(Reading time: 15 - 30 minutes)

அப்படிதான் அவர்கிட்டேயும் சொன்னேன் அட்ரெஸ் அனுப்புங்க நானே நேர்ல வரேன்னு..அவரும் அனுப்பினார்.என்னோட வேலையெல்லாமும் முடிஞ்சதுனால செங்கல்பட்டு பக்கத்துல இருந்த அவங்க வீட்டுக்கு கிளம்பி போனேன்.

வீட்டை பார்த்ததுமே அப்படி ஒரு ஷாக்.ரொம்ப ரொம்ப சாதாரணமான ஒரு வீடு.என்னை பார்த்ததும் அவங்க பையனே வந்து உள்ளே அழைச்சுட்டு போனார்.

கட்டிலில் படுத்துறந்தவங்களை பார்த்தப்போ அதைவிட பெரிய அதிர்ச்சி ஒருகாலத்துல ராணி மாதிரி பெரிய திரையில் அத்தனை பேராலயும் கொண்டாடபட்டவங்க இப்படி எலும்பும் தோலுமா இருந்ததை என்னால ஏத்துக்கவே முடில.

என்னை பார்த்தவுடனே சின்னதா ஒரு ஒளி அவங்க கண்ணுல அதைத் தாண்டி எதுவும் பேச முடில.அவங்க பையன் தான் என்கிட்ட விவரம் சொன்ன்னார்.”

நிறைய பேர்கிட்ட உதவி கேட்டோம் சார் யாருமே பண்ணல.நீங்க இங்க வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு.அம்மா ஒரு காலத்துல எத்தனை கம்பீரமா இருந்தவங்க..எத்தனையோ பேருக்கு எவ்வளவோ உதவி பண்ணிருக்காங்க.

யாருக்காவது பிரச்சனைனா முதல் ஆளா வந்து நிப்பாங்க.இப்போ இவங்க நிலைமையை பாருங்க.ஆடி அயர்ந்து போய் உக்கார காலத்துல தான் மனுஷங்களோட உண்மையான நிறம்தெரியும்னு சொல்லுவாங்க அது இவங்க விஷயத்துல எத்தனை சரியா இருக்கு பார்த்தீங்களா?

பேரு புகழ்னு அதை துரத்தி ஓடி தனக்குனு ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்காம விட்டுட்டாங்க.நா அவங்களோட வளர்ப்பு புள்ளை தான் ஏன்னு காரணம் தெரியாமயே சிலர் நம்ம வாழ்க்கையில் ஒருத்தங்களா ஆகிவாங்க இல்ல அப்படிதான் நாங்களும்.

அவங்க உடம்பில தெம்பு இருந்தவரை என்னை நல்லா பார்த்துகிட்டாங்க இப்போ அவங்களை பார்த்துக்க முடியாத கையாலாகாதவனா நா நிக்குறேன்.”

அவரு சொன்னதெல்லாம் கேக்கும் போது ரொம்ப கஷ்டமா போச்சு ரினி.அவரை சமாதானப்படுத்தகூட தோணாம அப்படியே உக்காந்திருந்தேன்.அவர்கிட்ட கொஞ்சநேரம் பேசிட்டு இருந்துட்டு தேவையான பணத்தையும் கொடுத்துட்டு எப்போ எந்த உதவினாலும் கால் பண்ணுங்கனு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.மனசு மட்டும் எதோ பாரமாவே இருந்தது.அதனாலேயே போன் கூட ஆன் பண்ண தோணாம அப்படியே விட்டுட்டேன்.

நேத்தே கிளம்பி இங்க வர்றதா இருந்தேன்.காலையில் வீட்ல டீவி ஆன் பண்ணா அந்த லேடி இறந்துட்டதா நியூஸ்..என்னால ஏத்துக்கவே முடில.மொபைலை ஆன் பண்ணா அவங்க பையன் நைட்டே அத்தனை கால் பண்ணியிருந்துருக்கார்.

அவரை கூப்ட்டு விவரம் கேட்டப்போ நைட் தூக்கத்துலயே உயிர் பிரிஞ்சுட்டதாகவும் நீங்களாவது உதவி பண்ண வந்தீங்களே அந்த நிம்மதிலேயே அவங்க போய் சேர்ந்துருப்பாங்கனும் சொன்னார்.

மனசு என்னவோ போல ஒரு நெருடல்.என்ன மாதிரியான வாழ்க்கை இல்ல.இந்த உடம்புல்ல தெம்பும் அழகும் ஆரோக்கியமும் இருக்குற வரை உலகமே நம்மளை தலையில தூக்கி வச்சு கொண்டாடும்.ஆனா இந்த தோல் சுருங்கி முடி கொட்டி அரை உயிரா இருக்குறப்போ நம்ம கூட இருக்குறவங்க தான் நமக்கானவங்க இல்ல.

எத்தனை ஈசியா தூக்கிப் போட்டுறாங்க.தன் படம் ஹிட் ஆகணும்னு எத்தனை பேர் அவங்களை  ஆஹா ஓஹோனு புகழ்ந்து பேசி கால்ஷீட் வாங்கி பெருமை படுத்தி அவார்ட் கொடுத்துனு கொண்டாடிருப்பாங்க.ஆனா உயிர் போற வேளையில ஒரு ரூபா குடுக்க கூட ஆள் இல்லாம இருக்காங்க.”

ரேஷ் ரிலாக்ஸ் ஏன் இவ்ளோ வருத்தப்படுறீங்க..”

இல்ல ரினி சொல்லப் போனா என் நிலைமையும் இதுதான என்னதான் இப்போ எனக்கு யாரும் வேண்டாம்னு தனியா சுத்திட்டு இருந்தாலும் இன்னும் கொஞ்ச வருஷத்துக்கு அப்பறம் என் நிலைமையும் இதுதான..”

ரேஷ் என்ன பேச்சு இது??”

தெரில ரினி ஆனா நேத்துல இருந்து இந்த தாட் தான் மைண்ட்ல ஓடிட்டே இருக்கு.ஹா சரி விடு..இப்போ ஏன் உன்கிட்ட இவ்ளோ பொலம்புறேன்னு கூட தெரில.ப்ரீயா விடு..உன் ஷாட் ரெடி ஆய்டுச்சு நினைக்குறேன் நீ போ..”,என்றவனுக்கு ஆறுதலாய் என்ன கூறுவது என்று தெரியாமல் அமைதியாய் அவனை கடந்துச் சென்றாள் ரினிஷா.

அவள் அங்கிருந்து நகர்ந்ததும் ஜீவிகாவிற்கு அழைத்தான் ரேஷ்வா.

சொல்லுங்க ரேஷ் டெல்லி போயாச்சா?ரெண்டுநாளா ஆன்லைன் கூட வரல?”

ம்ம் வந்துட்டேன் ஜி.ஷீட்ல தான் இருக்கேன்.மைண்ட் சரியில்ல ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு..”

ஹே என்னாச்சு உடம்பு எதுவும் சரியில்லையா?”

அதெல்லாம் ஒண்ணுமில்ல நல்லாதான் இருக்கேன்.”

ம்ம் அம்மாவை மிஸ் பண்றீங்களா ரேஷ்?”

ஜி!!!!”

அதுதான!”

ஆமா ஜி ஏன்னு தெரில அம்மாவை பார்க்கனும் போல இருக்கு.அவங்க கையால சாப்பிடனும் போல இருக்கு.”

அப்போ கிளம்பி வீட்டுக்கு போங்க இதுக்கா இவ்ளோ கவலை?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.