(Reading time: 14 - 27 minutes)

ஓ.... நவீனா ஹாஸ்டல் ஆ....

ம்.. நான் ஹாஸ்டல் தான்.. நீங்க ..

நான் வீட்டுல்ல இருந்து வரேன் நவீனா..

சரி நீ இங்க என்ன பன்னறீங்க.. க்ளாஸ் போகலீயா ....

எனக்கு இடம் தெரியாம வந்துட்டேன்.. போகனும்.. நீங்க..

நீ-ன்னே சொல்லலாம்.. இதோ ஹாஸ்டல்ல தீங்ஸ் எல்லாம் வச்சா போதும் அவ்ளோ தான்..

ம்...

ஒரு நிமிஷம் இவ என்னோ ப்ரண்டு நீலா.. நாங்க ஒன்னா தான் படிச்சோம்.. என அவளை காணவந்த தோழியை அறிமுகப்படுத்தினாள்...

ஹாய் நீலா.. நான் மனு.. மணிகர்னிகாகண்ணன்..

ஹாய் மனு..

நவீ நீ வந்து பாரேன் உன்னோட திங்ஸ் எல்லாம் எப்படி எடுத்து வைக்கரது.. நீ கொஞ்சம் வாயே..

ம் சரி வா போலாம்... நாம கிளாஸ்ல பாக்கலாம் மனு.. என அவர்கள் சென்றனர்..

அவள் காலேஜை சிறிது நேரம் சுற்றிவிட்டு.. அதாங்க அங்க எல்லாம் போர் அடிக்கவும் க்ளாஸ் ரூம்க்கு போனாள்.. (எப்படியும் காலேஜ்ல படிக்க போரதுயில்ல கிளாஸ்காவது ஒழுங்கவர்லாம்ல.. இவ சேட்டைய கேக்க இங்க யாரும்யில்லையா...)

அங்க ஏற்கனவே அனைவரும் வந்து அமர்ந்திருந்தனர்...

அவள் உள்ளே நுழைவதை பார்த்த அபி.. இவளும் இந்த கிளாஸ் தானா... ஆனா அவள் அப்பவே வந்தா இப்போதான் கிளாக்கு வராள்.. வழி தெரியாம தேடிட்டு வந்துயிருப்பாள் என அவளுக்காக பரிந்தது அவனின் மணம்...

அங்கு ஏற்கனவே நவீனா,நீலா இருக்கவே அவங்க என்ன மனு எங்களுக்கு முன்னாடி கிளம்புன இப்போதான் வர...

அது.. என அவள் ஆரம்பிக்கும் போதே...

ஓ.... மேடம் இங்க தான் சேர்ந்து இருக்கீங்களா.. அதுவும் என்னோட க்ளாஸ் வேரையா... அப்போ இனி ஒவ்வொரு நாளும் சூப்பரா போகும் போலயே...

அப்பரம் செல்லம் எப்படி இருக்கர.. என்ன பாக்காமா இளச்சிட்டியா செல்லம்.. என அவளின் கையை பிடிக்க வந்தவனின் கையை தட்டிவிட்டவள்..

இதோ பார் ஆகாஷ்... நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லீருக்கேன்.. என்ன உரிமையா பேசரதும்... செல்லம்ன்னு சொல்லரது எல்லாம் வேண்டாம்.. நீ திரும்பவும் இப்படி சொன்ன.. அப்பரம் என்ன மனுஷியா பாக்கமாட்ட ஜாக்கரதை... அவளின் அமைதியான குரலின் அழுத்தம்,திருத்தமாக அவள் கூறுவது பார்ப்போரை சற்று கலக்கம் கொள்ளவைக்கும்..

நீ கோபமா பேசுனா நான் பயந்திருவேனா.. இன்னும் சொல்ல போனா நான் உனக்காக தானே இந்த காலேஜ்க்கு வந்ததே...

அச்சோ... நீ இங்க தான் சேர்ந்திருக்கன்னு எனக்கு தெரிஞ்சுயிருந்தா நான் அப்படியே காம்பவுன்செவுருஏரி குதிச்சு ஓடிருப்பேன்...

அப்படி எல்லாம் சொல்ல கூடாதுடா...

உன்னோட தொந்தரவு ஸ்கூல்லையும் தாங்கமுடியாமத்தானே நான் உனக்கு தெரியாமா இந்த காலேஜ்ல சீட் வாங்குனேன்.. அப்பரம் எப்படி பக்கி நீ இதை கண்டுபிடிச்ச...

நாங்க எல்லாம் யாரு... அய்யா செம கில்லாடி ஆச்சே..

நீ கில்லாடியில்லை பக்கி.... கேடி..

அப்படி எல்லாம் சொல்ல கூடாதுடா...

நான் அப்படித்தான் சொல்லுவேன்டா...

மனு...

என்னடா.. என்னா... என அவள் சற்று கடும்குரலில் கேட்கவும்..

ஒன்னும்யில்ல சாப்ட்டியான்னு கேட்டேன்ம்மா..

அதை கேட்டவளுக்கு சிரிப்பை அடக்க பேரும் பாடாய் இருந்தது...

உன்ன எல்லாம் எந்த லிஷ்ட்ல சேர்கரது.... இப்போ உனக்கு என்ன வேணும் என்ன பழிவாங்கனுமா..

இல்ல மனு தொந்தரவு பன்னனும்... நீயா வந்து என்கிட்ட சாரி சொல்லனும்... நான் கொடுக்கர பனிஷ்மென்ட்ட ஏத்துக்கனும்....

ஏத்துக்கலைன்னா...

இப்படி தான் தினமும் தொந்தரவு பன்னுவேன்...

நானும் உனக்கு சளச்சவள் இல்ல...

ம்... பாக்கலாம்....

நான் மனு... பாக்கலாம்டா... சொல்லீட்டு அவள் பென்சில் அமர்ந்துகொண்டாள்...

ஹாலோ ஸ்டூடன்ஸ்..... எல்லாருக்கும் குட்மார்னிங்.... என கூறிக்கொண்டே உள்ளே வந்தார் நான் உங்களுக்குமேக்ஸ் சார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.