(Reading time: 12 - 24 minutes)

“சுடர் வந்ததிலிருந்து இரண்டு முறை இங்கு வந்தும் அமுதன் வீட்டிற்கு வரவில்லையே, ஏன் எங்க மேல ஏதாவது கோபமா?”  என்று ஆனந்தியிடமும் எழில் குறையாக சொல்ல,

அவனுக்கு கதிர் மீது கோபம் இருப்பதை ஆனந்தியால் வெளிப்படையாக சொல்ல முடியாமல், அமுதனுக்கு தொடர்பு கொண்டு, “சுடருக்காக யோசிச்சு கதிர் மேல கோபம் இருந்தாலும், அதை அவங்கக்கிட்ட வெளிப்படையா காட்டக் கூடாது.. ஒரு பார்மாலிட்டிக்காகவாவது சும்மா போய் ஒருமுறை அவங்களை பார்த்துட்டு வா..” என்று கூறினார்.

அதனால் அமுதனும் அவர்களோடு சுடர் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்திருந்தான். ஆனால் சுடருக்கு தான் இப்போது வீட்டுக்கு செல்ல பிடிக்கவேயில்லை. இத்தனை பேரும் வீட்டுக்கு வந்தால் பொதுவாக சுடருக்கு மகிழ்ச்சியாக தான் இருக்க வேண்டும், ஆனால் அவளால் அதற்கு மகிழ்ச்சி அடைய முடியவில்லை.

கதிர் இந்நேரம் வீட்டில் இருப்பார். இவர்கள் அனைவரோடும் நன்றாக பேசவும் செய்வார். அத்தனை பேரும் அங்கு இருக்க, வழக்கமாக அவளால் தனியாக அறையில் அடைந்துக் கொள்ளவும் முடியாது. மற்றவர்களோடு இருந்து தன் தந்தை அனைவரோடும் பேசுவதை  ஏக்கப் பார்வை பார்க்கவும் முடியாது. அப்படியிருக்க இப்போது என்ன செய்வது? என்று அவள் யோசிக்க,

இதுவரை இருந்த மலர்ச்சி முகத்தில் குறைந்து அவள் முகம் வாடிப் போனதை மகியும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அவனால் அவள் சொல்லாமலேயே அவள் என்ன நினைத்து கவலைக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்துக் கொள்ள முடிந்தது.

“அமுதன் நான் இவங்க தனியா போக வேண்டாமேன்னு தான் கூட போலாம்னு இருந்தேன்.. இப்போ தான்  நீயும் எழில் அத்தை வீட்டுக்கு போறீயே, எனக்கு கொஞ்சம் ரெஸ்ட்டாரன்ட் வேலை இருக்கு.. அறிவு வேற இன்னும் ஊர்ல இருந்து வரலையா? அதனால எல்லாமே நானே பார்க்க வேண்டியதா இருக்கு.. நீ கூப்பிட்டியேன்னு தான் அங்க ஆளுங்களை பார்த்துக்க சொல்லிட்டு ஷாப்பிங் வந்தேன்.. அதனால நீயே இவங்களை கூட்டிட்டு போறீயா?” என்றுக் கேட்டான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மகி உடன் வரவில்லையென்றால் எப்படி? என்று சுடர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, “சுடர் நீயும் என்னோட ரெஸ்ட்டாரன்ட் வர்றீயா? எனக்கும் உதவியா இருக்கும்..” என்று மகி அழைத்ததும், அவளும் உடனே சரி என்று தலையாட்டினாள்.

சுடரும் இப்போது வரவில்லையென்றால் தான் எதற்கு செல்ல வேண்டும் என்று யோசித்தாலும். அந்த நேரம் அமுதன்,  “என்னோட தனியா வர அவ்வளவு யோசிச்ச, நீங்க எதுக்கு எனக்கு வாங்கிக் கொடுக்கணும்னு கேட்ட, இப்போ மகியே என்னை உங்களுக்கு துணையா அனுப்புறான் பார்த்தீயா?” என்பது போல் அருள்மொழியை ஒரு பார்வை பார்த்தவன்,

“சரி மகி.. எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லை.. நான் எல்லோரையும் பத்திரமா கூட்டிட்டு போறேன்.. நீங்க ரெண்டுப்பேரும் ரெஸ்ட்டாரண்ட் போயிட்டு வாங்க..” என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

“ஹே மச்சி.. அன்னைக்கு சார்லஸ் கூட போக எவ்வளவு யோசிச்சோம்.. இன்னைக்கு பாரேன் நமக்கு சார்லஸ் துணையாம்..” என்று சொல்லி இலக்கியா அருள்மொழியின் முறைப்பை பரிசாக வாங்கிக் கொண்டாள்.

இந்த நேரம் அமுதனை விட அருள்மொழிக்கு மகி மீது தான் அதிக கோபம் வந்தது.

“ரொம்ப தேங்க்ஸ் மகிழ்.. இந்த நேரம் வீட்டுக்கு போக வேண்டாம்னு யோசிச்சேன்.. அதுக்கேத்த போல நீயும் ரெஸ்ட்டாரன்ட்க்கு கிளம்பிட்ட, கூட என்னையும் கூட்டிட்டு போற.. தேங்க் யூ சோ மச்..” என்று சுடர் மகியிடம் கூற,

“எனக்கு தெரியும்.. வீட்டுக்கு போனா அப்படியே ரூம்லயே அடைஞ்சு கிடக்குற ஆள், இன்னைக்கு நாங்கல்லாம் வரப்போ என்ன செய்றதுன்னு தானே நினைச்ச?” என்று அவன் கேட்கவும்,

“எப்படி மகிழ் நீ தெரிஞ்சிக்கிட்ட..” என்று அவள் திருப்பிக் கேட்டாள்.

‘அதான் அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்ப பார்த்தேனே.. உண்மையிலேயே சொல்லப் போனா, அன்னைக்கு உன்ன அப்படி பார்க்கவும் தான் உன்கிட்ட முன்ன மாதிரி பேசாம இருக்கக் கூடாதுன்னே தோனுச்சு..

ஆனாலும் இப்பவும் நீ அப்படியே இருக்கக் கூடாது சுடர்.. நீ இப்படி ரூம்லயே அடைஞ்சு கிடந்தா கதிர் மாமாவும் அப்படியே தான் இருப்பாரு.. நீயா அவரோட பேச ட்ரைப் பண்ணு..” என்று அவன் சொன்னதும்,

“ம்ம் பார்க்கலாம்.. இருந்தாலும் என்னோட சூழ்நிலையை புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கிட்ட.. சோ ஸ்வீட் மகிழ்..” என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

அப்படியே சிறிது நேரம் அவனுக்கு உதவியாக அவள் ரெஸ்ட்டாரன்ட்டில் இருக்க, மகிக்கு அலைபேசியில் அழைப்பு வரவும் அவன் எடுத்து பேசினான்.

அவ்வளவு நேரம் சுடர் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க, மகி யாரோடு பேசினான்? என்ன பேசினான்? என்பதை அவள் அறிந்ததும், அவள் மனதில் கவலை சூழ்ந்துக் கொண்டது.

உறவு வளரும்...

Episode # 38

Episode # 40

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.