(Reading time: 15 - 30 minutes)

ஷான்யாவிடம் அலுவல் காரியங்களைத் தவிர எதையும் பேசிக் கொள்ளாமல் அமைதி காத்தான்.அவளும் எதைப் பற்றிய கவலையும் இன்றி சதாரணமாகவே இருந்தாள்.மாலைக்குள் அவரின் தினசரி நடைமுறைகளைப் பற்றி அனைத்து விவரங்களும் ஆத்விக்கிடம் வந்தது.

ஜீவிகாவிற்கு அழைத்தவன் அவளிடம் விஷயத்தை கூறி அடுத்து என்ன செய்யலாம் என்று கேட்டான்.

என்ன டா கேள்வி இது..டவுட்டே வேணாம் நாளை முதல் உன் மாமனாரோட வாக்கிங் மேட் நீ புரிஞ்சுதா?”

ஜீ!!!!ஏன் டீ இப்படி பண்ற அர்த்தராத்திரி அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துக்க சொல்றியே!”

அப்போ போ உன் ஷான்யாவுக்கு வேற ஒருத்தனோட கல்யாணம் பண்ணி வைப்பாரு..போய் வாழ்த்து சொல்லிட்டு வா.”

ஜீ!!”

கத்தாதடா லூசு..கடுப்பை கெளப்பாத..கொஞ்சமாவது சீரியஸா இரு டா..”

சரி சரி நோ டென்ஷன் ஜீ..நாளைக்குப் போய்ட்டு வந்துட்டு கால்பண்றேன்.”

அழைப்பைத் துண்டித்தவளை பாவமாய் பார்த்திருந்தான் ஜெயந்த்.

ஏன் மாம்ஸ் இப்படி பச்சை குழந்தை லூக்கு?”

இல்ல ஐடியா எல்லாம் பயங்கரமா கொடுக்குறியே அடி வாங்காம தப்பிச்சுருவானா?”

பொண்ணை கல்யாணம் பண்றதுனா சும்மாவா சில பல அடிகள் விழத்தான் செய்யும்..அதெல்லாம் நாம ஒண்ணும் பண்ண முடியாது மாம்ஸ்..”

அடிப்பாவி..அப்போ அவன்கிட்ட அவ்ளோ கெத்தா பேசின?”

அதெல்லாம் சும்மா அப்படியே அடிச்சு விடுறதுதான்.அதெல்லாம் கண்டுக்க கூடாது..எனக்குத் தெரியாம அவன்கிட்ட போட்டு கொடுத்துறாதீங்க மாம்ஸ்..”

உனக்குத் தெரியாம நா எங்க அவர்ட்ட பேசுறது..நம்பர் கூட வாங்கல..”

ஓ அப்போ நம்பர் கிடைச்சா போட்டு கொடுத்துருவீங்க?”

ச்சச்ச அப்படியெல்லாம் செய்வேனா ஜீவிகுட்டி..”

என்னமோ சொல்றீங்க நம்புறேன்..அந்த நம்பிக்கைல தான் குரூப்ல உங்களை அட் பண்ணி விட்டுருக்கேன்.”

அட இது எப்போ சொல்லவேயில்ல?”

ம்ம் அந்த மொபைல்னு ஒரு டிவைஸை அப்பப்போவாவது அதுக்குதான் பார்க்கணும்..எதோ சண்டைகாரன் மாதிரி அது ஒரு பக்கம் நீங்க ஒரு பக்கம்னு இருக்கீங்க?”

பொதுவா எனக்கு இந்த மெசெஜ் எல்லாம் அவ்வளவா வராது அதனால போன் அப்படியே இருக்கும் வீட்டில் இருக்கும்போது.இனி அது முடியாது போலயே!”

ரொம்ப கரெக்ட் நானே அதிகமா மெசெஜ் தான் அனுப்புவேன் காலேஜ்ல இருக்கும் போது.அதனால உங்களுக்கு வேற வழியே கிடையாது.”

ம்ம் வகையா சிக்கிட்டேன்னு சொல்ற..சமாளிப்போம்..”

மறுநாள் காலை ஐந்து மணிக்கே எழுந்து ட்ரக் பேண்ட் டீஷர்ட் சகிதம் வந்தவனை வினோதமாக பார்த்தார் ஆத்விக்கின் தாய்.

டேய் என்னடா நல்லா இருக்க தான??நான் காண்பதென்ன கனவா இல்லை நிஜமா?”

ம்மா ஏற்கனவே சீக்கிரம் எழுந்த கடுப்புல இருக்கேன்.இன்னைக்கு ஒரு நாள் என்னை விட்டுரும்மா.”

சரி சரி டா மகனே ஆனாலும்…”

ம்ம்மிமீ பாவம்..”

அழாத டா ஜீ நேத்தே சொல்லிட்டா போய்ட்டு வா போ..”

என்னது எங்க போறேன்னு தெரியுமா!!அப்பறம் ஏன் ஒண்ணும் சொல்லல?”

பொண்ணை விரட்டி விரட்டி காதலிக்க வச்சா தான் டா மகனே தப்பு.பொண்ணோட அப்பாவை தான கரெக்ட் பண்ண போற அதனால தப்பில்ல விடு..ஆனா அப்பாகிட்ட சொல்லிறாத பிச்சுருவார் உன்னை..”

நீயல்லவோ பெத்த தாய்..ஸ்வீட் மம்மி..சரிம்மா லேட் ஆச்சு பை..”,என்றவன் கிளம்பி ஷான்யாவின் தந்தை வாங்கிங் செல்லும் அந்த பூங்காவை அடைந்தான்.

அங்குமிங்குமாய் பார்வையை சுழற்றியவன் அவரை கண்டுகொண்டான்.பூங்காவை சுற்றியவாறு நடந்து கொண்டிருந்தவர் தன்னருகில் வரும் நேரம் தன் பர்ஸை கீழே போட்டுவிட்டு திரும்பி அமர்ந்து ஷு லேஸைக் கட்டிக் கொண்டிருந்தன்.

அவனருகில் அவர் அரவம் கேட்டவுடன் இன்னும் தீவிரமாய் குனிந்து கொள்ள அவன் நினைத்தவாறே அதை கையில் எடுத்தவர் அவனின் முதுகில் லேசாய் தட்டினார்.

தம்பி இது உங்க பர்ஸா?”

ஹாங்..ஆமா சார்..கீழே விழுந்திருச்சு போல தேங்க் யூ சோ மச்..”

பரவால்ல இருக்கட்டும்..”

சிநேகமாய் சிரித்தவன்,”பை த வே ஐ அம் ஆத்விக்”,என்று கை நீட்டி நிற்க,”இராஜசேகர்”,என்றவாறு அவரும் கைக்குலுக்கினார்.

இதுக்கு முன்னாடி உங்களை இங்க பார்த்ததேயில்லையே?”

அது வந்து அங்கிள் நா இன்னும் கொஞ்சம் எர்ளியா வந்துட்டு போய்டுவேன்.இன்னைக்குதான் கொஞ்சம் லேட்.”

.. இந்த ஏரியாவுலயா இருக்கீங்க?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.