(Reading time: 18 - 36 minutes)

எப்படியோ மனுவ கூப்பிட்டு வீடுவந்து சேர்வதுக்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது மிஸ்டர்.கேகே-க்கு..

எப்படி மனுகுட்டி உன்னை ஸ்டேசன்ல சமாளிக்கராங்க..

அதுவா மிஸ்டர்.கேகே என்ன எப்படி சமாளிக்கமுடியும்.. உங்கள போல தான் சமாளிக்கரமாதிரி நடிக்கராங்க..

அங்கையும் இதே கதை தானா..

விளையாடுனது போதும் கேகே.. மிசஸ்.கேகே கிட்ட பர்மிசன் மட்டும் வாங்கி கொடுங்க மிஸ்டர்.கேகே..

அங்க என்னம்மோ நானே பாத்துக்கரன்னு வீர வசனம் எல்லாம் பேசுன இப்போ என்ன ஆச்சு..

அட அதை விடுங்க கேகே இப்போ விஷயத்துக்கு வாங்க..

அரசியல்வாதிங்கள விட சீக்கரமா கொடுத்த வாக்கை மறக்கர மனுகுட்டி நீ..

மிஸ்டர்.கேகே உங்களுக்கு எத்தனை தடவை சொல்லரது என்னை இப்படி புகழ்ந்து தள்ளாதீங்கன்னு கேக்கரதே இல்ல போங்க கேகே என அவள் சளித்துக்கொண்டு வீட்டிற்குள்ளே சென்றுவிட்டாள்..

இப்போ நான் எங்க இவளை புகழ்ந்து தள்ளுனேன்.. பயபுள்ள இதை யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க.. நானே என்னோட பொண்ணுக்கு அரசியல் சொல்லிகொடுக்கரமாதிரி போசிட்டுபோராளே.. ஆ.. ஆ.. இதை மட்டும் என் தர்மபத்தினி கேட்டுயிருந்தா நான் தான் அவளை கெடுக்கரேன்னு எனக்குள்ள வேப்பிளை அடிப்பா.. இனி வீட்டுல கொஞ்சம் சாக்கரதையா தான் இந்த மனுகுட்டி கிட்ட பேசனும்.. இல்ல அடி கண்பாம்..

வீட்டிற்குள் நொண்டி நொண்டி வந்தவளை பார்த்து பதறிபோய் அவளிடம் வந்தார் கமலா..

என்னடி பன்னுன.. கால்ல என்ன.. எங்க போயி விழுந்த.. யாரை என்ன வம்புபன்னிவச்சிருக்க.. பெரிய அடியா.. மூச்சுவிடாமல் கேள்விகனைகளை தொடுத்தார்..

மூச்சு விட்டுக்கோ செல்லம் உன்னோட பொன்னுக்கு எதுவும் ஆகலை ரொம்ப நல்லா தான் இருக்கரா..

கிண்டல்லா பன்னறீங்க.. இவ நொண்டிகிட்டேவரவும் பயந்தே போயிட்டேன்ங்க..

அச்சோ மிசஸ்.கேகே நான் நல்லா தான் இருக்கேன் காலேஜ் முடிச்சு வரும் போது கீழகுழில காலவிட்டு விழுந்துட்டேன்.. ஒரு சின்ன சுளுக்கு தான் வேர ஒன்னுமேயில்ல மிசஸ்.கேகே..

ஏன்டி கண்ண எங்க வச்சுகிட்டு வந்த கீழபாத்து எல்லாம் வராம எங்க பராக்கு பாத்துகிட்டு வந்த..

போதும் செல்லம் அவளே வழில வந்துயிருக்கா திரும்பவும் நீ திட்டுனா எப்படி எதாவது சாப்பிட கொண்டு வா செல்லம்..

கமலா கிட்சனுக்கு சென்று மனுவிற்கு பாலில் மஞ்சளை போட்டு கொண்டுவந்தார்.. கூடவே கண்ணனுக்கு காபியுடனும் வந்தார்..

கணவனிடம் காபியை கொடுத்துவிட்டு இதை குடி மனு வழி போகும் என பாலை அவளுக்கு கொடுத்துவிட்டு அவளின் காலுக்கு மருந்து தடவலானார்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பாலை குடித்துக்கொண்டே அன்றைய நாளின் நடந்தவைகளை சொல்லிக்கொண்டுயிருந்தாள்.. இடையே மிசஸ்.கேகே ஒன்னு தெரியுமா நான் இன்னையில இருந்து புது புரோகிராம் பன்னபோரேனே என உற்சாகமாக தெரிவித்தாள்..

சூப்பர் டா குட்டி நல்லா பன்னனும்.. எத்தன மணிக்கு டா செல்லம் போகனும் என கேட்கவே

10.30 க்கு ஆரம்பம் மிசஸ்.கேகே.. அதே உற்சாகத்தோடு கூறினாள்..

அது என்ன நைட் 10.30 மணிக்கு புரோகிராம்.. நீ அதை எல்லாம் பன்ன வேண்டாம் மனுகுட்டி உன்னோட ஸ்டேசனுக்கு போன்பன்னி சொல்லீரு..

அம்மா 10.30 மணின்னா என்ன ம்மா பிரச்சனை.. அது மட்டும் இல்ல இந்த புரோகிராம் என்னோடது இல்ல வேரவங்க பன்ன வேண்டியது ஆனா அவங்களால வர முடியல்ல அதான் அதுவரைக்கும் நான் பன்னரேன்

ஆனா அதுக்காக நைட் தான் போகனுமா..

இல்ல மனுகுட்டி வேண்டாம் காலம் ரொம்ப கெட்டு இருக்கு உன்னை அனுப்பி வச்சுட்டு நீ வர வரைக்கும் என்னால எல்லாம் வயித்துல நெருப்ப கட்டிகிட்டு இருக்க முடியாது..

வயித்துல நீ ஏன் ம்மா நெருப்பகட்டிகிட்டு இருக்க.. நான் வேளைக்கு போரதுக்கும் இதுக்கும் என்னம்மா சம்மந்தம்..

எல்லாத்துக்கும் விளையாடத மனுகுட்டி..

மனுகுட்டி..

சொல்லுங்க அப்பா..

அம்மா சொல்லரத கேளுடா.. விளையாடுனது போதும்.. அவ உண்மையா கவலைபடரா மனுகுட்டி..

அதான் ப்பா நான் சொல்லரேன் ஏன் கவலைபடனும்ன்னு..

நல்லாயிருக்கு மனு உன்னை அனுப்பி வச்சுட்டு அதுவும் நைட் நாங்க எப்படி நிம்மதியா தூங்கரதாமா.. காலம் இப்போ ரொம்ப கெட்டுபோயிருக்கு மனு உனக்கு எப்படி நான் அதை புரியவைப்பேன்..தினமும் தான் பேப்பர்,டிவில எல்லாம் பாக்கரேனே.. நீ தைரியமான பொன்னு தான் ஆனா உன்ன போல தைரியம் எனக்கு இல்ல

அம்மா தேவையில்லாம பயபடறீங்க.. தப்பு பன்னர அவங்க எல்லாம் சுதந்திரமா இருகாங்க.. தப்பே பன்னாத நாங்க ஏன் ம்மா எங்க கனவுன்னு எல்லாத்தையும் விடனும்..

உன்னோட கனவுகளை நீ விடனும்ன்னு நான் எப்பவும் நினைச்சது கூட இல்லா மனு உனக்கு என்னால ஆன உதவிகளை தான் பன்னிருக்கேன் கலைக்கனும்ன்னு நான் எப்பவும் நினைக்கமாட்டேன் இனி உன்னோட விருப்பம் மனுகுட்டி கூறிவிட்டு எழுந்துவிட்டார்..

மனுகுட்டி அவங்க அம்மாவ எப்படி சமாளிச்சு ரேடியோஸ்டோசன் போனாங்களா இல்லாயான்னு பொறுத்துபாக்கலாம்..

தங்களின் கருத்துகலுக்காக காத்திருப்பேன் தோழமைகளே..

தொடரும்

Episode # 02

Episode # 04

Go to Valentines day story main page

{kunena_discuss:1230}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.