(Reading time: 16 - 32 minutes)

சோ ஸ்வீட் கண்டிப்பா இருப்பாங்க.கன்வே மை விஷ்ஸ் டூ..எனி வே ஐ அம் கோயிங் டு மிஸ் யூ ஃபார் டூ டேஸ்.ஹவ் அ சேஃப் ஜெர்னி ரேஷ்

கைகுலுக்கி நகர்ந்தாலும் மனம் சில நொடிகள் அங்கேயே தங்கி விட்டது போன்ற உணர்வு ரேஷ்வாவிற்கு.

மறுநாளின் விடியல் அனைவருக்கும் அற்புதமாய் விடிந்திருந்தது.எழுந்து குளிந்து தலையில் கட்டிய துண்டோடு தனக்கான காபியை கையில் ஏந்திவாறே தன் முன் வெட்கத்தோடு நின்றவளை ஆசை தீர ஜெயந்த் ரசித்துக் கொண்டிருந்த நேரம் அவன் முகத்தில் வந்து ஏதோ விழுந்த பதட்டத்தில் அலறியடித்து எழுந்தான்.

அதான பார்த்தேன் கனவா நம்ம ஜீவிக்குட்டி ஒரே நாள்ல அப்படியெல்லாம் மாறுற ஆள் இல்லையே..”,என்று முணுமுணுத்தவாறே தன் முகத்திலிருந்த அவள் கையை எடுத்துவிட்டு அவள்புறம் திரும்பிப் படுத்தவன் கள்ளமற்ற அந்த முகத்தையே பார்த்திருந்தான்.

ஓய் லெக்ச்சரர் மேடம் புருஷனுக்கு முன்னாடி எழுந்து அவனுக்கு காபி போட்டு கொடுக்குற பழக்கம் எல்லாம் இல்லையா?”,என்றவாறே அவளின் கலைந்த முடியை காதுகளில் ஒதுக்கிவிட அதற்கு வாகாய் முகத்தை திருப்பியவாறே,

ம்ம் அதுக்கு புருஷனுக்கு முன்னாடி நா தூங்கிருக்கணும்..தட் பேட் பெல்லோ..”,அடுத்து என்ன கூறியிருப்பாளோ அவசரமாய் அவள் வாயை மூடினான் ஜெயந்த்.

உன்னோட மூடில டி போதும் தெரியாம சொல்லிட்டேன்.இப்போ நீ எழுந்து காபி வாங்கிட்டு வரியா இல்ல நா போகட்டுமா?”

அந்த பயம் இருக்கணும்இருந்தாலும் நீங்க என்ன நினைச்சு என் வாயை மூடினீங்க?”

நா ஒண்ணும் நினைக்கலயே?!”

எப்போ பார்த்தாலும் தப்பு தப்பாவே நினைக்குறது.ஜீவி எவ்ளோ குட் கேர்ள் தெரியுமா?”

எல்லாம் தெரியும் போ போய் வேலையை பாரு..உன் ப்ரெண்ட்ஸை பார்க்க போற ஐடியா இருக்கா இல்லையா?”

ஐயோ மறந்தே போய்ட்டேன்.என்ன மாம்ஸ் பொறுப்பே இல்லாம இருக்கீங்க மதியானம் ட்ரீட்க்கு இப்போவே எழுந்தா தான் கரெக்டா இருக்கும்.இவ்ளோ பொறுமையா எழுப்புறீங்க?”

சரிதான்..எல்லாம் என் நேரம்..நீ என்னவோ பண்ணு நா குளிக்க போறேன்..”

ஹே ஹே வெயிட் நா தான் பர்ஸ்ட் ப்ளீஸ் ப்ளீஸ்”,என்றள் கட்டிலில் உருண்டு எழுந்து அவனுக்கு முன்னாக குளியறைக்குள் நுழைந்து கொண்டாள்.

ஜெயந்தோ,” இதெல்லம் கண்டிப்பா அண்டாவுல போட்டு செஞ்ச கேஸ் தான்.யார் யாருக்கோ பாரத ரத்னா விருது குடுக்குறாங்க என் மாமியாருக்குல மொதல்ல குடுத்துருக்கனும்.அவங்க ஒரு வாழும் தெய்வம்..”,என்றவாறே ஹாலிற்குச் சென்று பேப்பரை எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.

இருவருமாய் தயாராகி காரில் கிளம்பிச் சென்றனர்.முதல் முறை ஜீவிகாவிற்கு தோன்றியது போன்றே அந்த இடத்தை பார்த்ததும் ஜெயந்திற்கும் தோன்றியது.

ஜீவி வீடெல்லாம் செமயா இருக்கு இல்ல இந்த ஏரியால?”

ஆமாங்க..அரண்மனை மாதிரி கட்டி வச்சுருக்காங்க..ரேஷ் வீடே அப்படி தான் இருக்கும்..ஆனா நல்ல மனுஷன் இல்லனா சங்கார்த்தமே வேணாம்னு ஓடிருப்பேன்..”

ஆனாலும் இவ்ளோ சஸ்பென்ஸ் ஆகாது யாருனு சொல்லலாம் தான அவரு முன்னாடி போய் பே னு நிக்கணும் அப்பறம்..”

அதுவும் கரெக்ட் தான்.சரி ரேஷ் இதோட முழு பெயர் என்னவா இருக்கலாம் கெஸ் பண்ணுங்க பார்ப்போம்.”

ம்ம் எனக்கு தெரிஞ்சு ஒரு தெலுங்கு அக்டர்..ரேஷ்வா தான் தெரியும் வேற எதுவும் சட்டுனு நியாபகம் வரலையே!”

வேற எதுவும் நியாபகம் வரவே வேணாம்..அதான் கரெக்டா சொல்லிட்டீங்களே!”

என்ன அவர் வீட்டுக்கா போறோம்?!!”

ஹா ஹா ஆமாங்க அவரு தான் எங்க ப்ரெண்ட்..முதல்ல ஆத்விக்கு தான் தெரியும் அப்பறம் எனக்கும் ப்ரெண்ட்அவரு முழு கதையை அப்பறமா சொல்றேன்.ஆங்..அதோ அந்த வீடு தான்.”

உள்ளே சென்று காரைப் பார்க் செய்துவிட்டு இருவருமாய் சேர்ந்து நிற்க அருகில் ஆத்விக்கின் காரைப் பார்த்தவள் ஜெயந்திடம்,

பார்த்தீங்களா சோறுனா உடனே வந்துருவான்..எனக்கு முன்னாடியே வந்துட்டான் பாருங்க..”

அதற்குள் ரேஷ்வாவும் ஆத்விக்கும் கார் சத்தம் கேட்டு வெளியே வர வழக்கம்போல் சத்தமாய் ஹாய் என்றவளை பார்த்தவர்களுக்கு மனம் இலகுவானது.இருவரும் ஜெயந்திடம் கைகுலுக்கி பேசியபடியே உள்ளே செல்ல அவள் அவர்களை முறைத்தவாறே அப்படியே நின்றாள்.

நா கோபமா கிளம்புறேன்.மச்சானை பார்த்ததும் என்னை மதிக்குறீங்களா நீங்க?”

நல்லது அப்படியே ஒரு ஆட்டோ பிடிச்சு போய்டு ஜீ உனக்கான ஜாமூனையும் சேர்த்து நானே சாப்ட்டுப்பேன்.”,என்று ஆத்விக் முடிப்பதற்குள் அவனையும் ஜெயந்தையும் இடித்தவாறு உள்ளே சென்றாள்.

ஹா ஹா ஜெயந்த் எப்படி சமாளிக்குறீங்க?”

என்ன பண்றது ரேஷ்வா சார் விதி வலியது இல்லையா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.