கரணை இழுத்துக் கொண்டு புவனின் அறையை விட்டு வெளியே வந்த ஆயுஷ், நேராக ஹாலிற்கு சென்று சோபாவில் அமர்ந்தான்.
“உஸ்…. அப்பாடி… புவன் சார் மரண பயத்தை காட்டிட்டார்… அம்புட்டுதான்… இத்தோட நான் க்ளோஸ்னு நினைச்சேன்” என்று சொல்ல,
“ம்… ஆனால் அவனே எண்ட்ல ஸ்டாப் ஆயிட்டான். ஒருவேளை நம்மை பயமுறுத்த இதை செய்திருப்பானோ… “
“இனிமே நாம் அவர் வழிக்கு போகவே கூடாது. கூடவே இருந்து எல்லாம் தெரிஞ்சிகிட்டு நம்மை கவுத்திட்டார்”
“என்ன ஆயுஷ்… பயந்துட்டியா?”
“யார்னு தெரிஞ்சிக்கவே இவ்வளவு நாள் ஆயிடுச்சு. இனி அவரோட ஸ்ட்ராடஜி புரிஞ்சிட்டு அவரை எதிர்த்து நிக்கறது கஷ்டம் சார்.”
“யார்னு தெரியாமல்தான் இவ்வளவு நாள் ஆயிடுச்சு. இப்ப தெரிஞ்சிட்டது… சீக்கிரமா சால்வ் பண்ணிடலாம்”
“வைசாக் ஆவி புவன் சார் மீது ஏறி இருக்கு. அதை விரட்டனும்னா நாம பெரிய மந்திரவாதியை தேடனும். பணத்துக்கு ஆசைப்படாத நல்ல ஆளா இருந்தாதான் நமக்கு உதவ முடியும். தப்பான ஆள்கிட்ட சிக்கினோம்னா இரண்டு பேரையும் இழந்துட வேண்டியதுதான்.”
“எப்படி வைசாக்கின் ஆவின்னு சொல்ற”
“அந்த குரல் எனக்கு நல்லா தெரியும் சார். கரகரன்னு இருக்கும்… ஆனா சாஃப்டா பேசுவான்.”
“உனக்கு தெரியும்னால் புவனுக்கும் தெரியும்தானே.. அவனால் வாய்ஸ் மாற்றி பேச முடியும்தானே”
“நீங்க சொல்றத பார்த்தால் புவன் சார் நம்மகிட்ட நடிக்கிறார்னு சொல்ற மாதிரி இருக்கு”
“ம்… ஒருத்திய உயிருக்கு உயிராக காதலிப்பானாம் அப்புறம்… அவளையே கொல்லவும் நினைப்பானாம். ரெண்டுல ஏதோ ஒன்னு பொய்யாக இருக்கணும்.”
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“ஏன் சார்… ரெண்டுமே உண்மையா இருக்கலாமே… அவர் புவனா இருக்கறப்போ ஒரு மாதிரியும் வைசாக்கா மாறும்போது வேற மாதிரியும் இருக்கலாமே… ஆபிமு…. ஆபிபி”
“அப்படின்னா… ஆவி பிடிக்கும் முன்… ஆவி பிடிச்ச பின்…”
“ஓகே நானும் இதை பேய்பிடிச்ச கதையாகவே நினைச்சிருப்பேன்… வைபவ் மட்டும் என்னிடம் அந்த ‘இன்று கடைசி’ சைகையை செய்யாமல் இருந்திருந்தால்… சொல்லி வச்சு செய்றான். டோட்டல் கண்ட்ரோல் அவன்கிட்ட இருக்கு. சொல்லி வச்சு புவனை ஏவி விடறான்… இது எப்படி சாத்தியம்?”
“அப்போ ஆவி மேட்டர் இல்லையா?”
“அதுதான் எனக்கு குழப்பமா இருக்கு. இதைபற்றி நாம் அப்புறமாக பேசுவோம். இந்த விசயம் சதாவிற்கு தெரியக் கூடாது. புவனிடமும் டைரக்டா எதையும் கேட்கக் கூடாது.” என்று கூறினான்.
அவன் எழுந்து சென்று சதாவை பழையபடி அவளுடைய அறைக்கே மாற்றினான். அலங்கோலமாக இருந்த ஸ்டோர் ரூமை சரி செய்தனர்.
இத்தனையையும் முடிக்குபோது மணி மூன்றாகி விட்டது. அசதியாக ஹாலில் சோபாவிலேயே படுத்து உறங்க ஆரம்பித்தனர்.
“ஆயுஷ்… எழுந்திரு விடிஞ்சிடுச்சு” கரண் அவனை எழுப்பிக் கொண்டிருந்தான்.
கண்களை கசக்கியபடி எழுந்த ஆயுஷ்… பதறியடித்துக் கொண்டு எழுந்தான் “பு….வ…ன் சார்!”… திரும்பி பார்த்த கரண்,
”குட்மார்னிங் புவன்” என்று இயல்பாக வணக்கம் வைத்தான்.
“குட்மார்னிங்… நேத்து பிரச்சினை எதுவும் இல்லை போலிருக்கு” என்று சொல்லியபடி இருவருக்கும் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான். ஆயுஷின் முகபாவத்தை பார்த்த கரண் சைகை செய்தான்.
“ஆயுஷ்… ஏன் முழிக்கிற?”
“இப்பதான் முழிச்சேன் சார்”
“நான் அதை கேட்கலை… திருதிருன்னு முழிக்கறியே அதை கேட்டேன்.”
“அது…. டெய்லி ராத்திரி தூக்கம் டிஸ்டர்ப் ஆயிடுதா அதனால் இருக்கும்”
“நேத்து நைட் பீஸ் ஃபுல்லா இருந்துச்சு போல . நான் சவுண்ட் ஸ்லீப்”
.”ஆமாம் சார் ஸ்லீப்லதான் இருந்தார். சவுண்டெல்லாம் நாம்தான் கொடுத்தோம். விட்டுருந்தா பீஸ் பீஸாகி இருப்போம்” அருகில் இருந்த கரணுக்கு மட்டும் கேட்கும் குரலில் ஆயுஷ் முணுமுணுத்தான்.
“ நீ நல்லாதானே இருக்க….” ஆயுஷை பார்த்து கேட்ட புவன்,
“சாரி.. எங்க பிரச்சினயில நீயும் சிரமப்படற…. கரண் ஆயுஷை ரிலீவ் பண்ணிடலாமா?” என்றான். கரண் பேசும் முன் குறுக்கிட்ட ஆயுஷ்,
“நோ சார்.. இந்த விசயம் சால்வ் ஆகாமல் நான் விலக மாட்டேன்… நான் கமிட் ஆயிட்டேன்”
“ஓ….”
“ஆமாம்… ஆயுஷ் இருக்கட்டுமே. நீ உன்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிரு. நாங்க இந்த வைபவ் விசயத்தை க்ளோஸ் பண்றோம்”
You can also check the stories by genre here.
Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here
M | Tu | W | Th | F | Sa | Su | |
---|---|---|---|---|---|---|---|
Mor AN Eve |
11 EVUT PVOVN NiNi |
12 MINN ILU MAMN |
13 VD EMPM KIEN |
14 VMKK KK KaKa |
15 Sush UVME Enn |
16 Siva NKU Tha |
17 KI VTKS EK |
Mor AN Eve |
18 EVUT - NiNi |
19 MMSV ILU MAMN |
20 GM EMPM KIEN |
21 ISAK KK KaKa |
22 EU UMIN EYPI |
23 Siva NKU Tha |
24 KI VTKS EK |
* Change in schedule / New series
* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in