(Reading time: 14 - 27 minutes)

அவர்களிடம் சொல்லிக்கொண்டு அபி அவன் கல்லூரிக்கும்.. கார்த்தி,ஸ்வேதா பள்ளிக்கும் சென்றனர்...

விவேகா கல்லூரி......

தன்னடைய கனவை நோக்கி சுதந்திரமா பறந்து போனான் அவனுடைய புது பைக்கில் தன் கல்லூரியை நோக்கி பயணித்தான்....

தான் படித்த பள்ளியில் உள்ள சிலர் இவன் படிக்கும் கல்லூரியிலேயே சேர்ந்துள்ளனர்.. அதனால் இவன் உள்ளே நுழையும் போதே இவன் நண்பர் பட்டாளம் இவனை வரவேற்றனர்..

என்ன அபி பைக்கு எல்லாம் புதுசாடா..

ம்.. அப்பா கிப்ட் முதல்நாள் காலேஜ் கிப்ட்...

சூப்பராயிருக்கு மச்சான்...

சரி என்னடா உள்ள போகலியா.. இங்கயே உட்காதாச்சு..

போலாம் மச்சி இங்கதானே இருக்க போரோம்.. நமக்கு தெரிஞ்சு யார் எல்லாம் வராங்கன்னு பாக்கலாம் நீ உட்காரு மச்சி..

பலவாராக அவர்கள் அரட்டை தொடர்ந்தது...

மிஸ்டர்.கேகே என்னோட காலேஜ் வந்திகுச்சு காரை நிப்பாட்டுங்க.. ஸ்டாப்.. ஸ்டாப்..

வாலு... வாலு... இரு ஸ்டாப் பன்னரேன்... உன்ன எல்லாம் எப்படி தான் இங்க சமாளிக்க போராங்களோ...

ஹாலோ மிஸ்டர்.கேகே அப்போ என்ன அருந்த வாலுன்னு சொல்லரீங்களா... என முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு காரைவிட்டு கீழே இறங்கி முகத்தை திருப்புக்கொண்டு நின்றாள்....

இவளின் குழந்தை தனத்தை சிறுபுன்னகையுடன் ரசித்துக்கொண்டே காரைவிட்டிரங்கி அவளின் முன் தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு நின்றார்....

என்ன என்னையே இப்படி பாத்தா நான் சமாதானம் ஆக மாட்டேன்...

வாலு... இப்போ நான் என்ன சொன்னேன்... நீ என் மேல கோவபடர..

பின்ன நீங்க என்ன அருந்த வாலுன்னு சொல்லரீங்க..

உண்மையை சொல்லும்மா.. அதுல தப்புயிருக்கா....

ப்பா.... என சிணுங்கினாள்...

சரி.. சரி.. நீ என்னோட செல்லமான அருந்த வாலு ஓகே....

ம்.. இது கொஞ்சம் நல்லாயிருக்கு...

உன்ன எல்லாம் என்ன தான் பன்னரதோ... சரி... இப்போ காலேஜ் போ.. நான் ஈவ்னிங் வந்து உன்ன கூப்பிட்டு போகவா..

இல்ல வேண்டாம்ப்பா... நானே வீட்டுக்கு போயிரேன்.. உங்களுக்கு வேளையிருக்குமே மிஸ்டர்.கேகே...

இருக்கு.. ஆனா உன்னவிட முக்கியம் இல்ல செல்லம்...

எனக்கு நல்லாவே தெரியும் என்னோட செல்ல அப்பா...

சரிடா குட்டி பாத்து போ.. என அவளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு சென்றார்...

செல்ல சிணுங்கள்.. கொஞ்சல்கள்.. கோவங்கள்.. உரிமைகள்.. நேசம்கள்.. பாசங்கள்.. விளையாட்டுகள்.. அப்பா,பொண்ணுகுள்ள இது எல்லாம் எவ்வளவு அற்புதமான நிகழ்வுகள்.. இதைய எல்லாம் சொன்னாயில்ல அனுபவிச்சாதான் தெரியும்.... அதனால தானோ எப்போவும் பொண்ணுங்களுக்கு பிறந்தவீடுன்னா இனம் புரியாத ஆனந்தம் மணசுக்குள்ள வருதோ என்னமோ..... ஹாஹாஹா... என்ன நான் சொன்னது உண்மை தானே....

அவளிடம் இருந்து விடைபெற்று சென்றார்.. அவளும் தன் கல்லூரிக்குள் நுழைந்தாள் விவேகா கல்லூரி....

எந்த ஒரு கனவுகளும் இல்லாமல் சாதாரணமாவும்,சந்தோசமாவும் இருக்கனும் என நினைத்துக்கொண்டே உள்ளே சென்றாள்....

அவள் செய்வதை அவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டு இருந்த அபியும் தன் வகுப்பிற்கு சென்றனர்... மனதில் புதிய ஒரு உணர்வுடன்...

அவளுக்கு எப்படி எங்க போரதுன்னு தெரியாம ஹாஸ்டலுக்கு போயிட்டாள்..

அங்க முதலாம் ஆண்டு மாணவர்,மாணவிகள் அனைவரும் தன் பெட்டிகளை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தனர்..

அவள் அதை பார்த்துக்கொண்டே அங்கு இருந்த ஒரு மரத்திற்கு அடியில் போட்டுயிருந்த கல்பென்சில் உட்காந்தாள்..

எல்லாரும் எதாவது ஒரு கனவோடவும், ஆசையிலும் கல்லுரிக்குள் நுழைந்தனர்.. ஒரு பக்கம் ஆசையா வந்தவங்க.. பெற்றோர்களின் விருப்பத்தினால் வந்தவர்கள் என பலவகையாவர்களை பார்த்துக்கொண்டுயிருந்தாள்.. அவளின் அருகில் ஒரு பெண் வந்து அமர்ந்தாள்.. அவளை பார்த்து புன்னகைபூக்கவே அவளும் பதிலுக்கு பேச தொடங்கினாள்..

என் பேர் மனு.. மணிகர்னிகாகண்ணன்...

நான் நவீனா...

நான் முதல் வருசம் கம்பியூட்டர் இன்சினியரிங்..

நானும் சேம் கிளாஸ்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.