்து நின்றவன் அவளை உற்று நோக்கினான். இளம்பிறைக்கும், ஜாஸ்மினுக்கும் இடையில் இருந்த நட்பை பற்றி அவன் அறியாததல்ல.  ஜாஸ்மின் நிலையை அவள் என்றுமே வேறுபடுத்தி பார்த்தது கிடையாது. அவளை பொறுத்தவரை இயற்கை அன்னையின் பல்வேறு புலப்படா விந்தைகளுள் இதுவும் ஒன்று. 

இயற்கையின் படைப்புகளை எந்த காரணமும் கூறி வெறுப்பதில் இளம்பிறைக்கு உடன்பாடில்லை.

ஆனால் ஜாஸ்மின் இளம்பிறை குறித்து, அவள் அக அழகை குறித்து கதிரிடம் அவ்வப்போது பேசி சிலாகிப்பாள்.

இருவரின் உறவை பற்றி அறிந்த போது ஜாஸ்மின் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

சில நாட்களாக ஜாஸ்மின் அவனை தொடர்பு கொள்ளாமல் இருந்தது அவனுக்கு நெருடலை கொடுக்க அவளை குறித்து இளம்பிறையிடம் விசாரித்த போதெல்லாம் எதை எதையோ பேசி  சமாளித்து விட்டாள்.

"என்கிட்டே மறச்சிட்டியே? ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் தான?" என்ற ஆதங்கத்தை தாங்கியிருந்த அவன் பார்வையை சந்திக்க இயலாமல் அவள் தலை குனிய

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஏன்டி கதவை திறக்க இவ்வளவு நேரமா?” என்று சிடு சிடுத்தபடி அவன் உள்ளே போனான்.

இவளுள் எழுந்த கடுப்பு அவன் சோர்ந்திருந்த முகம் கண்டு வெளிவராமல் இருக்க

நேராக சென்று டேபிள் முன் ஒரு பிளாஸ்டிக் சேரை இழுத்து போட்டு அமர்ந்தவன் “டின்னருக்கு என்னடி பண்ணியிருக்க?  சீக்கிரம் கொண்டா  பசி உயிர் போகுது” எனவும் அவள் இன்னும் முழியை பிதுக்க வேண்டியிருந்தது.

“என்னடி இந்த முழி முழிக்கிற? என்ன செஞ்சு வெச்சிருக்க சீக்கிரம் கொண்டு வா” எனவும்

“இல்ல எனக்கு பசிக்கல அதான் ஆப்பிள் மட்டும் சாப்பிட்டு” என்று சொல்லவும்

பல்லை கடித்தான் கதிர் .

“ஏய் அரை மணி நேரம் தான் உனக்கு கொடுப்பேன் அதுக்குள்ளே ஏதாச்சும் செஞ்சு கொண்டுவா இல்லை உன்னையே தின்னுடுவேன் பார்த்துக்கோ என்று சொன்னவன் ஆமா ஆப்பிள் சாப்டியா? (அதையாவது சாப்டியா என்ற தொனியில் கேட்க ) என்று கேட்க அவள் அங்கிருந்த அலமாரியை காண

கால் பாகம் கடித்திருந்த ஆப்பிள் அங்கே வைக்கப்பட்டிருக்க அதை எடுத்து கடித்தவன் “மச மசன்னு நிக்காம சீக்கிரம் போய் ஏதாச்சும் செய் போ” என்று அவளை விரட்ட

ஜாஸ்மினை கையோடு அழைத்து கொண்டு சமயலறைக்கு சென்றவள்

“ஏய் என்ன நடந்துச்சு?  ஒரு நிமிஷம் இரு என்றவள் “வீட்ல எதுவும் இல்லையே நான் என்ன செய்ய?” என்று திணறியவள் வென்பொங்கல் செய்வோமா? அம்மா சட்டுன்னு சமைக்கணும்னா இதைத்தான் செய்வாங்க உனக்கு ரெசிபி தெரியுமா? என்று கேட்க

ஜாஸ்மினிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

இவை ஒருத்தி இஞ்சி தின்ன அழகியாட்டம் நின்னுட்டு என்று சொன்னவள் தெரியுமா? தெரியாதா? சட்டுன்னு சொல்லு என்று கேட்க

ஜாஸ்மின் தலை மட்டும் அசைந்தது.

“சோ உனக்கும் தெரியாது?....  என்றவள் எனக்கு தெரியும்?...... செய்வோம்” என்றவள் அரிசி பருப்பு என்று அடுத்தடுத்து  குக்கரில் கொட்டினாள். தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து பொங்கல் செய்தாள் (அவள் செய்த  பொங்கல் ரெசிபியை சொல்லி உங்களை மருத்துவமனைக்கு அனுப்ப மனமில்லாததால், அந்த பாக்கியத்தை  கதிர்க்கு மட்டுமே கொடுக்கிறேன் டேய் கதிர் என்ஜோய் யுவர் பேபி மூன்'ஸ் வெண்பொங்கல்)ஜாஸ்மின் தேங்காய் துருவி சட்டினியை தயார் செய்ய நெய் மற்றும் தாளிப்புக்கு தேவையான அனைத்தையும் எடுத்து அருகில் வைத்தவள்

“இப்போ சொல்லு கதிர் கிட்ட நீ எப்படி சிக்கின ?”

“என் நேரம் வேற என்ன சொல்றது?”

நீ ஹைதெராபாத் போறதா தான சொன்ன ?

“சொன்னேன் ஆனா நான் தங்கியிருந்த ஹோம் ல சில பேருக்கு உடம்பு சரியில்லை அவங்க குணமானதும் போலாம்னு தங்கிட்டேன். இத்தனை நாள் ஹோம் ல தான் இருந்தேன் இன்னிக்குனு பார்த்து என்னை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போனாங்க”

யாரு ?எங்க?

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# Commentd 2018-11-25 09:54
hi madam;
Weekly once update kudunga madam..semmaiya oru love flim climax la power cut ana mathiri ore tenson ah iruku...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 25 - பிரேமா சுப்பையாmahinagaraj 2018-11-09 11:57
சோ கியூட் மேம்.... :clap: :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 25 - பிரேமா சுப்பையாAnusuya 2018-11-09 08:40
Super epi. Ela Voda health wise problem kathirku therinjuta..
Suspense ya iruku..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 25 - பிரேமா சுப்பையாPadmini 2018-11-08 18:37
Interesting update Prema!! waiting for the next update soon!! :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 25 - பிரேமா சுப்பையாrspreethi 2018-11-08 11:34
Super update.... Yennada kadhir oda naughty love miss aagudheanu yosichen pona epi end la... Indha epi la niraya vandhuduchu... Super :clap: Ela paavam samalika poradranga :grin: waiting to read next epi
Reply | Reply with quote | Quote
# UTN by Prema SubbiahSahithyaraj 2018-11-08 10:56
Superb update. What happened to Kathir y suddenly got upset isit because of Janani :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 25 - பிரேமா சுப்பையாV.Lakshmi 2018-11-08 10:41
உங்களோட கதை ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு திசையில் பயணிக்குது. இந்த எபிசோட் ரொம்ப நல்லா இருக்கு உங்களோட கண்ணாமூச்சி ரே ரே கதை எனக்கு ரொம்ப பிடிக்கும் :clap: :clap: :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 25 - பிரேமா சுப்பையாsaaru 2018-11-08 09:49
Super super
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top