(Reading time: 15 - 30 minutes)

ப்ச்ச்

ரேஷ் நோ டென்ஷன்..உங்க வீடு உங்க அம்மா இதுக்கு எதுக்கு இவ்ளோ தயக்கம்.”

இல்ல ஜீ அவங்க அப்படி அன்பாயெல்லாம் நடந்துக்க மாட்டாங்க..அவங்களுக்கு என்னை பத்தின அக்கறையை விட அவங்க வேலை ஸ்டேடஸ் இதெல்லாம் தான் முக்கியம்.”

எல்லாம் கரெக்ட் தான் ஆனா நீங்களா என்னைக்காவது அவங்ககிட்ட போய் உங்க மனசுவிட்டு பேசிருக்கீங்களா?”

ம்ம் ஸ்கூல் டைம்ல முயற்சி பண்ணிருக்கேன்..ஆனா அதுக்கப்பறம் நானாவே கொஞ்சம் தனியா இருக்க பழகிட்டேன்.”

ம்ம் அப்போ உங்களுக்கும் பக்குவம் இல்லாத வயசு அம்மாவுக்கும் அவங்க பர்செனல் ப்ராப்ளம்ஸ் இருந்துருக்கும்.அதுக்கப்பறம் எப்போவாவது அம்மாக்கு ஆறுதலா நீங்க பேசிருக்கலாம் தான?”

“…”

உங்களை தப்பு சொல்லல ரேஷ்..அவங்களுக்கும் சரி உங்களுக்கும் சரி எதிர்பார்த்த நேரத்துல எதிர்பார்த்த அன்பு கிடைக்கல அதுதான் ஒருத்தர்கிட்ட இருந்து இன்னொருத்தரை தள்ளியே நிறுத்திருச்சு.ஆனா காலம் மாற மாற மனுஷங்களோட மனமும் மாறும்.

முன்னே இருந்த மனதிடமும் உடல் திடமும் நிச்சயமா அம்மாக்கு இப்போ இருக்காது.சோ அவங்களுக்கு வேண்டிய ஆறுதல் நீங்கதான்.ஒருதடவை வீட்டுக்கு போய்ட்டு வாங்க எல்லாம் சரியாய்டும்.”

ம்ம்

யோவ் தம் கட்டி இவ்ளோ லென்தா பேசிட்டு இருக்கேன் வெறுமனே ம்ம் சொல்றீங்க..உங்களை என்ன பண்ணலாம்?”

கண்டிப்பா வீட்டுக்கு போய்ட்டு வரேன் ஜி..நம்மளோட தப்பை திருத்துறதுக்கான வாய்ப்பு ஒரு தடவை தான் கிடைக்கும்.எனக்கு இப்போ கிடைச்சுருக்கோனு தோணுது.கண்டிப்பா சரி பண்றேன்.தேங்க்ஸ் ஜி..தேங்க்ஸ் பார் பீயிங் மை ப்ரெண்ட்..”

பார்ரா தேங்க்ஸாம் தேங்க்ஸ்..இதெல்லாம் என் டியூட்டி..ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு போய்ட்டு வந்துட்டு நல்ல ஸ்வீட்டோட வந்து எங்களை மீட் பண்ணுங்க.வாழ்க்கைக்கு சோறு மிகவும் முக்கியம் அமைச்சரே!”

ஹா ஹா அதான எங்க சுத்தினாலும் கரெக்டா சாப்பாட்டுல வந்து லேண்ட் ஆய்டு.”

சாப்பாடு அதானே எல்லாம்.ஐயோ கொடுமை லஞ்ச் ஹவர் முடிய போகுது நா போய் சாப்பிடணும்..ஈவ்னிங் பேசுறேன் ஒ.கே வா..பை பை..”,அழைப்பைத் துண்டித்தவனுக்கு மனதில் பல வகையான உணர்வுகள் ஆக்கிரமித்திருந்தன.

தொடரும்...

Episode # 09

Episode # 11

Go to Unnodu naanirukkum manithuligal story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.