(Reading time: 14 - 27 minutes)

"ஐயா" ஹெரால்ட் மெதுவாய் அழைத்தார்.

முதியவர் திரும்பினார்.

சிறு வயதில் திடகாத்திரமாய் கண்ட கடை முதலாளி காலத்திடம் தன் இளமையை கொடுத்துவிட்டு இயலாமையை சுமந்துகொண்டிருந்தார்.

"வாங்க சார். என்ன வேணும்?"

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"சாக்கோ மில்க் சாக்லேட்" என விளம்பரப் பலகையை கை காட்டினார் ஹெரால்ட்.

தனது மூக்குக்கண்ணாடியை ஒருமுறை தூக்கிப் பார்த்தவர், "ஆமா சார், ரொம்ப காலமா மூடியிருந்த கம்பனி திரும்ப ஆரம்பிச்சிருக்காங்க. உங்களுக்கு வேணுமா?"

ஆவலோடு, "ஆமா" என்றார் ஹெரால்ட்.

சாக்லேட் பாக்கெட்டினை எடுத்து அவரிடம் நீட்டினார் முதியவர். ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஹெரால்ட்னு ஒரு சின்ன பையன் காசில்லாம வந்து சாக்லேட் கேப்பான். சாக்லேட் வாங்கிட்ட அப்புறம் காசு நாளைக்கு தரேன்னு சொல்லுவான். அவன் மேல கோபம் வந்தாலும் வேடிக்கையா இருக்கும்.

சாக்லேட்டினையே பார்த்துக்கொண்டிருந்த ஹெரால்ட் முதியவரைப் பார்த்தார்.

"ஐயா"

"சொல்லுங்க"

"காசு நாளைக்கு தரட்டுமா?" பழைய ஹெரால்டாய் கேட்டார்.

முதியவரின் விழிகள் அகல விரிந்தன. திடீரென கிரிஸ்டியனா உள்ளே நுழைந்தாள்.

"அப்பா என்ன செஞ்சுட்டு இருக்கிங்க? டாக்டர் தான் ஸ்வீட் சாப்பிடக் கூடாதுன்னு ஸ்டிரிக்டா சொல்லிருக்காருல" என அவரிடமிருந்த சாக்லேட்டினைப் பறித்து பெரியவரின் முன்னிருந்த மேஜையில் வைத்துவிட்டு ஹெரால்டை கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்.

முதியவரின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன. திடீரென ஹெரால்டின் அம்மா கடையினுள் நுழைந்து, "காசு தான் இல்லையே, எதுக்கு உனக்கு சாக்லேட்?" என ஹெரால்டை பிடித்து இழுத்து சென்றபோது ஹெரால்ட் கடைக்காரரை எப்படி பார்த்தானோ இன்றும் அவ்வாறே பார்த்தார்.

வீட்டுக்கு சென்ற ஹெரால்ட் இரண்டு நாட்கள் ஓய்வென்ற பெயரில் நிம்மதியின்றி தவித்தார்.

ஹெரால்டிற்கு பிறந்தநாள் வந்தது. நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் கலந்து சிறப்பித்தனர். அவர்கள் கொடுத்த பரிசுகளை வாங்குவதும் மகளிடம் கொடுப்பதும் என வேண்டாவெறுப்போடு தனது பிறந்தநாளை கசப்பாய் கழித்துக்கொண்டிருந்தார் ஹெரால்ட்.

கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு கடைக்கார முதியவர் தடுமாறியபடி நடந்து வந்தார். அவரைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்த ஹெரால்ட் முதியவரை கைத்தாங்கலாக பிடித்து அழைத்து வந்தார்.

முதியவர் தான் கொண்டு வந்த சாக்கோ மில்க் சாக்லேட்டினை அவருக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்து ஊட்டியும் விட்டார். சாக்லேட்டின் சுவையை மெய்மறந்து சுவைத்த ஹெரால்டின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

"அப்பா சாப்பிடாதிங்க" என கிரிஸ்டியனா தடுக்க வந்தபோது முதியவர் வேண்டாம் என கை காட்டி அவளை தடுத்து நிறுத்தினார்.

"அன்புக்கு எந்த கட்டுபாடும் இல்லை" என்ற முதியவர் ஹெரால்டை பார்த்தார்.

ஹெரால்ட் பெரியவரை சிறிய குழைந்தையைப் போல் கட்டிப் பிடித்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.

சாக்கோ மில்க் விளம்பரத்தை திரையில் கண்ட எல்லோரும் கைதட்டியபடி எழுந்து நின்றனர்.

ஹெரால்டைப் போல் கண்களில் கண்ணீரோடு நின்றுகொண்டிருந்தான் வசந்த்.

தொடரும்...

Episode # 59

Next episode will be published on 25th Jan. This series is updated fortnightly on Fridays at AN.

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.