(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 10 - ஜெய்

Gayathri manthirathai

ந்தோஷிடம் இருந்து வந்த குறுந்தகவலை பார்த்த சக்தி உடனடியாக அவனுக்கு அழைப்பு விடுத்தான்.....

“ஏதாவது விஷயம் கிடைச்சுதா சந்தோஷ்.... எதுக்கு அவசரமா போன் பண்ண சொன்ன.....”

“இன்னைக்கு காலேஜ்ல நடந்த விஷயம் உனக்கு தெரிஞ்சு இருக்கும்...”

“ஆமாம்டா அந்த தற்கொலைதானே... என்ன போலீஸ் இதையும் ஏதானும் காரணம் சொல்லி கேஸ் க்ளோஸ் பண்ண பார்க்குறாங்களா.....”

“அந்த பொண்ணு எழுதின லெட்டர் கிடைச்சிருக்கு... அதை எவிடென்ஸ் அப்படின்னு சொல்லி தற்கொலை அப்படின்னு முடிச்சுடுவாங்க போல....”

“அது அந்த பொண்ணோட கையெழுத்துத்தானா.... நீ லெட்டர் பார்த்தியா...”

“பார்த்தேன் சக்தி... நான் அந்த கிளாஸ்க்கு பாடம் எடுக்கறதால கையெழுத்து செக் பண்ண காட்டினாங்க..... அது அந்தப் பொண்ணு எழுதினதுதான்....”

“ஆனா அதுல இருக்கற விஷயம்தான் என்னால ஒத்துக்க முடியலை..... நான் கிளாஸ்ல பார்த்த வரை நல்ல இன்டெலிஜென்ட்டான பொண்ணு அது... ஆங்கிலம் பேச தடுமாறினாலும் தட்டு தடுமாறி கேள்வி கேக்கறதோ, இல்லை பதில் சொல்றதோ செஞ்சுடும்... அப்படியே முடியலைன்னா சாரி சொல்லிட்டு தயக்கம் இல்லாம தமிழ்லயே கேக்கும்.... படிப்புல அவ்ளோ ஆர்வம்... so இந்த மாதிரி ஸில்லி விஷயத்துக்கு தற்கொலை பண்ணிக்கும்ன்னு நம்ப முடியலை.....”

“ஹ்ம்ம் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.....”

“இதெல்லாத்தையும் விட ரொம்ப வலிமையா அது தற்கொலை இல்லைன்னு நான் சந்தேகப்பட காரணம்... அந்த லிஸ்ட்ல அந்த பொண்ணு பேரு இருந்தது....”

“ஹேய் என்ன சொல்ற சந்தோஷ்.... ஆமாம் சக்தி அந்த லிஸ்ட்ல அவ பேரு இருந்தது.....”

“டேய் இதைத்தானேடா நீ மொதல்ல சொல்லி இருக்கணும்.... இப்படி எதுவும் அசம்பாவிதம் ஆகக் கூடாதுன்னுதான் சந்தியாவை அலெர்ட் பண்ணினேன்.... அவ சொதப்பிட்டா....”

“அவளை சொல்லி பிரயோஜனம் இல்லை சக்தி... நான் அங்க வேலை செய்யறதால உடனே எடுக்க முடிஞ்சுது.... அவளுக்கு அதை செய்ய கொஞ்சம் நாள் தேவைப்பட்டிருக்கும்.... உடனே அவ பண்ணாததும் நல்லதுதான்... அவசரப்பட்டு எதாச்சும் பண்ணி இருந்தா மாட்டி இருப்பா....”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஹ்ம்ம் அதுவும் சரிதான்... அவங்களுக்கு உன்மேல எதுவும் சந்தேகம் வரலையே....”

“இல்லை சக்தி... நான் இதுவரை அவங்க கேக்கற கேள்வி தவிர வேற எதுக்கும் வாயை திறக்கலை.... ரெண்டாவது வேலைல சேர்ந்தும் சில நாள்தானே ஆகுது... அதனால சந்தேகம் வர வாய்ப்பில்லை....”

“சரி எதுக்கும் நீ கவனமா இரு... அந்த பொண்ணு வீட்டுல இருந்து வந்துட்டாங்களா....”

“அது தெரியலை சக்தி..... அவங்க ஊருல இருந்து வர எப்படியும் நாலைஞ்சு மணி நேரம் ஆகும்ன்னு சொன்னாங்க.... அவங்களுக்கு தகவலே மதியத்துக்கு மேலதான் சொன்னாங்க.... அதுக்கு முன்னமே காலேஜ்லேர்ந்து உடம்பை அரசாங்க ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போய்ட்டாங்க... நான் கூடப் போனா சந்தேகம் வரப் போகுதேன்னு காலேஜ்லையே இருந்துட்டேன்... டீன் வந்து போஸ்ட்மார்ட்டம் நடக்குதுன்னு சொல்லிட்டு போனாரு....”

“ஏன் இத்தனை அவசரம் அவசரமா எல்லாம் பண்றாங்க... சரி நீ இப்போ எங்க இருக்க....”

“நான் வீட்டுக்கு வதுட்டேன் சக்தி... மாத்தி மாத்தி செய்தி சானல்லேர்ந்து வந்து கேள்வி கேக்கறாங்கன்னு இன்னைக்கு மூணு மணிக்கு மேல காலேஜ் க்ளோஸ் பண்ணிட்டாங்க....”

“சரி சந்தோஷ்.... நான் ஆளுங்களை விட்டு அங்க என்ன நிலவரம்ன்னு பார்க்க சொல்றேன்... அதே மாதிரி போலீஸ் என்ன பன்றாகன்னும் பார்க்கலாம்.... அதுக்கு பிறகு நாம என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்....”

“எது பண்றதா இருந்தாலும் சீக்கிரம் பண்ணனும் சக்தி.... அடுத்து ஒரு உயிர் போய்ட கூடாது....”, சந்தோஷிடம் பேசி முடித்த சக்தி யோசனையுடனேயே அமர்ந்திருந்தான்....

“என்னாச்சு சக்தி.... சந்தோஷ் என்ன சொன்னார்... ரொம்ப கவலையா இருக்க....”

சந்தியா கேட்க சக்தி சந்தோஷிடம்  பேசிய விவரத்தை கூறினான்....

“ச்சே நான் கொஞ்சம் உஷாரா வேலையை ஆரம்பிச்சிருக்கணும் சக்தி.... ஒரு உயிர் பலியை தடுத்திருக்கலாம்....”

“உன் மேல தப்பு இல்லை சந்தியா.... இப்பவும் இது ஒரு அனுமானம்தான்.... உண்மைய கண்டுபிடிக்கணும்.... சரி இனிமேல் கொஞ்சம் வேகமா நம்ம வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான்....”

“ஆமாம் சக்தி.... நானும் என் சைடுலேர்ந்து என்ன தகவல் கண்டு பிடிக்க முடியுதுன்னு பார்க்கறேன்....”

“சரி சந்தியா.... ஆனா எதுவும் மாட்டிக்காம பண்ணு... அப்பறம் காயத்ரிக்கூட அந்த பரிசளிப்பு விழாக்கு யார் போறாங்க....”

“அவங்க அம்மா போவாங்கன்னு நினைக்கறேன் சக்தி.... அவளோட அண்ணன் இப்போதான் வந்துட்டு போனாரு... திரும்ப வர மாட்டார்ன்னு நினைக்கிறேன்....”

“அவங்க வீட்டுல வேற யாரும் ஆம்பளைங்க கூட வர்றா மாதிரி இல்லையா....”

“இல்லை சக்தி... அப்படி யாரும் இருக்கறா மாதிரி தெரியலை....”

“ஓ அப்போ முடிஞ்சா நீ அவங்ககூட அந்த விழாக்கு போயிட்டு வா சந்தியா....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.