(Reading time: 16 - 32 minutes)

தலையில் அடித்துக் கொண்டவனாய்,”ஏன் ஜிவி இப்படி சப்பாட்டு ராமியா இருக்க..என்னை சூப்பர் மார்க்கெட்னு சொல்லிட்டு நீதான் சாப்பாட்டு நியாபகத்துலயே இருக்க..”

“சரி சரி நோ டென்ஷன் சும்மா ..சொல்லுங்க என்னது?”

”அதுக்கு முதல்ல என்னை இங்க இருந்து நகர விடனும்”,என்றவன் தன் தோள் சுற்றியிருந்த அவள் கையைப் பார்த்து நின்றான்.

“ஹி ஹி ஐயோ எல்லாமே என் சைட்ல நான் சிங்லயே போகுதே..சாரி மிஸ்டர் சூப்பர் மார்கெட்..”

சிரிப்புடனேயே அங்கிருந்து நகர்ந்தவன் அலமாரியிலிருந்து ஒரு பரிசுப் பொருளோடு வந்தான்.அதை அவள் வாங்கச் சென்ற நேரம் பின்னே இழுத்தவன்,

“பதிலுக்கு எனக்கு??”

“காலையிலே இரண்டு தோசை எக்ஸ்ட்ரா குடுப்பேன் கண்டிப்பா இட்ஸ் அ ப்ராமிஸ்”

“நல்ல சோத்து மூட்டையை தலையில கட்டிருக்காங்க டீ இந்தா பிடி எனக்கு ஒரு கிப்ட்டும் வேணாம்”,என்றவன் கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டான்.பொறுப்பாய் அதை திறந்து பார்த்தவளின் விழிகள் அந்த மொபைலைக் கண்டு ஆச்சரியத்தில் விரிந்தன.

தன் நண்பன் ஒருவன் வாங்கி வரச் சொன்னதாகக் கூறி ஷாப்பிங் சென்ற இடத்தில் வாங்கினான்.தனக்காக அதை வாங்கியதை நினைத்தபோது மகிழ்ச்சியாய் இருந்தது.

மெதுவாய் இரண்டடி எடுத்து வைத்தவள் அவனருகில் சென்று கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தாள்.

“ஹேய்!”

“நா ஒண்ணும் அவ்ளோ மக்கு கிடையாது”,என்றவள் எங்கோ வெறித்தவாறே அவனருகில் அமர்ந்தாள்.

“ப்ரெண்டுக்கு வாங்கினதுனு சொன்னீங்க?”

ஆமா என்னோட வாழ்க்கை மொத்தத்துக்கும் என் கூட வரப் போற நல்ல ப்ரெண்ட்காக தான்.”

தேங்க் யூ சோ மச்..”

இல்ல ஜீவி நா தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லனும்..என் லைஃப்ல வந்ததுக்காக..இந்த காலத்துல உன்னை மாதிரி எத்தனை பேர் இருப்பாங்கனு விரல்விட்டு எண்ணிரலாம்.எல்லாரையும் சந்தோஷமா வச்சுக்குற.உனக்காக பெருசா எதுவும் எதிர்பார்க்க மாட்ற..கொஞ்சமும் ஈகோ இல்ல..நீ வச்சுருக்குற மொபைல் பாத்தேன்.அந்த டிஸ்ப்ளேல எப்படி நீ பார்த்து மெசெஜ் பண்ற கால் பேசுறனே தெரில அவ்ளோ டேமேஜா இருக்கு..

அதைக்கூட நீ பெருசா பொருட்படுத்துற மாதிரி தெரில.நம்மகிட்ட இருக்குறதை வச்சு நிறைவா வாழ்றது எல்லாராலயும் முடியாது ஜீவி.அதனால தான் உன்கிட்ட கேட்காம நானே வாங்கினேன்.”

என்ன சொல்றதுனு தெரில ஜெய்.அப்படியே பழகிட்டேன்..ஆனா என்ன என்கிட்ட கேட்டுருந்தா இன்னும் கொஞ்சம் காஸ்ட்லியான மாடல் கேட்டுருப்பேன்..மிஸ் ஆயிடுச்சு..ப்ச்ச்

ஹா ஹா உனக்கெல்லாம் சீரியஸா பேசவே வராதா?!”

ஏன் வராம அத்தை நாம ஊருக்கு போறதுக்கு முன்னாடி ஒரு கிப்ட் கேட்டாங்களே..அதற்கான முயற்சியில் தீவிரமா இறங்கலாம்னு இருக்கேன்..நீங்க என்ன சொல்றீங்க?”

ஏய்!!ஏண்டி இப்படி இருக்க நீ..கொஞ்சம் கூட கூச்சம் இல்ல பதட்டம் இல்ல??”

அது என் தப்பு கிடையாது அந்த அளவுக்கு நீங்க இடம் கொடுத்து வச்சுருக்கீங்க..ரொம்ப பிகு பண்றதா இருந்தா ஒண்ணும் தேவையில்லை விடுங்க.நா அத்தைகிட்ட சொல்லிட்றேன் உங்க பையன் அதுக்கு சரிபட்டு வர மாட்டாருனு..”

அவளை வேகமாய் தன்புறம் இழுத்தவன் அவளோடு கட்டிலில் சரிய அவன் மீது விழுந்தவளாய் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

இப்போ பேசினதுக்கெல்லாம் ரொம்ப ஃபீல் பண்ணுவ ஜீவிகுட்டி..”

ம்ம் பார்க்கலாம் பார்க்கலாம்..”,என்றவள் அதற்கு மேல் பேச முடியாத அளவு மிக இனிமையான தண்டனையை வழங்கியிருந்தான் அந்த அன்புக் கணவன்.

அதே நேரம் அங்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு கடைசி ப்ளைடில் வந்து கொண்டிருந்தான் ரேஷ்வா.மாலை படபிடிப்பு முடிந்து கிளம்பும் நேரம் ரினிஷாவுடனான உரையாடலை நினைத்தவாறே விழி மூடி அமர்ந்திருந்தான்.

ரினி நைட் சென்னை போறேன்..டூ டேஸ்ல வந்துருவேன்.”

..என்னாச்சு திடீர்னு..எனக்கு செம போர் அடிக்கும் கண்டிப்பா..”

இல்ல ப்ரெண்ட்க்கு லாஸ்ட் மந்த் வெட்டிங் முடிஞ்சுது சோ அவங்க ஹப்பியோட ட்ரீட்க்கு கூப்பிடுருக்கோம்.”

தேட்ஸ் சோ நைஸ்..ப்ரண்ட்ஸே இல்ல சொன்னீங்க?”

இவளோட ப்ரெண்ட் ஆகி சில மாசம் தான் ஆகுது ஆனா லைஃப்ல மோஸ்ட் இம்பார்டெண்ட் பெர்சன்னு சொல்லுவேன்.அப்படி ஒரு கேரக்டர்..அவளோட இருக்குற ஒவ்வொரு செகண்டும் அத்தனை ப்ளசண்டா இருக்கும்.”

நீங்களே இவ்ளோ சொல்றீங்கனா கண்டிப்பா அவங்களை மீட் பண்ணியே ஆகணுமே!ஆனாலும் இப்போ கல்யாணம் ஆயிடுச்சு சோ அப்படியே இருப்பாங்களானு தெரில இல்ல!”

சோ ட்ரூ ரினி எனக்கே அது அப்பப்போ தோணிட்டே இருக்கு.அவங்க இன் லாஸ் ஏன் அவ ஹப்பியே எப்படி இருப்பாங்களோ தெரில தான்.பட் எங்க இருந்தாலும் அவ நல்லா இருக்கணும் இருப்பா..அதுல எந்த சந்தேகமும் இல்ல.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.