Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ஐ லவ் யூ - 24 - Chillzee Story - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - ஐ லவ் யூ - 24 - Chillzee Story

I love you

வ்வளவு சீக்கிரமா நீ இதெல்லாம் கத்துப்பன்னு எதிர்பார்க்கவே இல்லை தமிழ்ச்செல்வி. ஒரு மாசம் முன்னாடி மவுஸ், கீபோர்ட் பார்த்து முழிச்ச பொண்ணு மாதிரியே தெரியலையே” – மனமார பாராட்டினாள் செரிஷா.

கூச்சத்துடன் சிரித்தாள் தமிழ்ச்செல்வி.

“நான் தங்கி இருக்க வீட்டுல காலேஜ் போறவங்க இரண்டு பேர் இருக்காங்க. அவங்க சொல்லிக் கொடுத்தது உதவிச்சு செரிஷா”

“அதென்ன தங்கி இருக்க வீடுன்னு சொல்ற? உன் ரிலேட்டிவ் வீட்டுல இருக்கீயா?”

சாதாரண கேள்வி! நேரடியான பதில் சொல்ல முடியாத கேள்வி!

பொதுப்படையாக தலையை ஆட்டி வைத்தாள் தமிழ்ச்செல்வி.

செரிஷா அதை எல்லாம் கண்டுக்கொள்ளவே இல்லை. சுறுசுறுப்பாக அங்கே இருந்த வகுப்பு மாணவ மாணவிகளிடம் தமிழ்ச்செல்வியின் பெருமையை பறை சாற்ற ஆரம்பித்தாள்

“ஜேம்மி, பார்த்தீயா தமிழ்ச்செல்வி உனக்கு முன்னாலேயே ப்ரோக்ராம் எழுதி முடிச்சிட்டா. பார்த்தீயா அப்பு, தமிழ்ச்செல்வி என்ன புத்திசாலின்னு”

செரிஷா அழைத்து சொன்ன ஜமுனா, அபர்ணா மட்டும் இல்லாமல் நிறைய பேரின் காதுகளில் செரிஷாவின் வார்த்தைகள் விழுந்து தமிழ்ச்செல்வியை பார்த்தார்கள். அந்த பார்வையில் இப்போது மரியாதை வந்திருந்தது.

திரும்பவும் கூச்சத்துடன் சிரித்தாள் தமிழ்ச்செல்வி.

“இதே ஸ்பீட்ல போனால் என்னையும் தாண்டி போயிடுவ தமிழ்ச்செல்வி. கீப் இட் அப்” – செரிஷா.

“இதுக்கு எல்லாம் காரணம் நீ தான் செரிஷா!”

“இல்லைப்பா, நீ கெட்டிக்காரி. சின்ன புள்ளி வச்சாலே பெரிய கோலம் போட்டுடுற”

கல்லூரி முடிந்து பஸ்ஸில் வீடு நோக்கிய பயணத்தின் போதும் செரிஷாவின் புகழ்ச்சியில் தமிழ்ச்செல்வியின் மனம் ஆடிப் பாடிக் கொண்டிருந்தது.

சாயின் உடன்பிறப்புகளான இரட்டையர் சித்தார்த் – சித்தாராவிற்கு நன்றி சொல்ல வேண்டும். மூன்றே வாரங்களில் அவள் எவ்வளவு முன்னேறி இருக்கிறாள். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் இருவரும் தான்.

தீபக், தீக்ஷாவிற்கு அவள் ஹோம்வொர்க் சொல்லிக் கொடுப்பது போல சித்தார்த்தும், சித்தாராவும் அவளுக்கு கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுத்தார்கள்.

இரண்டு பெரியவர்களின் கேள்வி கணைகளில் இருந்து தப்பிக்க நினைத்து ஆரம்பித்த பழக்கம் அவளுக்கு ரொம்பவும் அதிகமாக உதவி இருக்கிறது.

“வேலைக்கு வரவே பிடிக்க மாட்டேங்குது. அவனும் அவன் மூஞ்சியும்” – பஸ்ஸில் பேசிக் கொள்வது தமிழ்ச்செல்வியின் காதில் விழுந்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

வெற்றியை பற்றி வம்பு பேசும் பேச்சு என்பது தமிழ்ச்செல்விக்கு புரிந்தது. தினம் தினம் மாலையில் அவள் காதில் இது போன்ற பேச்சுக்கள் விழுந்துக் கொண்டே இருந்தது.

அட்டென்ஷன் நல்லா இருக்கு என்று சொல்லி கேலி செய்த வெற்றியுடைய சிரிப்பை, கரப்பான் பூச்சி வாய்க்குள் போனாலும் தெரியாதது போல வாய் பிளந்து பார்த்து ரசித்த நாள் முதலே தமிழ்ச்செல்வி அவனை விட்டு விலகி இருக்க தொடங்கி இருந்தாள்.

வெற்றியும் யசோதா சொல்லி இருந்தது போல ரொம்பவும் குறைந்த நேரமே வீட்டில் இருந்தான். அப்படி இருக்கும் நேரத்தில் அவன் ஒன்றும் அவளை விழுந்து விழுந்து தேடவும் இல்லை.

ஆனால் அவனை கண்ணில் பார்க்காமல் இருப்பதால் போலும், இப்போதெல்லாம் அவன் மீது இருந்த வெறுப்பு குறைந்து போயிருந்தது. அவளுக்கு காலேஜ் சீட் வாங்கி கொடுத்தவன் என்ற நன்றி உணர்வு அவளுக்குள் அதிகமாக இருந்தது.

கூடுதலாக அவனின் அந்த டூத்பேஸ்ட் விளம்பர புன்னகை அவ்வப்போது அவள் முன் ப்ளாஷ் அடித்து சென்றுக் கொண்டிருந்தது.

“இவனுக்கு கீழே வேலை செய்யனும்னு நம்ம தலையில எழுதி இருக்கு பாரு”

பெண்களின் பேச்சு தொடர, யோசிக்காமல் அனிச்சை செயலாக அவர்கள் பக்கமாக பார்த்தாள்.

அவளின் பார்வையினால் அந்த பெண்களின் பேச்சு தற்காலிகமாக நின்றுப் போனது. இவளை கேள்வியோடு பார்த்தார்கள்.

தமிழ்ச்செல்வி அவர்களை பார்த்து சின்னதாக சிரித்தாள்.

அவர்கள் இப்போதும் குழப்பத்துடனே பார்த்தார்கள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "மையலில் மனம் சாய்ந்த வேளை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“யாரை பத்தி பேசிட்டு வரீங்க? தினம் தினம் காதில விழுது”

தமிழ்ச்செல்வியான இனிமை நிறைந்த குரலில் அவர்களின் குழப்பம் கரைந்து போயிருக்க வேண்டும்.

“நாங்க வேலை செய்ற எக்ஸ்போர்ட் கம்பெனி பத்தி. அந்த கொடுமையை ஏன் கேட்குறீங்க!”

“பேகை இப்படி என் கிட்ட கொடுங்க, பாவம் எவ்வளவு நேரம் அதையும் கையில பிடிச்சிட்டே நிப்பீங்க? அங்கே வேலை செய்றது அவ்வளவு கஷ்டமாவா இருக்கு??”

சும்மாவே புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு கேட்க ஒரு ஜோடி காது ரெடியாக இருப்பது தெரிந்தால் கேட்கவா வேண்டும், புலம்பி தீர்த்தார்கள்!!!!

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 24 - Chillzee StoryAdharvJo 2019-03-19 16:53
English Ms-k ethakku indha doubt amam :Q: :D very cute update ma'am :clap: :clap: new stars ellam nala kalakuranga :dance: Indha employees ethukku ippadi Karachi kotturanga facepalm Hero-va ippadi vayakudadhun solli vainga ji :P Look forward to see how Kanda mirugam :lol: thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 24 - Chillzee Storymadhumathi9 2019-03-19 12:36
wow nice epi.interesting aaga poguthu. (y) chillzee teamla ullor niraiyaperukku karappaan poochi pidikkuma? Karappan poochiya vidama koduthu kondu irukkeenga :grin: :clap: egarly waiting to read more. :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 24 - Chillzee Storysaaru 2019-03-19 12:19
Anaa oonal vaya pilandu nikira ka ka
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 24 - Chillzee Storyரவை 2019-03-19 11:44
சூப்பராயிருக்கு! அளவறிந்து சுருக்கமா தருவது ஒரு டெக்னிக்! கீப் இட் அப்! பாராட்டு!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top