(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ

Unnodu naanirukkum mani thuligal

காதல் ஆசை யாரை விட்டதோ

உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ

காதல் தொல்லை தாங்கவில்லையே

அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே

யோசனை ஓ… மாறுமோ ஓ… பேசினால் ஓ… தீருமோ ஓ…

உன்னில் என்னை போல காதல் நேரமோ

 ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே

உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்

என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே

நான் பிறந்தது மறந்திட தோணுதே

உன் ஒரு முகம் உலகமாய் காணுதே

உன் ஒரு துளி மழியினில் தீராதோ என் தாகமே

 காதல் ஆசை யாரை விட்டதோ

உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ

ஓ… காதல் தொல்லை தாங்கவில்லையே

அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே

ன்றைய இரவு தனது அறையின் பால்கனியில் நின்றிருந்தவனுக்கு மனம் ஒருவித உற்சாகத்தில் இருந்தது.காலையில் ஆத்வி ஜீவி ஜெயந்த் என அத்தனை பேருடனான பொழுதுகள் ரேஷ்வாவிற்கு வித்தியாசமானதாய் அமைந்திருந்தது.

அவனை விட மற்றவர்கள் இருவருமே பொருளாதார வகையில் சற்று பின் தங்கியவர்களே ஆனாலும் எத்தனை சந்தோஷமாய் எத்தனை இயல்பாய் இருக்க முடிகிறது.அதிலும் ஜீவிகா ஜெயந்தின் பந்தம் திருமணத்தின் மீதான ஒருவித நம்பிக்கையை கொண்டு வந்திருந்தது அவனிடத்தில்.

வெறும் பத்து பதினைந்து நாட்களில் இப்படி ஒரு அந்நியோன்யம் எப்படி சாத்தியம்.கணவனை நண்பனாய் நினைக்கும் மனைவி.மனைவியை தனக்கான பொக்கிஷமாய் நினைக்கும் கணவன்.என்ன அழகான வாழ்க்கை என்றே தோன்றியது.சரியாய் அந்த நேரம் ரினிஷா அவனை அழைத்தாள்.

ஹாய் ரினி எப்படியிருக்க?”

ம்ம் என்ன சார் ஊருக்கு போனவுடனே என்னை மறந்துட்டீங்க போலயே ஆன்லைன் கூட வரல?”

அப்படியெல்லாம் இல்லை ரினி..ப்ரெண்ட்ஸோட ஹேட் அ க்ரேட் டைம்..ஜஸ்ட் செட்டில் ஆனேன்.”

சூப்பர்..அப்பறம் எப்படியிருக்காங்க உங்க ப்ரெண்ட்ஸ்?”

ரொம்ப நல்லாயிருக்காங்க..வாழ்க்கையில் பணம் பேர் புகழ் தாண்டி எத்தனையோ இருக்குனு இன்னைக்கு உணர்ந்தேன்.”

என்னாச்சு இமோஷ்னலா பேசுறீங்க ஆர் யூ ஓ.கே?”

யா பெர்பெக்ட்லி ஆல் ரைட்.ஆனா இத்தனை வருஷத்துல முதல் தடவையா உறவுகள் மேல நம்பிக்கை வந்துருக்கு ரினி.

ஜீவிகா ஜெயந்த் என்ன ஒரு ஆசம் கப்பிள்.தே ஆர் காம்ப்ளிமெண்டிங் ஈச் அதர்..ஜீவி அண்ட் ஆத்விக் கூட பிறக்கலனாலும் ப்ரதர் சிஸ்டர் மாதிரி இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அத்தனை சப்போர்ட்டிவா இருக்காங்க.

நம்மை சுத்தி நிறைய நிறைய நல்லது இருக்கு பல நேரத்துல நம்ம கண்ணுல படுறது இல்ல அவ்ளோ தான்.அந்த விதத்துல நீ கூட என் லைப்ல அப்படிதான்.இத்தனை வருஷ இன்ஸ்ட்ரி வாழ்க்கைல என் வேவ் லென்த்துக்கு செட் ஆனா பர்ஸ்ட் பெர்சன்.”

“….”

ஹலோ ரினி லைன்ல இருக்கியா?”

ஆங் இருக்கேன் நீங்க சொல்றது எல்லாமே சரி தான் செலப்ரட்டினு ஆனதுக்கு அப்பறம் லைப்ல நிறைய மிஸ் பண்றோம் தான்.நம்ம பழைய ப்ரெண்ட்ஸ்கிட்ட கூட நினைக்குற அப்போ எல்லாம் பேச முடியாம ஒரு ஸ்டேஜ்ல கான்டாக்டே இல்லாம போய்டுது.அட்லீஸ்ட் நம்ம ப்ரெண்ட்ஷிப்பாவது கண்டினியூ ஆகணும்.”

கண்டிப்பா ரினி..நீயும் எங்க கேங்ல ஒருத்தி தான் இனிமே.சென்னை வந்தப்பறம் கண்டிப்பா ஒரு மீட் அரேண்ஞ் பண்ணலாம்.”

ஷுவர் ரேஷ்..சரி ரொம்ப லேட் ஆச்சு போய் தூங்குங்க.நாளைக்கு கிளம்பிருவீங்க இல்ல.சீ யூ சூன்..பை..”

அழைப்பை துண்டித்தவனுக்கு அவளை ஏன் தனக்கு முக்கியமானவள் எனக் கூறினோம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தான்.அதைவிட அதற்கான அவளது நொடி மௌனம் அவனுக்கு ஒருவித மகிழ்ச்சியை கொடுத்திருந்தது.

அத்தனை இனிமையான நினைவுகளோடு நித்திரையில் தன்னைத் தொலைத்தான் ரேஷ்வா.

மறுநாள் காலையில் அலுவலகத்திற்கு வந்த ஆத்விக் தன் நண்பன் ஒருவனை தொடர்பு கொண்டு ஷான்யாவின் அப்பாவை பற்றிய விவரங்களை அறிந்து வருமாறு கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.