(Reading time: 9 - 17 minutes)

“என்னையவா போக சொல்ற.... அவக்கூட நேத்து நான்  போனதுக்கே அந்த கரஸ் என்னை அந்தப் பார்வை பார்த்தான்... ஏன் எதாச்சும் பிரச்சனை வரும்ன்னு யோசிக்கறியா....”

“தெரியலை சந்தியா... ஏதோ தப்பு நடக்கப் போறா மாதிரியே தோணுது.... ஏன் தெரியலை... சரி இன்னும் நாள் இருக்கே பார்த்துக்கலாம்.... சரி நீ இங்க இருக்க போறியா இல்லை கிளம்புறியா....”

“இல்லை சக்தி... கொஞ்சம் வேலை இருக்கு.... நான் கிளம்பறேன்....”

“சரி வா, உன்னை வீட்டுல விட்டுட்டு அப்படியே நான் சந்தோஷை பார்க்க போறேன்....”, இருவரும் சக்தியின் தந்தையிடம் கூறிவிட்டு கிளம்பினார்கள்....

தீஷை அழைத்து சென்று நான்கு மணி நேரமாகியும் அறுவை சிகிச்சை அறையிலிருந்து எந்தத் தகவலும் வராததால் சதீஷின் தந்தையும் சுந்தரும் கவலைப்பட ஆரம்பித்தார்கள்....

“என்னப்பா சுந்தர் இது... இம்புட்டு நேரமாச்சு இன்னுமா ஆப்பரேஷன் நடக்குது... எனக்கு பயமா இருக்குதுப்பா... புள்ளைக்கு ஒண்ணும் இருக்காதில்ல...”

“பயப்படாம இருங்கப்பா.... அதெல்லாம் எதுவும் இருக்காது.... கண்டிப்பா நல்லா இருப்பான்...”

“அந்த மகமாயிதான் என்புள்ளைய காப்பாத்தணும்.....”, கண்ணீருடன் சதீஷின் தந்தை வேண்டியபடி அமர்ந்தார்...

மேலும் இரண்டு மணிநேரம் சென்ற பிறகு அவர்களை மருத்துவர் அழைப்பதாகக்கூறி நர்ஸ் வந்து அழைத்து சென்றாள்...

“வாங்க சுந்தர்... வாங்க சார்... உக்காருங்க.... நீங்கதான் சதீஷோட அப்பாவா...”

“ஆமாம் டாக்டர்... என் புள்ளை எப்படி இருக்கான்... நல்லபடியா இருக்கானா....”

“ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சுது சார்... ஆனா ஒரு பக்க கிட்னி முழுக்க வீணா போச்சு... அது எடுக்கலைனா உங்க பையன் உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிருக்கும்... இனி ஒண்ணும் பிரச்சனை இல்லை...”

“ஐயா இதால அவனுக்கு ஒண்ணும் பிரச்சனை வராதே சாமி....”

“மனுஷனுக்கு ஒரு கிட்னியே போதும் சார்... கடவுள் ஒண்ணுத்துக்கு பிரச்சனை வந்தா இன்னொண்ணு வச்சுட்டு உயிர் வாழட்டுமேன்னு ரெண்டு கொடுத்திருக்கார்... அதனால கவலைபடாம போங்க...”

“நீங்க எங்க தெய்வம் ஐயா... எங்க உசுரையே காப்பாத்தி கொடுத்திருக்கீங்க.... நூறாண்டு காலம் நீங்க நல்லா இருக்கணும்....”

“என் கைல ஒண்ணும் இல்லை சார்... எல்லாம் அந்த கடவுள் செயல்... நாங்க வெறும் கருவிதான்....”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சார் நாங்க போய் சதீஷை பார்க்கலாமா...”

“அவனுக்கு நினைவு திரும்ப எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்... இன்னைக்கு முழுக்க எப்படியும் ICU-ல கண்காணிப்புலதான் இருப்பான்... நர்ஸ் வந்து உங்களை கூட்டிட்டு போய் காட்டுவாங்க... பார்த்துட்டு உடனே வெளிய வந்துடுங்க... நாளைக்கு மதியத்துக்கு மேல நார்மல் வார்டுக்கு மாத்துவாங்க... அப்பறம் நீங்க யாராச்சும் கூட இருக்கலாம்... எப்படியும் இன்னும் ஒரு வாரம் வரை ஹாஸ்பிடல்லதான் இருக்கணும்.... நாளைக்கு அவரை செக் பண்ணிட்டு மறுபடியும் உங்களை பார்க்கிறேன்...  இப்போ நீங்க போய் வெளிய வெயிட் பண்ணுங்க... நர்ஸ் வந்து உங்களை சதீஷை பார்க்க கூட்டிட்டு போவாங்க....”

மருத்துவரிடம் பேசிவிட்டு இருவரும் வெளியில் வந்து சதீஷ் கண்திறக்க காத்திருக்க ஆரம்பித்தார்கள்....

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சில நேரங்களில் ஆபத்தானதாக இருந்தாலும் பல நேரங்களில் உதவி செய்கின்றது.... முகநூலும், வாட்ஸ்அப்பும் தகவலை பரிமாறும் வேகம் ஒலியின் வேகத்தை விட அதிகமானது... ஒரு விஷயம் சில நொடிகளில் பரவ வேண்டுமா முகநூலிலோ வாட்ஸ்அப்பிலோ பகிர்ந்தால் போதும்... அடுத்த நொடி அது உலகம் முழுதும் பரவி விடுகிறது....

மணியின் விஷயத்திலும் அதுவே நடந்தது... முகநூலில் பகிர்ந்த சில நொடிகளில் அந்த செய்தி  தீயை விட வேகமாகப் பரவ.... அடுத்த சில நிமிடங்களில் அனைத்து ஊடங்களிளிருந்தும் செய்தியாளர்கள் குவிய ஆரம்பித்தார்கள்... அவர்களுக்கு நேராக காவல் துறையால்  மணியின் பெற்றோரிடத்திலும் மற்றவர்களிடமும் கடுமை காட்ட முடியாமல் போனது....

பத்திரிகையாளர்கள் போலீஸ் அதிகாரியை சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்...

“சார் எதுனால மணியோட பெற்றோர் அவங்க மகனோட உடம்பை வாங்க மாட்டேன்னு சொல்றாங்க....”

“அப்படில்லாம் எதுவும் இல்லை சார்... நாங்க அதுக்கான formalities பண்ணிட்டு இருக்கும்போதுதான் நீங்க வந்துட்டீங்க... இப்போ எங்க வேலை தடை பட்டு போச்சு....”

“சார் இங்க நடந்த விஷயம்தான் உலகம் முழுக்க வீடியோவா வந்துடுச்சே சார்.... இன்னும் எதுக்கு மாத்தி பேசறீங்க... அவங்கதான் தெளிவா வாங்க முடியாதுன்னு சொல்றதும், நீங்க அவங்களை மிரட்றதும் பதிவாகி இருக்கே....”,பத்திரிகையாளர் கேள்வி கேட்க பதில் சொல்ல முடியாமல் திணறினார் காவலதிகாரி...

“சார் மணியோட குடும்பத்தார் அவரோட தற்கொலைல சந்தேகப்படறாங்களே... அதுக்கு நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க...”

“அதுல சந்தேகப்பட எதுவும் இல்லை சார்... அவன் ஷாக் அடிச்சுதான் செத்து போனான்... மணியோட அப்பாக்கிட்ட கையெழுத்து வாங்கின உடனே உங்ககிட்ட காட்ட சொல்றேன்... இப்போ நீங்க எல்லாரும் கிளம்புங்க... நீங்க இத்தனை பேர் சுத்தி நின்னு கேள்வி கேட்டுட்டு இருந்தா எங்க வேலையை நாங்க எப்படி செய்ய முடியும்... எங்களை வேலை செய்ய விடுங்க சார்...”,காவலதிகாரி பத்திரிக்கையாளர்களிடம் கேட்க, அவர்கள் சிறிது பின் நகர்ந்தார்களே தவிர அந்த இடத்தை விட்டு முழுவதும் அகலவில்லை...

காவல்துறை அதிகாரிகளும் பலவிதங்களில் மணியின் பெற்றோர் இடத்தில் அவனின் உடலைப் பெற்று கொள்ள கேட்க, அவர்கள் மறு பிரேதப்பரிசோதனை செய்யாமல் இந்த இடத்தை விட்டு அசைய மாட்டோம் என்று கூறி போராட ஆரம்பித்தார்கள்...

சிறிது நேரத்தில் இன்னும் சில அமைப்பினை சேர்ந்தவர்களும் வந்து சேர அந்த இடமே சிறிது சிறிதாக போராட்ட மையமானது....  

தொடரும்

Episode # 09

Episode # 11

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.