“பெத்தவங்க நம்பிக்கையை காப்பாத்தணும்னு தான் சுஜனாவும் நினைச்சா.. ஆனா அவளை கல்யாணம் செஞ்சுக்க இருந்த சாத்விக்கும் இந்த கல்யாணத்தை விரும்பல.. அவர் உங்க ப்ரண்ட் பாலாவோட தங்கை தேவி, அதாவது யாதவியை காதலிக்கிறார். நீங்க கூட பார்ட்டில பார்த்திருப்பீங்களே, கையில் சுடுதண்ணி பட்ட அந்த பொண்ணுக்காக சாத்விக் எவ்வளவு உதவினார். அந்த பொண்ணை தான் அவர் காதலிக்கிறார். கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்றார்..” என்று அஜய் சொல்லிக் கொண்டு போக, விபா தன் கோபத்தை அடக்க பெரும்பாடு பட்டான்.
ஆனால் அவனையும் மீறி வந்த அந்த கோபத்தில், “சாத்விக் யாதவியை காதலிச்சா.. அப்புறம் சுஜனாவை கல்யாணம் செய்துக்க போறதா எதுக்கு பத்திரிக்கையில் அறிவிப்பு கொடுக்கணும்.. இதெல்லாம் சாதாரணமா போயிடுச்சா அவனுக்கு, சாத்விக் தன்னோட பொண்ணை தான் கல்யாணம் செய்துக்க போறான்னு சுஜனா அப்பா எவ்வளவு நம்பிக்கையா இருந்திருப்பாங்க..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஸ்ரீயின் " உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள்..." - நட்பு கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
காதலிக்கிறீங்கன்னா அதை உங்க பெத்தவஙக்கிட்ட சொல்லி கல்யாணம் செய்துக்காம, அப்பா, அம்மா சொன்னாங்கன்னு ஒரு பொண்ணையோ பையனையோ கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டு, அடுத்து அந்த கல்யாணத்தை நிறுத்தி விரும்பினவங்களோட சேர்ந்து உங்க இஷ்டத்துக்கு இருக்கிறீங்களே, அதால பாதிக்கப்பட்ற அந்த கல்யாண பொண்ணோ, இல்லை மாப்பிள்ளையையோ இல்லை அவங்க பேரண்ட்ஸ் பத்தியோ கொஞ்சமாவது கவலைப்பட்றீங்களா?” என்று கொதித்துக் கொண்டிருந்தான்.
“இங்க தான் சுஜனா, சாத்விக் ரெண்டுப்பேருக்குமே பிடிக்கலையே, அப்போ அந்த கல்யாணம் எப்படி சந்தோஷத்தை கொடுக்கும்.. ஒருவேளை சாத்விக்கிற்கு சுஜனாவை பிடிச்சிருந்தா நான் அமைதியா விலகியிருப்பேன்.. அப்படி இல்லாத பட்சத்தில் சுஜனாவை நான் கல்யாணம் செய்ய ஆசைப்பட்றது தப்பா?
நீங்க ஒருப் பொண்ணை காதலிச்சு அந்த பொண்ணுக்கு வேற ஒருத்தர் கூட கல்யாணம் ஏற்பாடு நடந்து, அந்த கல்யாணம் அவளுக்கு சந்தோஷத்தை கொடுக்காதுன்னு தெரிஞ்சா, நீங்க அப்போதும் அவ எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்துவீங்களா?” என்று கேட்க,
“எனக்கு ரிவர்ஸா தான் நடந்துச்சு அஜய்..” என்று மனதில் சொல்லிக் கொண்டவன், வெளியில் ஒரு விரக்தி புன்னகையை உதிர்த்தான்.
அவன் இத்தனை பேசியும் விபாகரன் அமைதியாக இருக்கவும், “எனக்கு உதவ உங்களுக்கு மனசு வரல இல்ல.. என்ன இருந்தாலும் இவன் நம்மக்கிட்ட வேலை பார்க்கிறவன் தானே.. இவனுக்கு நாம ஏன் உதவணும்னு நினைக்கிறீங்களா?” என்று அஜய் கேட்க, சாத்விக் அதிர்ந்தான்.
அஜய், சுஜனா திருமணம் நடந்தால், அடுத்து சாத்விக்கின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது புரிந்ததால் தான், அந்த கோபத்தில் இத்தனையையும் பேசிவிட்டான். அதேபோல் இப்படி ஒரு காதலால் தானே மனது நிறைய சுமைகளோடு பாதிப்புக்குள்ளாகி நிற்கிறான். அது தான் தன் ஆதங்கத்தை இப்படி கொட்டி தீர்த்தான். மற்றப்படி அஜய்க்கு உதவக் கூடாது என்ற எண்ணம் அவனுக்கு ஏற்படவில்லை.
“இப்படி தான் நடக்க வேண்டும் என்பதாக இருந்தால், அதை நாம் எவ்வளவு தடுத்தும் நடந்துவிடும், இதுவரை அவன் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் அவன் நினைத்தது போல் இல்லாமல், அவனை மீறி தான் நடந்திருக்கிறது. இனி நடப்பதும் அப்படியே நடக்கும் என்றால் நடக்கட்டும் என்று நினைத்தவனாக,
“விஜய் என்னோட தங்கையோட கணவனா இருந்தாலும், அவன் என்னோட சகோதரன் போல தான், அப்போ அவனோட தம்பி எனக்கும் தம்பி இல்லையா? அப்படியிருக்க உன்னை நான் என்கிட்ட வேலை செய்யும் ஆளா நினைப்பேனா?
இப்போ என்ன? நீ சுஜனாவை திருமணம் செய்ய, நான் மிஸ்டர் வீரராகவன் கிட்ட பேசணும் அதானே.. கண்டிப்பா பேசறேன்..” என்று உறுதி அளித்ததும், அஜய் மகிழ்ச்சியோடு விபாகரனை அணைத்துக் கொண்டான்.
மையல் தொடரும்..
Go to Maiyalil manam saaintha velai story main page
{kunena_discuss:1211}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.