(Reading time: 18 - 36 minutes)

அவள் கண்சிமிட்டி காற்றில் முத்தத்தை பறக்கவிட்டாள்.. எனக்கு அது நல்லவே தெரியும்டா டப்பா.. ஆனா உன்னோட நல்லாதோழியான நான்னே எப்படிடா உன்னோட முன்னேற்றத்துக்கு தடையா இருப்பேன்...

சுயநலமே இல்லாத ஒரு உறவுன்னா அது கண்டிப்பா நட்பாத்தான் இருக்கமுடியும்.. அப்பா,அம்மா,தங்கை,தம்பி,அண்ணன்,அக்கா,அத்தை,மாமா,சித்தி,சித்தப்பா,தாத்தா,பாட்டிஇப்படி எல்லா உறவுகளும் எதாவது ஒரு எதிர்பார்ப்பு கண்டிப்பா இருக்கும் ஏன் கணவன் மனைவி உறவுள்ள கூட காதல்-ங்கர எதிர்பார்ப்பு இருக்கு.. ஆனா நட்புல்ல எந்த எதிர்ப்பும் இல்லை.. எவ்வளவு தான் கழுவி ஊத்தினாலும் மனசு கஷ்டம்மா இருக்கும் போது முதல்ல தேடர துணை கண்டிப்பா நட்பாத்தான் இருக்கும்.. அப்படி மனசு கஷ்டம்மா இருக்கும் போது வார்த்தையால சொல்லலைனாலும் என்னடா பிரச்சனைன்னு தோல்மேல கைபோட்டு உரிமையா கேட்பான்.. நட்புல மட்டும் தான் ஆண்,பெண் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இருந்தது இல்லை... யார் கூடவும் பகிர்ந்துக்கமுடியாத விஷயங்களை கூட நண்பன்கிட்ட எந்த தயக்கமும் இல்லாம சொல்லமுடியும்.. நான் சொன்னது உண்மை தானே நட்புக்கு எந்த எதிரிபார்ப்பும் இல்லைங்கரத ஒத்துக்கறீங்களா...

அவ அவனுக்கு ஒரு கவலைன்னா நம்ம அபிக்கு இருந்த ஒரு கவலை தீர்ந்தது அது என்னன்னு கேக்கறீங்களா.. அதாங்க மனு பேசும் போது நான் உன்னோட நல்லதோழின்னு சொன்னால்ல அதனால தான் இவருக்கு ஒரு மனமகிழ்ச்சி.. என்னன்னு புரியாத மகிழ்ச்சி.. தெரியாத கேள்விக்கு.. அறிந்த பதில்... இது தான் காதலோ.. அல்லது இதுவும் காதலோ..

மனு சொன்ன தோழிகரதுல்ல நம்ம ஹீரோ இங்க இல்லை.. நம்ம ஹீரோவ விட்டா நாள்முழுக்கவும் ரொமான்ஸ் பன்னுவார் போல.. அவர் இப்படியே ரொமான்ஸ் பன்னட்டும் நாம மனுவும்,ஆகாஷ் என்ன பேசுராங்கன்னு பார்க்கலாம் வாங்க..

சொல்லு டப்பா.. மீட்டிங் இருக்கு தானே..

ஆமா மனுகுட்டி.. இன்னைக்கு நாம்ம கஷ்டப்பட்டதுக்கு பலன்கிடைக்க போகுது.. லண்டன்ல இருந்து வந்திருக்கங்கடா.. நம்ம புரோஜக்ட்ட எக்ஸ்பிளைன் பன்னனும் இன்னைக்கு.. மேபி சக்சஸ் தான் ஆகும்.. அதான் முடிச்சிட்டு வந்து உனக்கு சர்பிரைஸ் கொடுக்கலாம்ன்னு நினைச்சேன் செல்லம்..

ஓ... வாவ்.. இன்னைக்கு மீட்டிங் உனக்கு எவ்வளவு ஸ்பெஷல்ன்னு எனக்கு தெரியும்டா.. போ போய் சக்சஸ் பன்னீட்டு வா... உன்னோட பதிலுக்காக நான் காத்திருப்பேன்டா டப்பா..

உன்ன இப்படியே விட்டுட்டு நான் எப்படி செல்லம் போவேன்.. என்னால முடியாது.. அப்படியே நான் போனாலும் என்னோட மனசு முழுக்க இங்க தான் இருக்கும் நான் போகல செல்லம்..

இந்த மனு எப்பவும் மத்தவங்க முன்னேற்றத்துக்கு தடையா இருக்கமாட்டாள்.. நீ இப்ப போகலைன்னா உன்னோட முன்னேற்றத்துக்கு நான் தான் பெரிய தடைன்னு நினைச்சுக்குவேன் அது உனக்கு சந்தோசமா.. போடா.. என உதட்டை பிதுக்கி உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு அவள் சொன்னவிதத்தில் அழகு என்று கொஞ்ச வேண்டும் போல இருந்தது..

அந்த வேகத்தில் அபிக்கு கை அதுவாக மேலே சென்றது கஷ்டப்பட்டு கட்டுபடுத்திக்கொண்டான்.. ஆனா ஆகாஷ்க்கு தடையில்லையே சோ கன்னத்தை கிள்ளி அழகு என கொஞ்சினான்..

சரி.. சரி கொஞ்சுனது போதும் நீ கிளம்பு.. நல்லா பிரசன்ட் பன்னனும்.. என்னோட செல்ல டப்பாக்கு என் இதயம் கணிந்த வாழ்த்துக்கள்...

ம்.. தேங்க்ஸ்டா.. நான் மாமாக்கு கால் பன்னீரேன் நீ இங்கயே இரு..

சரி நான் அப்பா வர வரைக்கும் எங்கயும் போகல காத்திருக்கேன்டா..

மனமேயில்லாமல் அவளின் வற்புறுத்தலில் கிளம்பி சென்றான் ஆகாஷ்..

தகரடப்பா.. எனக்கு தெரியும்டா.. என்மேல உனக்கு எவ்வளவு பாசம்ன்னு தெரியும்டா.. செல்ல தகரடப்பா.. என அவன் சென்ற திசையை பார்த்து கூறினாள் மனு.. அவள் புன்னகையுன் திரும்பவே அங்கு அவளையே பார்த்த படி அபி அமர்ந்திருந்தான்..

என்ன ஜித்து அப்படி பார்க்கர..

ம்.. ஒன்னும்யில்ல.. நீ எப்படி இப்போ வீட்டுக்கு போவ..

அது ஒன்னும் பிரச்சனையில்ல ஜித்து.. அப்பா இப்போ வந்திருவாரு நான் போயிக்கரேன்.. நீ போ ஜித்து..

பரவால்ல கர்னி.. உங்க அப்பா வந்த அப்பரமே நான் போரேன்.. 

அங்கு அதற்கு மேல் மௌனமொழி மட்டுமே நிழவியது.. நான்கு விழிகள் மட்டுமே அங்கு பேசிக்கொண்டன.. மௌனபாஷைகளாக..

கர்னிக்கு ரேடியோன்னா பிடிக்குமா.. மௌனத்தை களைத்து பேச்சை தொடங்கினான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.