“எங்க பாப்பா டைவிங் செய்யும் போது அது பத்தி என்ன ஏதுன்னு தெரிஞ்சு வச்சுக்கணும்ல” வாஞ்சையுடன் தேன்மொழியின் தலையை தடவிக் கொடுத்த வானதியை நான்கு விழிகள் அன்போடு நோக்கின.
அசாதாரண சூழலில் திருமணம் என்ற போதும் வானதி மட்டுமே தனக்கு மனைவியாக இந்த வீட்டின் மூத்த மருமகளாக தேன்மொழியின் அண்ணியாக இருக்க முடியும் என்பதை செயலால் இளங்கோ உணர்த்திக் கொண்டிருக்க இளமாறனோ வெளிப்படையாகவே தோழியிடம் உரைத்தான்.
“என் அம்மாவோட கூட வேலை பார்க்கும் கவிதா அத்தை சொல்வாங்க. பொண்ணாப் பிறந்தா ஒரு நாள் எல்லாத்தையும் விட்டுட்டு புகுந்த வீட்டுக்குப் போய்த்தான் ஆகணும்ன்னு. அப்போ அம்மாவை விட்டுட்டு எப்படி போவேன், பாப்பாவை விட்டுட்டு எப்படி போவேன்னு நான் நினைச்சுப்பேன். அம்மா என்னை விட்டுட்டு போனாலும் பாப்பா கூட எப்போவும் இருக்கும் பாக்கியத்தை எனக்கு குடுத்துட்டு போயிருக்காங்க மாறா” மனைவி சொன்னதைக் கேட்ட இளங்கோவின் மனம் நிறைவாய் ததும்பி நின்றது.
காதல் என்னும் கீதம் உதிக்கும் முன்பே வானதியின் மனதில் தாய்மை எனும் ஸ்வரத்தை மீட்டியவள் அல்லவா தேன்மொழி.
“நமக்கென்று எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் பாப்பா தான் எப்போவும் முதல் குழந்தை” என்று எல்லாம் அவர்களுக்குள் சொல்லிக் கொள்ளவில்லை தான். ஆனால் அது இருவரிடத்திலும் உணரப்பட்டு இருந்தது.
தனது வாழ்க்கைத் துணையாய் வரும் பெண் தன் தோழியைப் போல தேன்மொழியை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஒரே ஆசையாக இருந்தது இளமாறனுக்கு.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
“அக்கா எனக்கு அமா டைவர் பயிற்சி எடுக்கணும். டைவர் சூட் ஆக்சிஜன் மாஸ்க் எல்லாம் இல்லாமலே நான் நானாக கடலில் மூழ்கணும்” அந்தக் காட்சியைக் கற்பனை செய்த தேன்மொழியின் கண்கள் நட்சத்திரமாய் ஜொலித்தன.
“என் பொண்ணுக்கு ஏன் இப்படி விபரீத ஆசை எல்லாம் வந்திருக்கு. அது ரொம்ப ஆபத்தானதாமே” தாய்மனம் தவித்தது.
“அப்பா நான் ஜப்பான் போறேன். அங்கே என்ன மாதிரி பயிற்சி பாதுகாப்பு எல்லாம் நேர்ல தெரிஞ்சுட்டு வரேன்” இளங்கோ சொல்லவும் அனைவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
அடுத்த ஒரு வாரத்தில் தாத்தாவும் பேத்தியும் ஜப்பான் சென்றனர்.
பசிபிக் மகாசமுத்திரம்.
உலகத்திலேயே மிகப் பெரிய சமுத்திரம்.
அதன் ஆக்ரோஷ அலைக்கரங்கள் யாவர்க்குமே ஆச்சமூட்டுவதாக இருந்த போதும் தேன்மொழி ஆசையோடு தழுவிக் கொண்டாள்.
இளங்கோ ஏற்பாடு செய்திருந்த பயிற்சிக் கூடத்தில் பயிற்சி மேற்கொண்டவள் கூடவே அந்நாட்டின் மொழியையும் கற்றுக் கொண்டாள்.
அங்குள்ள அமா பெண்களோடு நல்ல நட்பு கொண்டு நிறைய நுணுக்கங்களை அறிந்து கொண்டாள்.
ஒரு வருடம் முடிவுற்ற போது தேர்ந்த அமா டைவர்களே வியக்கும் வண்ணம் நீண்ட நேரம் கடலுக்குள் அமிழ்ந்து மூச்சடிக்கி வெற்றி கண்டாள்.
ஆத்மார்த்தமாக எந்தச் செயலைச் செய்தாலும் அச்செயல் முழுமையடைய தேவையான மனவலிமை மற்றும் உடல் வலிமை தானே வந்து சேரும் என்று நிரூபித்தாள் தேன்மொழி.
கடலின் மடியில் தான் கண்டு களிக்கும் கொள்ளை அழகை தாத்தாவிடம் விவரிப்பாள்.
அவள் விவரிப்பது தாத்தாவின் கற்பனையில் வடிவம் பெற்றாலும் அது அவள் கண்டு இன்புற்ற அந்த அழகு அல்லவே.
இதை தாத்தா சொல்லவும் என்ன செய்வது என்று யோசித்தவள் முடிவு செய்திருந்தாள்.
“மரைன் போட்டோகிராபி”
தொடரும்
Go to Senthamizh thenmozhiyaal story main page
{kunena_discuss:1218}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.