குட்மார்னிங் சார் என அனைவரும் கோரசாக கூறினார்கள்.. அதில் சில பேர் அவர் மேக்ஸ் சார் என சொன்ன உடனே அனைவரின் முகமும் அய்ய என மாறியது...
அனைவரும் கோரசாகா குட்மார்னிங் கூறவும் அவரும் சிரித்துக்கொண்டே உட்காருங்க என கூறினார்....
அவர் திரும்பி தன் புத்தகத்தை அவர் டேபில் மேல் வைக்க திரும்பியவர்....
காலை வணக்கம் எங்கள் கணித ஆசிரியர் அவர்களே... என்று கூறவும் யாருடா அது என திரும்பலானார்..
அவர் திரும்பவும் அங்கு தன் இரு கைகளையும் குவித்து சிரித்த படியே நின்றுயிருந்தாள் மனு...
இதுவரைக்கும் மனுவை போல யாரும் வணக்கம் சொல்லாத காரணத்தால்... அவர் சற்று நேரம் பார்த்துவிட்டு.. அவளின் கையின்னும் இரங்காமல் இருக்கவே.. தன்னாலே அவரின் கையும் குவிந்தது...
அதை சிறு புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு அமந்தாள்..
என்ன சார்ன்னே கூப்பிடலாம்..
எனக்கு இப்படி கூப்பிட தான் பிடிச்சுயிருக்கு குருவே..
அப்போ ஆசிரியர்.. இப்போ குருவா...
ஆசிரியர், ஆசான், குரு இது எல்லாமே ஒரே அர்த்தம் தானே.. அதனால இதுல எது வேணாலும் கூப்பிடலாம்..
இப்படி எல்லாம் இப்போ யார் அப்படி கூப்பராங்க..
யார் கூப்பிட்ட என்ன.. கூப்பிடலைன்னா என்ன.. நான் இப்படித்தான் கூப்பிடுவேன்.. உங்களுக்கு பிடிக்கலையா.. குருவே..
அப்படி இல்லம்மா.. இதுவரை யாரும் இப்படி கூப்பிடலையா அதான்..
இனி எல்லாம் மாத்திரலாம் குருவே..
அதை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு சரி ஸ்டூடன்ஸ் இன்னைக்கு கிளாஸ் எல்லாம் இல்லை.. உங்களை பத்தி சொல்லுங்க.. நான் சிவஞானம் இங்க 20 வருசம் மேக்ஸ் ப்ரொபசரா இருக்கேன்.. இப்போ உங்களை பத்தி இங்க வந்து சொல்லுங்க.. என அவர் கடைசியில் சென்று அமர்ந்துகொண்டார்..
அனைவரும் வந்து அவர்களை பற்றி சொல்லி சென்றார்கள்..
ஒவ்வொருத்தராக அவர்களின் அறிமுகங்கள் தொடரந்தன... அதன் வரிசையில் மனுவும் தன்னை அறிமுகம் செய்யவந்தாள்...
எல்லாருக்கும் வணக்கம் நான் மனு.. மணிகர்னிகாகண்ணன்... எனக்கு புக் படிக்க, டிவி பார்க்க, வாயடிக்க எல்லாம் ரொம்ப பிடிக்கும்.. அப்பரம் நான்... மனு.. மனு... அவள் பேசும் போது யாரோ கூப்பிடவே திரும்பி பார்த்தாள்..
மனும்மா.. நீ தானே அது என கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் அங்கு வேளை செய்யும் ப்யூன் மாணிக்கம்..
மாணிக் அண்ணா.. என்ன ஆச்சு.. என்ன கேக்கரீங்க..
மனும்மா.. நீ தானே சனிகிழமையும், ஞாயித்துகிழமையும் ரேடியோவுல்ல பேசரது..
ஆமாண்ணா நான் தான் அது ஒரு மணிநேரம் பேசுவேன்.. நீங்க அதை கேட்பீங்களா...என ஆர்வமாக அவள் கேக்கவே..
சரியா போச்சு போ.. நான் உன்கிட்ட கூட பேசியிருக்கேன் மனும்மா.. எங்க எல்லாருக்கும் நீ ரொம்ப பேவரட்...
ஓ... ரொம்ப நன்றி அண்ணா... ஆனா பேசுனது ஞாபகம்யில்லைன்னா..
பராவளாம்மா.. உன்கூட எத்தனை பேர் பேசுவாங்க நீ என்ன பன்னுவ..
சரி இனிமேல் பேசும் போது சொல்லுங்க நான் ஞாபகம் வச்சுக்கரேன்... அது சரி நான் தான் பேசரதுன்னு உங்களுக்கு யாரு சொன்னா..
அதுவா உன்னோட பேர் சொல்லரவிதம் எங்கயோ கேட்டமாதிரியிருக்குன்னு யோசனை பன்னேன்னா அதான் டக்குன்னு ஞாபகம் வந்திருச்சு.. உடனே உன்ன பாக்க வந்துட்டேன்..
சரி.. சரிண்ணா..
என்ன மாணிக்கம்.. என்ன ஆச்சு..
அப்போது தான் அவர் வகுப்பரையை கவனித்தார்.. அய்யா மன்னிச்சிருங்க.. தெரியாம பன்னிட்டேன் நான் மனும்மாவ பாக்க வந்தனா அதான்..
உங்கலுக்கு தெரியுமா மனும்மா தான் ரேடியோவில்ல பேசரது.. அதான் சந்தேசமா இருந்தது கேட்டு போலாம் வந்தேன் உங்களை கவனிக்களை..
சரி.. இனி கவனமாயிரு..
சரிங்க நான் வரேன்.. மனும்மா நாம அப்பரம் பேசலாம்.. என அவர் சென்றார்...
அது என்ன ரேடியோவில் பேசரது...
அது வந்து குருவே... நான் செம வாய்.. என் தொல்லை தாங்காம தொரத்திவிட்டாங்க அப்போ தான் திடீயிர்ன்னு இந்த ஐடியா வந்தது... அது தான் சனி,ஞாயிறு ரேடியேவில் புரோக்ராம் பன்னரேன்.. வாங்க பழகலாம்... புரோக்ராம் பேர்...