(Reading time: 18 - 36 minutes)

நீங்க சொன்னீங்கல்ல ஒன்னும் இல்லாத குடும்பம்ன்னு.. அந்த குடும்பம் இங்க வர வரைக்கும் நல்லா செல்வாக்காத்தானே இருந்தது.. இங்க என்ன பாத்துட்டு போன அப்பரம் தானே அவங்க மில் எல்லாம் எரிஞ்சு போச்சு.. அப்போ இது எல்லாத்துக்கும் என்னோட ராசி தான காரணம்.. இப்போ கூட அவங்க அதை சொல்லாம தான இருக்காங்க.. இப்போ வரை நான் அவங்க மருமகளா வரனும்ன்னு நினைக்கர இவங்கள விட வேர எந்த நல்ல குடும்பம் அப்பா எனக்கு கிடைக்க போகுது..

இவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கப்பா.. அதான் என்ன இப்போ வரை குறைசொல்லல.. சரி இவங்க  வேண்டாம்ன்னு சொல்லீட்டீங்க.. நாளைக்கு என்ன பார்க்க வர வேரவங்க கிட்ட இதை சொன்னா.. அவங்க இதை நல்லதாவா எடுத்துப்பாங்கன்னு.. நீங்க நினைக்கறீங்களாப்பா..

சரியோ.. தப்போ.. நீங்க எல்லாரும் பாத்தவர் தான் இவர்.. என் மனசுல இவர் தான் புருஷனா இருக்கார்.. அதுக்காக உங்க சம்மதம் இல்லாமா நாங்க கல்யாணம் பன்னிகவும் மாட்டோம்.. இன்னொருத்தர கல்யாணமும் பன்னிக்கமாட்டேன்.. இது தான் என் முடிவு.. இனி நீங்க தான் யோசிக்கனும்..

யாரும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு அவ பேசிட்டு உள்ள போயிட்டா.. யாரும் எதிர் பார்க்கல என் செல்லம் இப்படி எல்லாம் பேசுவான்னு நினைச்சது கூட இல்ல.. எனக்குள்ள ஒரு கர்வத்தை கொடுத்தா.. என்னோட காதலை நான் சரியானவ மேல தான் வச்சிருக்கன்னு சந்தோஷபட்டேன்.. இப்போவரை.. இருவரும் தங்களின் காதலை பரிமாறிக்கொண்டனர் கண்களாலே..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

நீ கேட்ட காதல்ன்னா.. கர்வம் இருக்கனும் மனுகுட்டி.. நான் சரியானவளை தான் என்னோட வாழ்க்கை துணையா தேர்ந்தெடுத்து இருக்கேன்னு காலர தூக்கிவிட்டு சொல்லனும்.. அது எங்களுக்கு கண்டிப்பா இருக்கு..

அதுக்கு அப்பரம்.. எங்க ரெண்டு குடும்பத்து ஆசிர்வாத்துடனும் எங்க கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சது.. நான் கல்லூரி படிப்பை முடிக்கர வரைக்கும் எங்ககிட்ட இருந்த நிலத்துல விவசாயம் பன்னோம்.. அப்பரம் நான் பிஸினஸ் பன்னும்ன்னு சொல்லி தனியா தொழில் தொடங்கினேன்.. இப்போ பெரிய கார்மன்ஸ் கம்பெனிக்கு  ஓனரா இருக்கேன்.. இது எல்லாத்துக்கும் உங்க அம்மா தான் காரணம்.. உங்க அம்மாவோட அன்பு தான் காரணம்.. என்னோட வெற்றிக்கு எப்பவும் உங்க அம்மா தான் காரணம் மனுகுட்டி.. என கூறி தன் மனைவியை பார்த்து கண்சிமிட்டினார்..

இது தான் எங்க காதல் கதை.. எப்படி இருக்கு..

ரொம்ப அருமையா இருக்குப்பா.. எவ்வளவு அருமையான ஜோடிக்கு பொண்ணுன்னு சொல்லரதே எனக்கு பெருமையா இருக்குப்பா..

இதுல என்னடா இருக்கு.. நீ கேட்டல்ல காதலுக்கு என்ன வேணும்ன்னு.. அதுக்கு நம்பிக்கை, நேர்மை, கண்ணியம், சரியான புரிதல், கர்வம், இது எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியமானது அன்பு.. இது எல்லாமே காதலுக்கு அஸ்திவாரம்டா செல்லம்..

ம்.. ரொம்ப சூப்பர் அப்பா.. அம்மா.. சரி நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கரேன்.. நீங்க கண்டன்யூ பன்னுங்க உங்க ரொமான்ஸ்ச ஹாஹ்ஹாஹா..

அடி கழுத..

அம்மா.. உங்களால என் காதை திருகமுடியாதே.. டாட்டா.. அழைப்பை துண்டித்தாள்..

அழைப்பை துண்டித்த பின்னும் அவள் போனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.. நான் ரொம்ப லக்கிதானே.. காதல் எப்படி வரும்ன்னு பெத்தவங்ககிட்டையே கேட்கரேன்.. அதுக்கும் அவங்க கோவபடாம தன்னோட சொந்த வாழ்க்கை அனுபவத்தை என்கிட்ட பகிர்ந்துகராங்க..

நான் மட்டும் இப்படி எங்க அம்மாகிட்ட கேட்டு இருந்தா.. ஒருகட்டு விலக்கமாறு பிச்சிருக்கும்.. நீ ரொம்ப லக்கி தான் மனுகுட்டி..

ம்.. காதல்.. இந்த காதல் ஒரு மனிசன எப்படி எல்லாம் ஆட்டி படைக்குது.. ரொம்ப வித்தியாசமா தான் இருக்கு.. அவளுடைய எண்ணங்கள் தன்னாலே அவள் பெற்றோருடன் அபியை ஓப்பிட்டு பார்த்தது.. தன் தந்தை சொன்ன நம்பிக்கை, நேர்மை, கண்ணியம், புரிதல், கர்வம்ன்னு எல்லாத்திலையும் அவள் மனம் அவளை அறியாமலே ஓப்பிட்டது அபியை..

சிறிது நேரத்தில்.. எதுக்காக நான் ஜித்துவ நினைச்சு பாக்கனும்.. நான் அவன விரும்பரனா என்ன.. இல்ல இது வெறும் ஈர்ப்பா தான் இருக்கும்.. ஆனா ஏன் யார் மேலையும் தோணாத ஒரு உணர்வு ஜித்து மேல தோணுது.. ஒருவேளை ஆகா உடனான உறவை அவன் புரிஞ்சுகிட்டதுனாலையா.. இல்ல அவன்கிட்ட நான் என் அப்பாவை அப்போ அப்போ பாக்கரதுனாலையா.. இல்ல அவன் என்மேல வெச்சுயிருக்கர அன்பா.. இல்ல அவன் என்மேல காட்டர அக்கரையா.. என்னனு தெரியாத.. புரியாத உணர்வா இருக்கு.. நான் எப்படி இதுக்கான பதில கண்டுபிடிக்கரது.. என்ன மேல அப்பாவும் அம்மாவும் வச்சிருக்க நம்பிக்கையை உடைக்காம இருக்கணும்.. நான் என்னோட துணை இவன்னு அப்பாவுக்கு முன்னாடி நிறுத்தும் போது அவர் சுட்டி காட்ட ஒரு குறையும் இருக்க கூடாது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.