(Reading time: 6 - 11 minutes)

தொடர்கதை - என்னவளே - 20 - கோமதி சிதம்பரம்

ennavale

கீதாவை அந்தநேரம் அங்கு  எதிர்ப்பார்க்காத க்ரிஷ்  தான் ஓங்கிய கையை சட் என்று கீழயே இறக்கி கொண்டான்.

நித்யா... என்ன அச்சுமா ஏன் இப்படி கிழ விழுந்து இருக்க ????? அடி ஏதும் பட்டுடுச்சா???? என்று கீதா அவள் அருகில் சென்று கேட்டாள்.

க்ரிஷ், முதலில் தன்னை ஏன் அடித்தான் என்றேயே... நித்யாவிற்கு புரிய வில்லை... ஒரு வேளை க்ரிஷ் தன்னை பற்றி தெரிந்து கொண்டனாயோ.... ஆண்டவா... இப்போது என்ன செய்வது... கீதா அக்காவிற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல்திரு திரு வென க்ரிஷ் பார்த்து முழித்தாள்.

நித்யா முழிப்பதை பார்த்தவன்...  அய்யயோ இவ வேற அண்ணி கிட்ட என்னை மாட்டி விட்டுடுவா போல இருக்கேயே.... ஏற்கனவேயே, இருக்குற பிரச்சனை போதாதா....  அண்ணி வேற நான் இவளை அடிக்க கை ஓங்குனாதா வேற பார்த்துட்டாங்க.... வேற வழி இல்லை எதாவது பண்ணி சமாளிக்க வேண்டியது தான்.

அண்ணி.... நானும் நித்யாவும் சும்மா பேசிட்டு இருந்தோம்... அப்ப திடிருனு கால் தடுக்கி இவங்க கிழ விழுந்துட்டாங்க அதான், தூக்கலான்னு வந்தேன். என்று சிரித்து கொண்டேயே கூறினான்.

கீதா, திரும்பி நித்யாவை க்ரிஷ் கூறுவது உண்மையா என்பதை போன்ற பார்வை பார்க்க......

அதுவரை, க்ரிஷ் யை  பார்த்து கொண்டு இருந்த நித்யா ஆமாம் என்று வேகமாக தலை ஆட்டினாள்.

கீதாவிற்கு, இவர்கள் இருவர்களுக்குகுள் ஏதோ சரி இல்லை என்று புரிந்தது. அதோடு மட்டும் இன்றி நித்யாவின் ஒரு கண்ணம் சிவந்து இருந்து தையும் பார்த்து விட்டு இருந்தாள்.

சரி, நீ எழுந்து முதலில் கீழ வா... மத்ததை ரூம் லா போய் பேசிக்கலாம். என்று கூறியவரேயே கீதா நித்யா தூக்க முயல... நித்யா ஆஆஆ.... என்று கத்தினாள்.

என்ன  அச்சுமா.... என்று கீதா பதறி யவாறு  கேட்க.....

அக்கா.... அடிச்சதுல என்று சொல்லி விட்டு நாக்கை கடித்து கொண்டவள் க்ரிஷ் அவளை பார்த்து முறைக்கவும்.... இல்லா இல்ல.... கால் தடுக்கி கீழ விழுந்ததுல பாதம் பிசங்கிடுச்சு போல நடக்க முடில என்று வலியுடன் கூறி முடித்தாள்.

கீதாவிற்கு, புரிந்து விட்டது. இவர்கள் இருவர்க்கும் ஏதோ பிரச்சனை... அதற்காக , க்ரிஷ் இவளை அடித்து இருக்கிறான். 

என்னை கண்டதும் மறைக்கிறான்.... நித்யாவும் கூட உண்மையை மறைக்கிறாள். ஒருவேளை, க்ரிஷ் முன்பு சொல்ல பயபடுகிறாளா??????.

க்ரிஷ் யை பார்த்தவரேயே  இல்லை இல்லை முறைத்தவரேயே கீதா எழுந்து நின்றாள்.........நான்  போய் கீழ 

 வலிக்கு அடிக்குற  ஸ்பிரேய எடுத்துட்டு வரேன்.... அதுவரைக்கும் நித்யாவை பத்திரமா பார்த்துக்கோங்க பத்திரம்.... என்பதை அழுத்தி கூறினாள்.

க்ரிஷ்யும் அண்ணியின் முறைத்த பார்வையை புரிந்து கொண்டவன் சரி என்று தலையை மட்டும் ஆட்டினான்.

அய்யயோ... தன்னை மீண்டும் இவனிடம் தனியே விட்டு அக்கா செல்கிறார்களேயே என்ற பயத்தில் நித்யா கீதாவை பார்த்தாள்.

அவளது பார்வையை உணர்ந்து கொண்ட கீதா, இதோ.... டூ மினிட்ஸ் வந்துடுறேன் பயப்படாத என்று கூறியவாறு மாடியை விட்டு கீழயே இறங்கி சென்றாள்.

கீதா, சென்றதும்... க்ரிஷ் மாதவியின் கழுத்தை பிடித்து இருந்தான்.

என்னாடி... என் அண்ணிகிட்ட உன்னை அடிச்சதா சொல்லனுனு பாக்குறிய???? மவளேயே.... கொன்னுடுவேன்.

ச்சீ.... வெட்கமா இல்ல.... உனக்கு அடிபட்டு இருக்குன்னு தெரிஞ்சதும்.... உனக்கு உதவி செய்ய ஓடுறாங்க.... ஆன நீ அவங்க வாழ்க்கையே கெடுக்க பாக்குறா..... நீ எல்லாம் நல்ல குடும்பத்துல பொறந்தா பெண்ணாய???? என்று கோபத்தில் கத்தியவன் அப்பொழுது தான் நித்யாவின் கண்களை பார்த்தான். ஏனோ அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.....மெல்ல அவளது கழுத்தை பிடித்து இருந்த கையை விடுவித்தான்.

க்ரிஷ் யின் வார்த்தைகளை கேட்ட நித்யா கதறி அழுதாள்.  

அவளது அழுகையை பார்த்த  க்ரிஷ் யிற்கேயே ஒருமாதிரி ஆகிவிட்டது. இதுவரை, கோபத்தில் கத்தி கொண்டு இருந்தவன் அவளின் அருகில் அமர்ந்து ப்ளீஸ் அழாத.... நீ செஞ்சுட்டு இருக்குற விஷயம் ரொம்ப தப்பு.

என்னோட  அண்ணாவும் அண்ணியும் மூணு வருஷம் பிரிஞ்சு இருந்து இப்பதான் ஒண்ணு சேர போறாங்க... அதுக்கு இடையூறா நீ இல்லை யார் வந்தாலும் நான் ச்சும்மா இருக்கமாட்டேன்.

அந்த கோபத்தில் தான் உன்னை அடிச்சுட்டேன்.... சாரி.... நீ அழாத உன்னை இப்படி பார்க்க என்னோ என்னால முடில..... என்று கூறியவாறு நித்யாவை பார்த்தான்.

அதுவரை, அழுது கொண்டு இருந்த நித்யாவும் தனது அழுகையை நிறுத்தி அவனை நேராக பார்த்தாள்.

என்னால... உங்க அண்ணா அண்ணி  வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வாராது. நான், இப்ப சூழ்நிலை கைதியா இருக்கேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.