(Reading time: 15 - 30 minutes)

மனுஷன் விடமாட்டாரு போல இருக்கே!!வளைச்சு வளைச்சு கேள்வி கேட்குறாரே!!ஒரு வேளை கண்டுபிடிச்சுட்டாரோ,ச்சச்ச அவ்ளோ மோசமாவா நம்ம பெர்பார்மென்ஸ் இருக்கு..”

தம்பி என்னாச்சு?”

அங்கிள் இல்ல ஒண்ணுமில்ல..நா இங்க பக்கத்துல தான் இருக்கேன்..ஆனா இந்த பார்க் ரொம்ப ப்ளசண்டா இருக்கும் அதனால ரெகுலரா இங்க வந்துருவேன்.”

ஓ சரி நல்லது..நா வரேன்..”,என்றவர் கிளம்பிச் சென்றுவிட பெருமூச்சோடு அப்படியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான் ஆத்விக்.

அவருக்குத் தேவையான விவரங்களை மட்டும் வாங்கிட்டு இப்படி நம்மள டீல்ல விட்டாறே..ம்ம் இவரை சமாளிக்குறதுக்குள்ள கடவுளே!!

தன் நிலையை எண்ணி நொந்து கொண்டிருந்த நேரத்தில் ஜீவிகாவிடமிருந்து மெசெஜ் வந்தது.

ஆத்வி என்னடா ஆச்சு?”

ஒரு நாளுக்கே முடில ஜீ..பேசாம ஷான்யாவை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிக்க போறேன்.”

முதல்ல தூக்கு அப்பறம் என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்..சரி ஈவ்னிங் பேசுறேன்.இன்னைக்கு காலேஜ் ஜாயின் பண்றேன்.பை..”

ஆத்விக் மச்சான் எதுக்கும் பார்த்து சூதானமா இரு..என் பொண்டாட்டி உன்னை போட்டுத் தள்ள பிளான் பண்றாளோனு தோணுது..”

மாம்ஸ் வரேன் சாய்ந்திரம் வீட்டுக்கு வந்து பாத்துக்குறேன் உங்களை..”

ஆமா மச்சான் ஆமா.என் மாமனாரை பார்த்தாலே தெரியுது விஷயம் மட்டும் தெரிஞ்சுது என்ன பிரிச்சு தொங்க விட்டுருவாரு கண்டிப்பா..

ஜீவிகா அன்று விடுமுறை முடிந்து கல்லூரியிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள்.மளிகை லோட் வருவதால் ஜெயந்த் காலையிலேயே வெளியே சென்றிருந்தான்.

அத்தை பொங்கலும் சாம்பாரும் சூப்பர்..இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆய்டுச்சு நாளைக்கு சீக்கிரமே எழுந்து கண்டிப்பா ஹெல்ப் பண்றேன்.அதே நேரம் இவ்ளோ டேஸ்டா எல்லாம் என் சமையலை எதிர்பார்த்துராதீங்க.கொஞ்சம் சுமாரா தான் இருக்கும்.”

அடடடா உக்காந்து பொறுமையா தான் சாப்டேன் டா..பேசிக்கிட்டே சாப்ட்டா உடம்புலயே ஒட்டாது.நாங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்ல சாப்பாடு சாப்பிடனும்னு ஆசை படுறோம் அதனால உங்க அத்தையே சமைக்கட்டும்..நீ வேலைக்கு மட்டும் போய்ட்டு வந்தா போதும்.”

இது என்னடா ஜீவி சமையலுக்கு வந்த சோதனை..மாமா இதுக்காகவே நாளைக்கு நான் தான் சமைக்குறேன்.அத்தை நீங்க யருக்கு சப்போர்ட் சொல்லுங்க?”

ஜீவிம்மா என் கண்ணு முன்னாடியே என் புள்ளையும் புருஷனும் கஷ்டப்படுறத என்னால பாக்க முடியுமா சொல்லு அதனால நானே சமைச்சுடுறனே!”

அடப்பாவிங்களா மொத்த குடும்பமும் இப்படி ஒண்ணு கூடிட்டீங்களே!இருக்கட்டும் வந்து கவனிச்சுக்குறேன்.முதல் நாளே லேட்டா போனா ஹெச் ஓடி எனக்கு லெக்சர் எடுக்க ஆரம்பிச்சுருவார்..போய்ட்டு வரேன் மாமா..அத்தை டாடா..”

தன் வண்டி சாவியையும் பையையும் எடுத்துக் கொண்டு ஓடியவளைப் பார்த்து சிரித்தவாறே வாசல் வரை சென்று வழியனுப்பி வந்தார் ஜெயந்தின் தாய்.

இப்படியாய் அவரவர் வழக்கத்தில் மாற்றமின்றி இரு தினங்கள் கடந்திருக்க ரேஷ்வா அன்று படப்பிடிப்பிற்குச் சென்றிருந்தான்.அவனை கண்டதும் ஒன்றும் பேசாமல் ரினிஷா அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

ஹாய் ரினி எப்படியிருக்க.?”

பரவாயில்லையே என்னையெல்லாம் நியாபகம் இருக்கா உங்களுக்கு?”

ஹே என்னாச்சு ஏன் இவ்ளோ கோபம்?”

கோபமா கொலைவெறில இருக்கேன்..எப்போ வரேன்னு சொன்னீங்க வந்ததே லேட் அதுலயும் ஒரு அப்டேட் கூட இல்ல மொபைலும் ஸ்விச்ட் ஆஃப்..டூ பேட்..”

அது ஒரு சின்ன எமெர்ஜென்சில மாட்டிட்டேன்..அதனால தான்..”

பொய் உங்க ப்ரெண்ட்ஸை பார்த்தவுடனே என்னை டீல்ல விட்டுடீங்க

ஐயோ நீ வேற..அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல அவங்ககிட்டேயும் பேசவே இல்ல..வேணா என் மொபைல் கூட தரேன் செக் பண்ணி பாரு..”

ஐயோ ரேஷ்..சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் ஏன் இவ்ளோ சீரியஸா எடுத்துக்குறீங்க..பை த வே எதுவும் ப்ராப்ளம் இல்லையே?”

ப்ராப்ளம்னு சொல்ல முடியாது ஆனாலும் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு..”

என்னாச்சு ரேஷ்?”

நேத்துக்கு முந்தைய நாள் எனக்கு ஒரு போன் வந்தது.நம்ம இன்டஸ்ட்ரீல ஒரு காலத்துல கொடிகாட்டிப் பறந்த நடிகை ஒருத்தங்களோட பையன் பேசினார்.

முதுமையின் காரணமா அவங்களுக்கு உடம்பு சரியில்லைனும் பாத்துக்க போதிய அளவு பணம் இல்லாம கஷ்டபடுறோம்.அவசரமா உதவி தேவைப்படுது பண்ண முடியுமானு கேட்டாரு.

இந்த மாதிரி சில உதவிகள் என்னால முடியுற அப்போ செய்வேன் தான்.ஆனா நானே நேர்ல போய் பார்த்து எல்லாம் சரியா தேவையானவங்களுக்கு போய் சேருதானு பார்த்துப்பேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.