(Reading time: 18 - 36 minutes)

போதும்பா சண்டை போட்டது.. ஏன் இப்படி அடிச்சுக்கிருங்க.. நான் ரொம்ப நேரமா இங்க இருக்கேன் எப்போ சண்டைய முடிப்பீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களா.. அபி பரிதாப குரலில் கேக்கவே சண்டையை நிறுத்தினர் அதுவும் தற்காலிகமாக..

ஆமா பாஸ் உங்க பேர் என்ன.. இந்த ஓட்டவாயி கூட பேசுனதுல்ல உங்கல்ல டீல்லவிட்டேன்

அது சரி நீங்க என்ன இப்படி சண்டைபோடரீங்க.. உங்களுக்கு எங்க வீடே பரவாயில்ல போல..

அது ஸ்கூல் படிக்கும் போது ஆரம்பமாது எங்க சண்டை.. என்ன காரணம்ன்னு எல்லாம் தெரியல்ல பாஸ் எதையாவது வச்சு சண்டை போடுவோம்.. அப்படி எதுவும் கிடைக்கலையா எதுவும் சண்டையில்லைன்னே தனியா ஒரு சண்டை போடுவோம் நாங்க...

மனு கிளாஸ்ல உங்ககிட்ட பேசுனது வெச்சு நீங்க பயங்கர எனிமிஸ்ன்னு நினைச்சேன் இவ்ளோ க்ளோஷ்ன்னு நினைக்கல..

அபி மனுவை சகஜமாக நினைத்து அவளை ஒருமையில் பேசியதை ஆகாஷ் கவனித்தானோ இல்லையோ மனுவின் கவனத்திற்கு வந்தது.. ஆனாலும் வெளிகாட்டிக்கொள்ளவில்லை அவள்..

ஓ அதுவா ரெண்டுநாளைக்கு முன்னாடி மனுகிட்ட சொல்லாம வெளிய போயிட்டேன்... இது மேடம்க்கு தெரிஞ்சு செம கோவம் அவ்ளோ தான்... உங்கள அறிமுக படுத்தவேயில்லையே...

ஆமாப்பா... எனக்கு தண்ணீ கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி... அப்போ வழியா இருந்ததா அதான் நீங்க கேள்வி கேட்டப்பா திட்டீட்டேன் தப்பாநினைச்சுக்காதீங்க..

பரவாயில்ல நானும் உங்க கூடதான் உங்க கிளாஸ் தான் அபி.. அபிஜிக்த்..

ஏ.. ஜித்து.. பேர் நல்லாயிருக்கு ஜித்து.. அவள் விழிவிரித்து கூறியபோது சொக்கித்தான் போனான் அபி...

அவன் பெண்களையே கண்டதில்லை என்றேல்லாம் கூறமுடியாது.. பெண்கள் மீது அதிக மரியாதை வைத்துள்ள ஆண்மகன்.. அவனை நெருங்கி வரும் பெண்களை கூட மனம் நோகவிதத்தில் விலகுபவன்.. ஆனால் இவளின் இந்த செல்ல சிணுங்களில் ஏனோ சொக்கிபோனான்.. காலையிலும் மனு அவள் அப்பாகிட்ட கொஞ்சினதும்.. இப்போ ஆகாஷ்கிட்ட திட்டுவாங்க கூடாதுன்னு கொஞ்சுனதும்.. இதுவரை அவனை யாரும் அழைத்திராத பெயர் கூறி அவள் விழிவிரிந்ததும் அவனை கொஞ்சம் அசைத்துத்தான் பார்த்தது.. அவனாலே நம்ப முடியவில்லை பார்த்த நிமிடத்தில் இருந்து தன் மனதை அவள் ஆட்சிபுரிகிறாள் என்று அவனை நம்ப மறுத்தது..

அது சரி ஓட்டவாயி எல்லாரும் ஒருமாதிரினா நீ வேரமாதிரி.. அபின்னு தானே அவரை கூப்பராங்க உனக்கு என்ன நீயும் அபின்னே கூப்பிடு.. ஆகாஷ்சின் பேச்சே அபியை நடப்புக்கு கொண்டுவந்தது

ஏ எனக்கு ஒன்னும் பிரச்சனையில்ல.. அப்பரம் சேம் கிளாஸ் நீங்க எல்லாம் வேண்டாம்

சரி அபி...

எனக்கு ஓகே ஜித்து.. இன்னைக்கு சீக்கரம் வீட்டுக்கு போகனும்..

எதுக்கு மனு.. இன்னும் கொஞ்ச நேரம் தான் அத்தை நிம்மதியா இருக்கட்டுமே..

டே... டப்பா அப்போ என்னை தொல்லைன்னு சொல்லரீயாடா..

அப்போ இல்ல செல்லம்.. எப்பவும் நீ தொல்லை தான் டீ..

டப்பா.. தகரடப்பா.. சொல்லீட்டே ஆர்வகோளார்ல கால்வழியை மறந்து அவனை அடிக்க எழுந்தபோது வழியில் நிக்கமுடியாமல் தடுமாரி விழும்போது அவளை விழாமல் அபி பிடித்து கொண்டான்..

மனுவும் விழப்போகிரோம் என்னும் போது ஒரு கை காப்பாற்றவரும் போது அதை விடவே மாட்டேன் என பிடித்து கொள்கிறாள்..

மனுவிழும் போது அவளை பிடித்துக்கொண்டவன்.. அவ்வளவு அருகில் அவளின் முகம் கீழேவிழுந்திவோமோ என்ற பயத்தில் அபியின் சட்டையை இருக்கி பிடித்துக்கொண்டு கண்னை மூடியிருந்தவளை பார்த்தவனின் நிலைமைதான் ம்.... சொல்லவேர வேணுமா...

அவள ஏன் பிடிச்சீங்கவிடுங்க பாஸ் கீழவிழுகட்டும்... –ஆகாஷ்

அவன் கூறியதை கேட்டவள் ஆகாஷ்சை முறைத்துக்கொண்டு இருக்கவே.. நம்ம ஹீரோ மனுவ அலேக்காக தூக்கிகொண்டு பென்சில் அமர வைத்தான்.. அவனின் இச்செயலில் அதிர்ச்சியிருந்தாலும் நம்ம மனுவும்,ஆகாஷ்சும் வெளிகாட்டிக்கொள்ளவில்லை..

அப்போது ஆகாஷ்க்கு போன்வரவே... அதை அவன் எடுக்காமல் கட்பன்னவும்மே மனு புரிந்துகொண்டாள்..

மீட்டீங் இருக்காடா டப்பா..

அதவிடு மனு.. வா வீட்டுக்கு போகலாம் அத்தை கையால காபி குடிச்சே ஆகனும்.. வா என அழைத்தவனின் கையை பிடித்து

உனக்கு முக்கியமான மீட்டீங் இருக்கு தானே உண்மையை சொல்லு எனக்கு தெரியும்டா..

மனுகுட்டி இருக்கு தான்.. உன்னவிட முக்கியம் இல்லைடா....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.