(Reading time: 15 - 29 minutes)

முதன் அவளை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றதை பார்த்தவர், பாசமிகு அத்தையாக இருந்திருந்தால், “அய்யோ என் அண்ணன் மகளுக்கு என்னாச்சு..” என்று ஓடியிருப்பார்.

தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் அவருக்கு, அமுதன் அருள்மொழியின் தோளில் கைப்போட்டு அழைத்துக் கொண்டு அறைக்கு செல்வது போல் இருக்க,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஒரு பெண்ணோடு இங்கு வந்து மகன் பிரச்சனையில் மாட்டியதால், இது தவறான ஹோட்டல் என்ற நினைப்பில் இருந்தவர், இங்கே அருளை ஒரு ஆடவனுடன் பார்க்கவும், மனதில் வன்மம் இருந்ததால், அப்போதே மாப்பிள்ளை வீட்டாருக்கு தொடர்புக் கொண்டு அவளைப் பற்றி தப்பாக கூறினார்.

இங்கே இத்தனை பரபரப்புகள் இருக்க, அங்கே ரெசார்ட் அறையில் மருத்துவர் அருள்மொழியை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

“இந்த டைம்ல பெயினுக்கு அடிக்கடி மருந்து எடுத்துக்கறது நல்லதில்ல.. ஆனாலும் வெளிய வந்த இடத்துல இப்படி ஆனதால வலி குறைய ஊசி போட்றேன்..” என்றவர்,

வலிக்கும் மட்டுமில்லாமல் உறக்கத்திற்கும் சேர்த்து ஊசியில் மருந்தை செலுத்தி அவளுக்கு போட்டார்.

ஊசி போடவே சற்று தள்ளி மறைவாக அமுதன் அமர்ந்திருக்க, அவளருகில் இருந்த மருத்துவரோ,

“அவர் யாரு உன்னோட ஹஸ்பண்டா..” என்றுக் கேட்க,

“இல்லை டாக்டர் அவங்க என்னோட ப்ரண்ட்.. ஒரு ப்ராஜக்ட் விஷயமா கான்பரன்ஸ் மீட்டீங்கிற்கு வந்தோம்..” என்றாள்.

“ஓ பரவாயில்லையே, எத்தனை ஆண்களுக்கு மாதம் மாதம் வர இந்த வலியும் வேதனையும் புரியுது.. ஆனா உன்னோட ப்ரண்ட்டோ உன்னோட கஷ்டத்தை பார்த்து ரொம்பவே பதட்டமாகிட்டார். உண்மையிலேயே நீங்க ப்ரண்ட்ஸ் மட்டும் தானான்னு எனக்கு சந்தேகமா இருக்கு..” என்று சொல்லி சிரித்தார்.

அவர் சொன்னதும் அருள் உடனே இவர்கள் பேச்சு கேட்காத தூரத்தில் அமர்ந்திருந்த அமுதனை பார்த்தாள்.

தன் வீட்டு ஆண்களிடமும் இந்த அக்கறையெல்லாம் இருக்கிறது என்றாலும், அமுதனிடம் இந்த அக்கறையையும் பொறுப்பையும் கண்டு, எப்போதும் தள்ளி வைத்தே பார்த்த அவனை குறித்த அவள் எண்ணத்திலும் பார்வையிலும் மாற்றம் வந்தது.

ஆனால் அவளை அந்த நேரம் பார்க்காததால் அமுதனுக்கு அவள் பார்வையின் மாற்றம் தெரியவில்லை. ஒருவேளை பார்த்திருந்தால் கூட அவளின் அந்த ரசனை பார்வையை அவன் கண்டுக் கொண்டிருப்பான் என்பது சந்தேகம் தான்,

மருத்துவர் சென்றதும் அவளின் வலி குறைந்து, கண்கள் உறக்கத்திற்கு ஏங்கும் போது தான், வீட்டில் அனைவரும் அவள் இன்னும் வீட்டிற்கு வராதது குறித்து கவலைக் கொள்வார்கள் என்பதை உணர்ந்து,

“அமுதன் வீட்டுக்கு சொல்லணும்..” என்றாள்.

அப்போது அவனும் அதை உணர்ந்தவனாக, “நீ தூங்கு.. நான் சொல்றேன்..” என்று பதட்டமில்லாமல் கூறினான்.

ஏனென்றால் அவளை பெண் பார்க்க வருகிறார்கள் என்றோ, இல்லை அவள் வீட்டில் சொல்லாமல் வந்திருக்கிறாள் என்றோ அவனுக்கு தெரியாதே,

சுடரோடு சேர்ந்து திட்டம் போட்டு அவளை வெளியில் அழைத்து வந்திருந்தாலும், எப்போதும் அம்மா, குடும்பம், கோட்பாடு என்று சொல்பவள், இப்படி அவனோடு வருவதை சொல்லாமல் வந்திருப்பாள் என்று தெரியாது. அப்படியே அவள் சொல்லாமல் வந்திருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது என்று நினைப்பவன் தான் அவன், அவன் வளர்ந்த விதமும் அப்படித்தானே, என்னத்தான் ஆனந்தி கண்டிப்போடு வளர்த்தாலும் அவன் பிறந்த நாட்டில் இதெல்லாம் சகஜம் இல்லையா.. அதனால் உண்டாக போகும் பிரச்சனைகளின் தீவிரங்களை அவன் அறிந்திருக்க மாட்டான்.

இந்த அத்தியாயத்தில் ஏதாவது கொஞ்சம் அதிகப்படியாக எழுதுயது போல் தெரிகிறதா? இருந்தால் சொல்லுங்க ப்ரண்டஸ்

உறவு வளரும்...

Episode # 43

Episode # 45

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.