(Reading time: 18 - 36 minutes)

புன்னகையுடனே ரொம்ப பிடிக்கும் ஜித்து.. நான் சின்னபிள்ளையில்ல எங்க கிராமத்துல இருக்கர எங்க தாத்தா வீட்டுக்கு கொண்டுபோயிவிட்டாங்க அப்போ எங்க அம்மா வயித்துல ஆரா இருந்தா என்னோட தங்கை அதனால அங்க விட்டுயிருந்தாங்க அங்க அப்படி இருக்கும் சுத்தியும் பசேல்ன்னு ஊரே சொந்தம்ன்னு அவ்வளவு நல்லாயிருக்கும்.. அங்க தான் எங்க தாத்தாக்குன்னு கொஞ்ச நிலம் இருந்தது அதுல விவசாயம் பகல் எல்லாம் பாப்போம் நானும் கொஞ்சம் உதவி பன்னுவேன்.. பொழுதுசாய்ந்ததும் வீட்டுக்கு வருவோம்.. பாட்டி பன்னிவச்ச களியையும் தேங்காசட்டினியையும் சாப்பிட்டு.. வெளிய வானத்தை பாத்துகிட்டே மரகட்டில்ல.. தாத்தா மேல படுத்துகிட்டே ரேடியோ கேட்பேன்.. அவ்வளவு அற்புதமா இருக்கும் தெரியுமா.. என்ன எனக்கு இரண்டு இல்ல மூனு வயசு தான் இருக்கும்.. தாத்தா எப்பவும் சொல்லுவாரு ஆகாசத்தை பாத்துகிட்டு ரேடியோ கேக்கரது எம்புட்டு சுகம் கண்ணுன்னு மனசார அவர் சிரிச்சிகிட்டே சொல்லுவாரு.. எனக்கு அவரோட அந்த சிரிப்பு மனசுல்ல பதிஞ்சஒன்னு.. அப்போ இருந்தே ரேடியோ மேல கொல்லபிரியம்..எப்பிடியாவது இதே போல நானும் ரேடியோவில்ல பேசனும்ன்னு ஆசை..

கர்னி கனவு பின்னாடி இவ்வளவு பெரிய கதை இருக்கா.. நைஷ்..

இது வரை என்ன யாரும் உனக்கு ரேடியோ ஏன் பிடிக்கும்ன்னு கேக்கலை.. நான் ஆசைபட்டா அதை தாராலமா செய்ய எனக்கு சுதந்திரம் கொடுத்ததுனால கேட்டதுயில்ல.. நீ கேட்டியா அதான் சும்மா சொன்னேன்..

இன்னும் இந்த அப்பா என்ன பண்ணராருன்னு தெரியல்ல எனக்கு வைட் பன்னரது சுத்தமா பிடிக்காதுன்னு நல்லாதெரிஞ்சும் அப்பா ஏன் இப்படி பன்னராரு..

ரொம்ப திட்டாதடா செல்லம்..

அந்த குரழை கேட்டதும் ப்பா.. என கையை நீட்டீ உற்சாகமாக அழைத்தாள்..

சிறுபுன்னகையுடன் அவளின் கையை பிடித்துக்கொண்டு அவள் அருகில் அமர்ந்தார்

ஏன் ப்பா.. இவ்ளோ லேட்.. என்னை காக்கவைக்கரது அவ்வளவு பிடிச்சுயிருக்காப்பா..

அச்சோ மனுகுட்டி வைட்பன்ன வச்சதுக்காக என்ன பன்னலாம்..

இன்னைக்கு அப்பா சமையல்..

நீ என்ன மனுகுட்டி என்னை சமைக்கவைக்கரதுல்ல அவ்வளோ ஹேப்பி..

ப்பா உங்க கையாள சமைச்சு சாப்பிரதுல எனக்கு அவ்ளோ இஷ்டம்.. சும்மா தேவாமிருதம் போல இருக்கும் ப்பா..

அது சரி.. இது என்ன கால்ல..

ஆமா மிஸ்டர்.கேகே நான் காலேஜ் முடிச்சு வரும் போது கீழே பாக்காம விழுந்துட்டேன் ரொம்ப வழிக்குது மிஸ்டர்.கேகே

ஆகாஷ் போன் பன்னான் மனுகுட்டி.. என்ன அங்க இருக்கவிடலை நான் காரை எடுக்கர வரைக்கும் அவன் போனைவைக்கலை..

இன்னைக்கு முக்கியமான மீட்டீங்க ப்பா அவன் போகமாட்டேன்னு நின்னான்.. நான் தான் கம்பள் பன்னி அனுப்பிவச்சேன்.. இல்லைன்னா நகந்திருப்பானா.. ஆ மிஸ்டர்.கேகே இது யாருன்னா..

நான் அபிஜிக்த் பிஇ கம்பியூட்டர் டிபார்ட்மென்ட்..

ஹாய் யங்மேன் என இருவரும் பரஸ்பர கைகுளுக்கல் முடிந்தது..

சரிங்க அங்கிள் நான் கிளம்பரேன்.. பாய் கர்னி..

பாய் ஜித்து.. பாத்து போ.. அவர்களிடமிருந்து விடைபெற்றான்..

என்ன மனுகுட்டி முதல்நாள் கல்லூரி உன்னை இப்படி விழவச்சிருச்சு போல..

மிஸ்டர்.கேகே நீங்க நினைக்கர மாதிரி இல்ல ப்பா..

நான் எதுவும் நினைக்கலை மனுகுட்டி..

அதை எல்லாம் விடுங்க மிஸ்டர்.கேகே இன்னைக்கு ஒரு புது புரோகிராம் தொடங்குது.. அந்த புரோகிராம் பன்னரவங்க கொஞ்சம் பிரேக்ல இருக்காங்க அதனால நான் தான் அந்த புரோகிராம் பன்னபோரேன் மிஸ்டர்.கேகே..

வாவ்.. சூப்பர்டா குட்டி.. எத்தனை மணிக்கு புரோகிராம்..

நைட் 10.30 மணிக்கு..

அது சரி இதுக்கு உங்க ம்மா ஓகே சொல்லுவாளா..

எனக்கு எந்த கவலையும் இல்ல ஏன்னா சம்மதம் வாங்கி தர தான் என்னோட செல்ல அப்பா இருக்காரே..

மனுகுட்டி என்னை கொன்னுருவா உங்க அம்மா..

ஆமா.. ஆமா.. சொன்னாங்க சொன்னாங்க.. நீங்க ரொம்ப பயந்தவர் தான்.. அம்மாகிட்ட நீங்க தான் பேசனும்..

இது பார் மனுகுட்டி இது உன்னோட தேவை அதனால நீயே உங்க அம்மாகிட்ட கேட்டுக்க..

ஒன்னும் தேவையில்ல எங்க அம்மாகிட்ட நானே பேசிகரேன்..

சரி வா போகலாம்..

என்னால நடக்க முடியல்ல என்ன தூக்கிட்டு போங்க..

தங்கபட்டு நான் உனக்கு ரொம்ப செல்லகொடுத்து ஊட்டி.. ஊட்டி.. வளர்ததுனால என்னால தூக்கமுடியாது மனுகுட்டி பெரியமனசு பன்னி நீயே வாடா குட்டி..

அப்போ நான் குண்டா இருக்கன்னா ப்பா..

அப்படின்னு சொல்லீரமுடியாது.. ஆனா பாத்தா அப்படி தான் இருப்பா செல்லம்..

மிஸ்டர்.கேகே நான் எப்படி இருந்தா நல்லா இருக்கேன்..

நீ... நீயா இருக்கும் போது தான்டா அழகா இருக்க..

சரி ஏதோ சொல்லரீங்கன்னு விடரேன்.. என்ன அப்படியே கைதாங்களா கூப்பிட்டு போங்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.