“அவர் என்னை உன்னோட வீட்டுக்குப் போன்னு சொன்னார். அதுதான் என்னோட இருக்கிறது அவருக்குப் பிடிக்கலைன்னு அவரை வெளியில் விட்டு கதவைச் சாத்திவிட்டேன். அப்புறம் நீங்களும் அவருக்கு சப்போர்ட் பண்ணதால் உங்களையும் வெளியே நிற்க வச்சுட்டேன். சாரி மாமா.”
பேசிக் கொண்டே கதவைத் திறந்தவள் அங்கே நிற்காமல் உள்ளே சென்று விட்டாள்.
கருப்பையா தன் மனைவியைப் பார்த்துக் கொண்டே நின்றான்.
“என்ன பராக்கு பார்த்துக்கிட்டு நின்னுக்கிட்டேயிருக்கே? இப்பதான் உன் பொண்டாட்டியை ரசிக்கிற நேரமா? எங்களுக்கு வயசாயிடுச்சு. பிள்ளையைக் கொண்டுக்கிட்டு உள்ளே வா.”
சண்முகம் அதட்டலாய் சொன்னார்.
தன் அறையை நோக்கிப் போனவனைத் தடுத்து நிறுத்தினார்.
“பிள்ளைங்க இன்னிக்கு எங்க கூட படுக்கட்டும்.”
அவன் தன் தந்தையின் முக
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனுடன் பேசாமலே தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள்.
அவள் திமிரத் திமிர அவனது அணைப்பு இறுக ஆரம்பித்தது.
“உன் இடுப்பை விட்டு கையை எடுக்கவே மனம் வரலைடி. இரண்டு பிள்ளைங்க பிறந்தும் எப்படிடி அப்படியே இருக்கே. நான் உன்னை முதன் முதலில் பார்த்தேனே. அப்ப இருந்த மாதிரியே இருக்கே.”