(Reading time: 22 - 43 minutes)

“சரி கேக்கை வெட்டுவோமா..” என்று சொல்லியப்படியே மகியும் அறிவும் அங்கு வந்தார்கள்.

“நீங்க எப்படா வந்தீங்க..” என்று பாட்டி கேட்க,

“வந்தோமாவா.. நாங்க ஆல்ரெடி இங்க தான் இருக்கோம்.. அமுதனோட சேர்ந்து இதையெல்லாம் செட் பண்ணது நாங்க தான்..” என்று சொன்ன மகியின் கண்கள் சுடரை தேடியது. ஆனால் அவள் அங்கு இல்லாததில் ஏமாற்றம் அடைந்தவன்,

“அத்தை சுடர் வரலையா?” என்று எழிலைப் பார்த்து கேட்டான்.

“இல்லை கூப்பிட்டதுக்கு அவ வர மாட்டேன்னு சொல்லிட்டா.. அவளை தனியா விட்டுட்டு வர வேண்டாம்னு கூட புவியை விட்டுட்டு வந்திருக்கேன்..” என்று எழில் பதில் கூறினாள்.

கோபமாக இருக்கிறாள் என்று தெரிகிறது, ஆனால் எதற்கு என்று தான் தெரியவில்லை, முதலில் நிச்சயதார்த்த நிகழ்வில் அவளை தனியாக விட்டுச் சென்றதற்கு தான் அந்த கோபம் என்று நினைத்தான். ஆனால் அவள் நடவடிக்கைகளை பார்த்தால் வேறு ஏதோ பிரச்சனை என்று தோன்றுகிறது.

அலைபேசியில் பேசினால் எண்ணி சில வார்த்தைகள் மட்டுமே இந்த நான்கு நாட்களில் அவள் பேசினாள். அவர்கள் குடியிருந்த வீட்டை காலி செய்து அவள் பொருட்களை கொடுக்க வீட்டுக்கு போன போதும் அவள் சரியாகவே பேசவில்லை, எங்கேயாவது வெளியில் அழைத்துச் செல்லலாம் என்றால் அதற்கும் அவள் சம்மதிக்க வேண்டுமே,

முன்பு அவளுக்கு தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் இருப்பது தெரிந்ததிலிருந்து அவளை தனியாக விடவே பயம், “எப்போதும் அவக் கூட யாராச்சும் இருங்க அத்தை.. அவளை தனியா விட வேண்டாம்..” என்று சொல்லிவிட்டு வந்தான்.

எதற்கு இப்படி சொல்கிறான் என்று குழப்பமாக இருந்தாலும் எழில் சரி என்று கூறினாள்.

இந்த பிறந்தநாள் விழாவிற்கு சுடர் வருவாள், அவளிடம் பேசி பிரச்சனையை அறிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவள் வரவேயில்லை, அதான் ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதே, திரும்ப திருமணம் என்று சொல்லி சுடரை பிரித்ததில் அவனுக்கு கோபமாக வந்தது.

மகிக்கு தான் சுடரொளிக்கு என்ன பிரச்சனை என்பது தெரியாது, ஆனால் சுடர் வராததன் காரணம் அருள் என்று அமுதனுக்கு தெரியுமே, இன்றோடு அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவன் தீர்மானித்திருந்தான்.

“கேக் வெட்டலாமா ஹனி..” என்று அவன் அருளிடம் கேட்க, அவளும் சரியென்று தலையாட்டினாள்.

குடும்பத்தார் வாழ்த்து பாட்டு பாட அருள் கேக்கை வெட்டினாள். பின் ஒருத் துண்டை எடுத்து கலைக்கு ஊட்டப் போக,

“முதலில் மாப்பிள்ளை கொடு..” என்று அவர் சொல்லவும், அத்தனை பேர் முன்பு என்பதால் வெட்கத்தோடும் தயக்கத்தோடும் அவனுக்கு கேக்கை ஊட்ட, அதில் பாதியை எடுத்து அவளுக்கு அமுதன் ஊட்டினான். அதை கண்டு அனைவரும் கைத்தட்டி ஆரவாரித்தனர்.

பின் அனைவருக்கும் கேக்கை வெட்டி சுடர் ஊட்டி விட, அவளுக்கும் அனைவரும் ஊட்டி விட்டு அவளை திணற அடித்தனர்.

பின், “மொழி..” என்று அவளை அழைத்த அமுதன், அவள் திரும்பி பார்க்கவும், அவள் முன் மண்டியிட்டு அவன் கோர்ட்டிலிருந்து ஒற்றை சிவப்பு ரோஜாவை எடுத்தவன்,

“எப்போ உன்னை பார்த்தேனோ அப்பவே என்னை அறியாம என்னோட மனசை என்கிட்ட இருந்து நீ கொண்டுட்டு போயிட்ட மொழி, ஆனா அதை உணராத நான் உன்னோட ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பார்த்து நீ எனக்கு செட் ஆக மாட்டன்னு சொல்லிக்கிட்டே இருந்தேன்.. ஆனா அதெல்லாம் பொய்ன்னு எனக்கே தாமதமா தான் புரிஞ்சுது..

எப்போ நீ என்னை பார்க்க விரும்பலன்னு சொன்னீயோ அன்னைக்கே நான் எப்போதும் உன்கூடவே இருக்கணும்னு என்னோட மனசு சொல்லிக்கிட்டே இருந்தது. அது காதல்னு உணர்ந்ததுமே உன்னை பார்க்க நான் ஓடி வந்துட்டேன்..” என்று பேசியவன்,

அவளிடம் ரோஜாவை நீட்டி, “ஐ லவ் யூ ஹனி… ஐ லவ் சோ மச்.. என்னோட காதலை ஏத்துப்பீயா? என்னை கல்யாணம் செய்துக்க உனக்கு விருப்பமா?” என்றுக் கேட்டான்.

அவன் காதலை சொன்ன தருணம் அவள் கண்கள் மகிழ்ச்சியை கண்ணீராய் வெளிப்படுத்த,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அனிதா சங்கரின் " காதல் காதலித்த காதலியை காதலிக்கும்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“இந்த வார்த்தையை கேட்க தான் நான் காத்திருந்தேனா? எனக்கே தெரியல.. ஆனா சந்தோஷமா இருக்கு.. நீங்க என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போனப்போ என்னோட இதயத்தை யாரோ கீறிவிட்டது போல இருந்துச்சு.. அடுத்து மகியோட கல்யாணம் பேசினப்போ என்னோட இதயத்தையே வெட்டி எடுத்தது போல இருந்துச்சு..

ஆனா அந்த நிச்சயதார்த்தம் நின்னுப் போனப்ப ரொம்ப நிம்மதியா உணர்ந்தேன்.. அடுத்து உங்களோட கல்யாணம் பேசினப்ப மனசு நிறைய குழப்பம் இருந்தாலும் கொஞ்சம் இதமாகவும் இருந்துச்சு.. ஆனா இப்போ நீங்க பேசறதை கேட்டப்போ எங்கேயோ காத்துல பறக்கிறது போல இருக்கு.. இது என்ன உணர்வுன்னே தெரியல..” என்று அவள் சொல்லவும்,

“ஹே லூசு இது தான் மச்சி காதல்.. சீக்கிரம் ரோஜாவை வாங்கிக்கிட்டு யெஸ் சொல்லு..” என்று இலக்கியா கூறவும்,

“உங்க காதலை நான் ஏத்துக்கிறேன்.. அதேபோல நானும் உங்களை காதலிக்கிறேன்.. உங்களை கல்யாணம் செஞ்சுக்க எனக்கு மனப்பூர்வமா சம்மதம்..” என்று சொல்லி அவன் கொடுத்த ரோஜாவை வாங்கிக் கொள்ள,

“ஹேய்.. என்று இலக்கியா, மலர், மணி, மகி, அறிவு என்று அனைவரும் அவளை அணைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.