Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Login

Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ஐ லவ் யூ - 20 - Chillzee Story - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - ஐ லவ் யூ - 20 - Chillzee Story

I love you

வெற்றி சொன்ன சொல் தவறாமல் காலேஜ் சீட் வாங்கி கொடுத்து விட்டான் என்பதற்காக படிக்காமல் கையெழுத்து போட்டுக் கொடுக்க முடியுமா?

அது மாதிரி யாரையும் நம்ப கூடாது என்று தான் ஷ்யாம் சுந்தர் அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறானே!

வெற்றி சொன்ன லாயர் போன் நம்பரை எடுத்தவள் அங்கிருந்த  போனில் அந்த நம்பரை அழைத்து பேசினாள்.

மொபைலில் மெசேஜ் தட்டிக் கொண்டிருந்த வெற்றியின் முன்னே சென்று நின்றாள் தமிழ்ச்செல்வி.

கையில் வைத்திருந்த கற்றை காகிதங்களை அவன் பக்கமாக நீட்டினாள்.

“இது என்னோட அக்ரிமென்ட், படிச்சு பார்த்து சைன் போட்டுட்டு உங்க அக்ரிமெண்ட்டை என் கிட்ட இருந்து வாங்கிக்கோங்க. நான் சைன் போட்டு வச்சிருக்கேன்”

அவளை எரித்து விடுவது போல சூடாக பார்வை பார்த்தான் வெற்றி.

“திமிரா உனக்கு?”

“ஏன்?”

“ஒண்ணுமே இல்லாம ரோட்டுல நின்ன உன்னை கூட்டிட்டு வந்து வீட்டுல உக்கார வச்சா, என் கிட்டேயே உன் திமிரை காட்டுறீயா?”

“வெற்றி சார், நீங்க படிச்சவங்க பெரியவங்க ஆனா நான் வாழ்க்கையில பட்ட வேதனைகளை நீங்க கேள்விப் பட்டுக் கூட இருக்க மாட்டீங்க. உலகத்துல யாரையும் நம்பக் கூடாதுன்னு நான் பாடம் கத்து வச்சிருக்கேன். இந்த அக்ரிமென்ட் எனக்கு மட்டுமில்ல உங்களுக்கும் நல்லது தான். முழுசா படிச்சு பார்த்தா உங்களுக்கே தெரியும்”

முதல் முறையாக குரலை தாழ்த்தி அவனிடம் தண்மையாக பேசினாள் தமிழ்ச்செல்வி.

கேள்வியாக புருவங்கள் மேலே ஏறி இறங்க, மேலோட்டமாக அவள் கொடுத்த அக்ரிமென்ட் பக்கங்களை புரட்டி விட்டு கையெழுத்து போட்டுக் கொடுத்தான் வெற்றி.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இத பத்திரப் படுத்தி வை. நாப்பது பேஜூக்கு அக்ரிமென்ட் போட்டுருக்கீயே உலக ரெகார்டா இருக்கும். கின்னஸ் புக்குல போடுறதுக்கு முன்னாடி ஆதாரம் கேட்பாங்க” – அவளை மட்டம் தட்ட சொல்லி விட்டு, ஏளனமாக உதட்டை வளைத்தான் வெற்றி.

பெரிய மஹாராஜா! என வழக்கமான கோபம் வந்தாலும் அவள் கையெழுத்து போட்ட பத்திரத்தை அவனிடம் கொடுத்தாள் தமிழ்ச்செல்வி.

“நன்றி! உனக்கு மாசா மாசம் பணம் போட சொல்லி யசு கிட்ட சொல்லிட்டேன். பணம் பத்தலை or வேற ஏதாவது வேணும்னா நீ அவக் கிட்டேயே பேசிக்கலாம்.”

உன்னிடம் பேசுவதற்கு என்னிடம் நேரம் இல்லை என்ற ரீதியில் அவன் சொன்னது மீண்டும் அவளின் கோபத்தை கிளறியது.

அவனே சொன்னது போல இதற்கு மேல் அவனிடம் அவளுக்கு என்ன பேச்சு என தேற்றி பொங்கி எழுந்த மனதை அடக்கி விட்டு நடந்தாள்.

அங்கே அறையில் யசோதா கை நிறைந்த பொட்டலங்களுடன் நின்றிருந்தாள்.

“தமிழ் உன்னை காணோமேன்னு பார்த்தேன். இந்தா எல்லாம் உனக்கு தான்”

கைகளில் நிறைந்திருந்த அனைத்து பிளாஸ்டிக் பைகளையும் தமிழ்ச்செல்வியின் கைகளில் திணித்தாள்.

“என்ன அக்கா இதெல்லாம்?”

“அவரோட கடைக்கு போனேன் அங்க கண்ணில பட்ட நல்ல டிரஸ்ல நாலஞ்சை உனக்குன்னு வாங்கிட்டு வந்தேன்”

“எனக்கா?”

“காலேஜுக்கு போக போற, மாத்தி மாத்தி போட ட்ரெஸ் வேண்டாமா?”

மனம் உருகி போய் நன்றி சொல்ல கூட தோன்றாமல் நின்றாள் தமிழ்.

“நான் வாங்கினது உனக்கு பிடிக்குதோ இல்லையோ, அடுத்த தடவை உன்னையும் கூட்டிட்டு போறேன்”

“வேணாம் இதுவே நிறைவா இருக்கு. இதுவரை அப்பாவை தாண்டி யாருமே எனக்கு இப்படி அன்பா வாங்கி தந்தது இல்ல. அப்பா கிட்டேயும் எப்போவும் பணம் இருக்காது, இருந்தாலும் அவருக்கு சித்தியை பார்த்து பயம்”

“அதுக்கு எல்லாம் சேர்த்து இப்போ உங்கப்பா தான் என் வழியா உனக்கு வாங்கி தரார்ன்னு நினைச்சுக்கோ”

“யசு நீயும் இங்கே தான் இருக்கீயா? நல்லதா போச்சு போ”

சந்திரிகாவின் வருகை அவர்கள் இருவரின் பேச்சுக்கு தடை போட்டது.

“என்னை தேடினீங்களா சின்னத்தை? அவர் கூட கடைக்கு போயிருந்தேன்”

“தேடலை யசு. தமிழ்ச்செல்வி கிட்ட கல்யாணத்துக்கான ஏற்பாடு பத்தி பேச வந்தேன். நீயும் இருந்தா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன், நீயும் இருக்க”

“கல்யாண ஏற்பாடா?”

“ஆமாம் தமிழ்ச்செல்வி. நீ வீட்டை விட்டு கோவிச்சுட்டு வந்தாலும் பெரியவங்க நாங்க அப்படி இருக்க முடியுமா? உன் சித்தி கிட்ட நேரா பேசலாம்னு இருக்கேன். அவங்க போன் நம்பர், விலாசம் தாயேன்”

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 20 - Chillzee Storysaaru 2019-01-22 22:15
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 20 - Chillzee Storymahinagaraj 2019-01-22 15:34
சோ கியூட்... :clap: :clap:
ரொம்ப நல்லா இருக்கு அடுத்தமுறை நிறையா போஜ் கொடுங்க.. ;-)
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 20 - Chillzee StoryRaVai 2019-01-22 14:01
கதையைவிட, பாத்திரப் படைப்புக்கு 'ஆகா' போடத்தோன்றுகிறது. வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 20 - Chillzee StoryAdharvJo 2019-01-22 13:34
😍😍not bad! Ippodhaikku ivaloooo softcorner irundhal podhum 👌 😜 40page agreement huh?? irukadhono life tym agree pole irukku ma'am :D interesting update 👏👏👏
mathaji Oda silent planning therindhu kola waiting. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 20 - Chillzee Storymadhumathi9 2019-01-22 13:14
:clap: nice epi.iruvarum sandai podaamal udhavi seithu kondaal nandraaga irukkum. :thnkx: 4 this epi. (y) waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top