(Reading time: 22 - 43 minutes)

சுடர் பற்றி அமுதன் சொல்லி முடித்ததும் அருள் கண்களில் இருந்து கண்ணீர், இது அவள் கதையை அறிந்துக் கொண்டதால் மட்டும் வந்த கண்ணீர் கிடையாது, அவளை தானும் கஷ்டப்படுத்தி பார்த்திருக்கோமே என்பதும் சேர்ந்ததால் தான் இந்த கண்ணீர்,

இப்போது வேண்டுமானால் அவள் மகியை திருமணம் செய்ய எண்ணி தவறு செய்திருக்கலாம், ஆனால் இங்கு வந்த ஆரம்ப நாட்களில் அவள் என்ன தவறு செய்தால், எதற்காக அவளிடம் தேவையில்லாமல் வெறுப்பை வளர்த்தோம், அமுதன் சொன்னது போல் அவளுக்கு என்ன லண்டனில் வசதியாக மகிழ்ச்சியாக வாழ்ந்தவள் தானே, இங்கே வந்து எழில் அத்தைக்கு ஏன் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் காரணம் என்று புரிகிறது.

ஆரம்பித்திலேயே அனைவரும் சுடரிடம் நட்பு பாராட்டியிருந்தால், சுடரும் இப்படியெல்லாம் யோசித்திருக்க மாட்டாள் என்பது அருளுக்கு நன்றாகவே புரிந்தது. இதையெல்லாம் அமுதனிடமும் பகிர்ந்து,

“எல்லாம் நல்லா போயிட்டு இருந்த சமயத்தில் நிச்சயத்துல வச்சு நான் சுடர்க்கிட்ட அப்படி பேசியிருக்கவே கூடாது.. அவ எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா.. நான் ஏன் இப்படி இருக்கேனோ..” என்று கவலைக் கொண்டாள்.

“இவ்வளவு நாள் போனது போகட்டும், இப்பயாச்சும் சுடரை நீ புரிஞ்சிக்கிட்டல்ல.. அதான் எனக்கு வேணும், சுடர் என்னோட ப்ரண்ட்னு நான் சொல்லிக்கிட்டாலும், அவ எனக்கு தங்கை போலத்தான், அவ என்னோட கல்யாணத்தில் சந்தோஷமா வந்து கலந்துக்கணும்.. அதுக்குப்பிறகும் அவளோட நல்ல புரிதலோட நீ இருந்தா தான் வாழ்க்கை நல்லா போகும்.. அதுக்கு தான் இப்போ சுடர் பற்றி சொன்னேன்..”

“கண்டிப்பா அமுதன், இனி சுடர் எனக்கு ஒரு நல்ல சகோதரி, நல்ல ப்ரண்டும் கூட, இனி அவளை காயப்படுத்தி பார்க்க மாட்டேன்.. இவ்வளவு நாள் அவக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டதுக்கு சாரி அமுதன்..”

“பழசையெல்லாம் விடு மொழி, இப்போ அவளை நீ புரிஞ்சிக்கிட்டதே போதும், நமக்குள்ள இந்த சாரி, தேங்க்ஸ்ல்லாம் வேண்டாமே..” என்று அவன் சொல்லவும், அவள் தலையாட்டிக் கொண்டாள். பிறகு சிறிது நேரம் இருவரும் கடலை பார்த்தப்படி அமர்ந்திருக்க,

“சரி டைம் ஆச்சு போகலாமா?” என்று அருள் கேட்க,

“அதுக்குள்ளவா.. நாம இங்க வந்து சுடர் பற்றி தான் பேசினோம், நம்மள பத்தி பேசவே இல்லையே..” என்று அவன் பதில் கூறினான்.

“இனி நமக்கான காலம் தானே, நம்மளப்பத்தி தானே நிறைய பேசப் போறோம்.. அப்புறம் என்ன?”

“நீ சாதாரணமா சொல்லிட்ட.. நமக்கு இந்த நிச்சயதார்த்தமெல்லாம் நடந்ததுக்கு பதிலா, நேரா கல்யாணம் நடந்திருக்கலாம், ஒரு மாசத்தை எப்படி கடத்தப் போறேனோ தெரியல மொழி..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஒரு மாசம் தானே கண்ணை மூடி திறக்கறதுக்குள்ள ஓடிடும் அமுதன்..”

“இருந்தாலும் ஒரு மாசம் இருக்கே..” என்று இழுத்து சொன்னவன்,

“இந்த ஒரு மாசம் உன்கூட மொபைலில் பேசலாம், சாட் பண்ணலாம், ஆனா இப்படி உன்னோட அம்மாக்கிட்ட பர்மிஷன் கேட்டு கூட்டிட்டு வருவது கஷ்டம்.. அதனால் ஒரு மாசத்துக்கு தாங்கறது போல ஒரு கிஸ் கொடு..” என்று சொல்லி முடித்தான்.

“யாரோ எங்கம்மாக்கிட்ட கொஞ்ச நேரம் பேச தான் போறோம்னு பர்மிஷன் கேட்டு கூட்டிட்டு வந்தாங்களே.. எங்க அவங்க காணோம்..” என்று சொல்லியப்படியே அவள் அவனை தேடுவது போல் நடிக்க,

“அப்படி சொன்னா தான் அனுப்புவாங்க.. இதெல்லாம் எப்படி உங்கம்மாக்கிட்ட சொல்ல முடியும்?”

“இருந்தாலும் எங்கம்மா என்மேல இருக்கும் நம்பிக்கையில் தான் உங்களோட அனுப்பிச்சிருக்காங்க.. இதெல்லாம் கல்யாணத்துக்கு பிறகு தான்”

“நம்ம எங்கேஜ்ட் கப்பிள் தானே, ஒரே ஒரு கிஸ் கொடுக்கக் கூடாதா?”

“இது உங்க லண்டன் இல்ல.. இது சென்னை, நான் அக்மார்க் தமிழ் பொண்ணாக்கும், அதுவும் எந்த இடத்தில் வச்சு கேக்கறீங்க.. இதெல்லாம் என்கிட்ட நீங்க எதிர்பார்க்க முடியாது..”

“தமிழ் பொண்ணுங்க யாரும் இப்படி காதலிக்கிறதில்லையா? யார்க்கிட்ட கதை விட்ற..”

“அப்போ அப்படி ஒரு பொண்ணை பார்த்து நீங்க காதலிச்சிருக்கணும்.. என்னை பற்றி தெரிஞ்சும் இந்த பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணும்னு நீங்க வந்து விழுந்தா நான் என்ன செய்றது..

மத்தவங்க பார்வைக்கு நான் பழைய பஞ்சாங்கமா தெரிஞ்சாலும் எனக்கு கவலை இல்லை, யாருக்காகவும் என்னை நான் மாத்திக்க மாட்டேன்.. சில விஷயங்களில் நான் எப்போதும் ஒரே மாதிரியா தான் இருப்பேன்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

நம்ம கல்யாணத்துக்குப் பிறகு உங்களுக்கு கூட சில ரூல்ஸ்ல்லாம் இருக்கு, ஸ்பைக் விட்றேன், பைக் விட்றேன்னு இஷ்டத்துக்கு தலை முடியை கொடுமை செய்யாம அழகா ஹேர் கட் பண்ணி படிய வாரணும், அன்னைக்கு ஹாஸ்பிட்டலுக்கு கையில்லாத சட்டை, அரை ட்ரவுசரோட வந்தது போல, இனி அப்படி செய்யக் கூடாது.. வெளிய போனா பேண்ட் சர்ட்னு நீட்டா தான் போகணும்..” என்று அவள் பேசிக் கொண்டே போகவும், அவன் பரிதாபமாக பார்க்க,

“என்னடா வேண்டாம்னு சொல்லிட்டு போனோம், ஆனா திரும்பவும் வந்து இந்த பெட்டர்மாஸ் லைட்க்கிட்டேயே சிக்கிட்டோமேன்னு ஃபீல் பண்றீங்களா?” என்றுக் கேட்டாள்.

“இல்லை இல்லை நான் எப்போதும் அப்படி நினைக்கமாட்டேன்.. உன்னோட இந்த வித்தியாசமான குணம் தான் எனக்கு உன்கிட்ட பிடிக்குது.. எப்போதும் இதை நீ மாத்திக்க வேண்டிய அவசியம் இருக்காது.. இப்படியே இருக்க இந்த பெட்டர்மாஸ் லைட்டை தான் எனக்கு பிடிக்கும்..” என்ற அவனது பேச்சை ரசித்தவள், யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு அவசரமாக அவன் கன்னத்தில் இதழ் பதிக்க,

அவளது இந்த செய்கை அவனுக்கு வியப்பளித்தாலும், “என்ன இது சின்ன குழந்தைக்கு கொடுக்கிற மாதிரி கன்னத்துல கொடுக்கிற.. இதெல்லாம் ஏத்துக் கொள்ளப் படாது.. இங்க தான் வேணும்..” என்று அவன் உதட்டைக் காட்ட,

“நான் இந்த இடத்தில் உங்களுக்கு இதை கொடுத்ததே பெரிய விஷயம், அதுவே இந்த ஒரு மாசத்துக்கு தாங்கும்.. சீக்கிரம் போலாம் வாங்க டைம் ஆச்சு..” என்று ஏறக்குறைய அவனை இழுத்துக் கொண்டு சென்றாள்.

உறவு வளரும்...

Episode # 52

Episode # 54

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.