(Reading time: 18 - 36 minutes)

ஆமா.. அவரே தான்.. என்னோட அப்பா, அம்மா கூட என்கிட்ட இந்த கல்யாணத்துக்கு சம்மதாம்ன்னு என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேக்கல.. நான் நேத்து வரைக்கும் பக்கத்து வீட்டு குட்டி பசங்க கூட சேர்ந்து விளையாடிகிட்டு இருந்தேன்.. திடீர்ன்னு காலையில்ல உனக்கு கல்யாணம்ன்னு சொல்லி உட்காரவச்சிட்டாங்க.. அப்படியான குடும்பத்துல இருந்தவ நான்.. என்ன பொண்ணு பார்க்க வந்தப்ப இவர் அப்பா என்னோட சம்மதம் முக்கியமா வேணும்.. அப்படி என் சம்மதம் இல்லையின்னா இந்த கல்யணத்தை கண்டிப்பா நிறுத்தியிறுவேன்னு சொல்லரத கேட்டவுடனே.. இவர் அப்பா மேல தனி மரியாதை வந்தது.. கண்டிப்பா என்ன அழவிடமாட்டாங்கன்னு நான் நம்பினேன்.. அதான் இந்த கல்யாணத்துல எனக்கு முழுசம்மதம்ன்னு சொன்னேன்.. ஆனா இந்த தேசிங்குராஜாக்கு தான் கோவம் மூக்குக்கு மேல வரைக்கும் இருந்தது.. என கூறி அவரை செல்லமாக இடித்தார்..

பின்ன நீயே சொல்லு மனுகுட்டி.. நான் எவ்வளவு ஆசை பாத்தேன் தெரியுமா.. அழகா இருந்தா.. பட்டுபுடவை கட்டி.. கை நிறைய வலையல் போட்டு.. தலை முழுக்க பூவச்சு.. முகத்துல மஞ்சள்பூசி.. பொட்டு வச்சு.. என்ன பாக்க வரும் போது அவ்வளவு அழகா வெட்கபட்டுகிட்டே வந்தப்போ.. எனக்கு பாக்க பாக்க திகட்டல.. அதுவும் என்ன பாக்கும் போது எல்லாம் அவ குங்கமபூ போல சிவக்கரது எனக்கு இப்பவும் ரொம்ப பிடிக்கும்.. அவர் அழகாக வர்ணித்தார்.. அவரின் தர்மபத்தினியை.. இப்போ சொல்லு என்ன பாக்கலைன்னா எனக்கு கோவம் வருமா.. வராதா..

கண்டிப்பா வரனும் அப்பா.. அம்மா உங்களை இந்த அளவு கொடுமைபடுத்துனாங்களா.. அம்மா நீங்க ரொம்ப மோசம்..

ஆமான்டி மோசம் தான்.. அப்போ எல்லாம் இப்படி தான்.. ஆனா.. நான் அவர தெரியாத மாதிரி பாக்கும் போது அவர் கண்ணுல தெரிஞ்ச உரிமை.. உன்ன எப்பவும் யாருக்காகவும் விட்டு கொடுக்கமாட்டேன்னு அந்த கண்ணு எனக்கு சொன்னது.. உன்ன எப்பவும் என் கண்ணுக்குள்ள வச்சுக்குவேன்னு சொன்னத.. அவர் இப்போ வரை காப்பாத்திட்டு தான் இருக்கார்.. அன்னைக்கு அவர் என்கிட்ட கண்ணால சொன்ன வார்த்தைகளை இப்போ வரை காப்பாதரார் மனுகுட்டி..

நீ கேட்டல்ல காதல்ன்னா என்னன்னு இது தான்.. நம்பிக்கை.. ஒருதர் மேல வைக்கர முழு நம்பிக்கை..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீனுவின் "மழையின்றி நான் நனைகின்றேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

சூப்பர்ம்மா.. அப்பா.. உங்களுக்கு எப்படி அம்மா மேல நம்பிக்கை வந்தது..

அவ உள்ள இருந்து வந்ததும்.. எங்க அப்பா, அம்மா கால்ல விழுந்து வணங்குனா.. கண்ணியம்மா பாத்தா.. நேர்மையா நடந்துகிட்டா.. அவளுடைய எண்ணத்தை எனக்கு தெரிவா புரியவச்சா..

இது தான் மனுகுட்டி காதல்.. ஒருதர் எந்த சூழ்நிலையிலும் நேர்மையாவும், கண்ணியமாவும் இருக்கனும்.. ஒருதர் மனசுல இருகரத சொல்லாம புரிஞ்சுகணும்டா..

ம்.. அப்பரம் என்ன ஆச்சு அப்பா..

எல்லாரும் பேசி நல்ல நாள் குறிச்சிட்டு.. எங்க அம்மா அவளுக்கு எங்க பரம்பரை நகையை போட்டுவிட்டு வந்துட்டோம்..

ஆனா எங்க கெட்டநேரம்.. எங்களுடைய தொழில் வளர்ச்சி பிடிக்காத சில ஆட்கள் நாங்க இல்லாத நேரமா பாத்து எங்க மொத்த நூல்மில்லுக்கும் தீ வச்சிட்டாங்க.. நாங்க வந்து பாக்கரதுக்குள்ள எல்லாமே கருகி.. சின்னாபின்னமாகிருதச்சு.. எங்களால அந்த சோகத்தை ரொம்ப நாளைக்கு ஈடுகட்டமுடியாம இருந்தது..

எல்லாமா எரிஞ்சு போச்சு..

ஆமாட்டா.. மொத்தமா போச்சு.. கூடவே இருந்து சதி பன்னீட்டாங்க..

அப்பா..

அப்பரம் என்னடா.. இவங்க வீட்டுல ஒரே யோசனை.. இருந்த சொத்து எல்லாம் போச்சு.. கடன் தான் மிச்சம்.. இருந்த வீடு, கொஞ்ச நிலம் இது மட்டும் தான் எங்க கிட்ட மிச்சம் இருந்தது.. இவங்க வீட்டுல எப்படி ஒன்னுமே இல்லாதவனுக்கு கொடுக்கரதுன்னு முடியாதுன்னு சொல்லீட்டாங்க.. அப்பரம் அப்பா போய் பேசுனார்..

இப்படி ஆகும்ன்னு யாரும் எதிர்பார்க்கல.. நடந்த சம்பவம் எதிர்பார்க்காம நடந்தது.. இருக்கர கொஞ்ச கடனையும் சீக்கரம் அடச்சர்லாம்.. ரெண்டுபேருடைய விருப்பத்தை கெடுக்க வேண்டாம்ன்னு அப்பா சொன்னார்..

அதுக்கு அவங்க.. நாங்க எங்க பொண்ண எப்படி ஒன்னும் இல்லாத வீட்டுல கொடுக்கமுடியும்.. இவளுக்கு அடுத்து உள்ள பொண்ணுங்களையும் நாங்க பாக்கணும்.. இவள இப்போ கொடுத்துட்டா.. அடுத்த பொண்ணுக்கு நல்ல சம்மந்தம் எப்படி வரும்.. அதனால இத்தோட இதை முறிச்சுக்கலாம்ன்னு.. பட்டுன்னு சொல்லீட்டாங்க.. இதுக்கு அப்பரம் பேசரது நல்லாயிருக்காதுன்னு நாங்க கிளம்பினோம்.. அப்போ..

எங்க மாமா போறீங்கன்னு.. என்ன அப்பாவ பாத்து உங்க அம்மா கேட்டா..

எங்க அப்பாவால பதில் சொல்லமுடியாம நின்னார்..

இவ தான் எல்லர் முன்னாடியும் வந்து நின்னு.. எங்களுக்காக அவங்க அப்பாகிட்டையே எதிர்த்து பேசுனா.. என்ன அப்பா இது.. எங்க ரெண்டு பேருக்கும் நிச்சியம் ஆகி.. இன்னும் கொஞ்சநாள்ல கல்யாணம்.. இதோ.. அவர் அம்மா என் கழுத்துல போட்ட அவங்க பரம்பர நகை இன்னும் இருக்கு.. பெத்தவங்களான உங்களுக்கு தோணாத எண்ணம் கூட என் மாமாக்கு தோணி.. என்கிட்ட கல்யாணத்துக்கு சம்மாதம் கேட்டாரே.. இந்த குடும்பத்தவிடவா நல்ல குடும்பம் இருக்க போகுது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.