(Reading time: 15 - 29 minutes)

உங்களுக்கு கெட்ட நேரம் உச்சந்தலையில் உக்காந்து டிஸ்கோ ஆடினா யாரால காப்பாத்த முடியும்..வாங்க வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்க..”

ஹா ஹா யூ ஆர் சோ ஸ்வீட்..”

ஐயோ ஆமாங்க இங்க எறும்புத் தொல்லை தாங்கவே முடில..ஒரு வேளை அதனால தான் என்னை கடிச்சுட்டே இருக்கோ

ப்பாபா ரேஷ் அடிக்கடி உங்களைப் பத்தி சொல்லுவார் ஆனா இத்தனை பெரிய கடினு சொல்லல..”

என்ன ஒரு டைமிங்..ஹா ஹா இருந்தாலும் நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க..நா அவர் மட்டும் தான் இருக்காருனு நினைச்சு பேசிட்டேன்.”

ஹே நானும் யூத் தான்ம்மா.இதெல்லாம் எங்களுக்கும் பிடிக்கும்..”

அப்போ ஓ.கே மொக்கை போடுறது தான் இந்த கேங்ல சேர்றதுக்கான முதல் க்வாலிபிகேஷன்..ரேஷ் தான் தப்பி தவறி சேர்ந்துட்டார்.நீங்க செலெக்டட்ங்க..”

அட இந்த ங்க எல்லாம் சொல்லாதீங்க எனக்கே ரொம்ப வயசான பீல் வருது..நானும் உங்க செட் தான்..”

அடடா என்னை பத்தி முழுசா தெரியாம இப்படியெல்லாம் சொல்றிங்களே நானே முதல் தடவை பேசுறோமேனு இத்தனை கம்மியா பேசுறேன்.”

ஓ இந்த அடக்க ஒடுக்கம்னு சொல்லுவாங்களே அதுவா இது!!இந்த அடக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு ஜி..”

ஆமா நீங்க மலையாளி தான?நா கூட உங்ககிட்ட மலையாளம் கத்துக்கலாம்னு பார்த்தா தமிழ் இப்படி பிச்சு உதறீங்களே

உயிர் கொடுத்த அன்னை மலையாளம் தூக்கி வளர்த்த தந்தை தமிழ் ஆச்சே!!எப்பூடி..”

அட பாவிங்களா தமிழ் பட்டிமன்றமே நடத்துவீங்க போலயே..சூப்பர் சூப்பர் உங்க கூட பேசினதுல ரொம்ப சந்தோஷம்..க்ளாஸ்க்கு டைம் ஆச்சு..சென்னை வரப்போ வீட்டுக்கு கண்டிப்பா வாங்க..ஒரு நிமிஷம் ரேஷ்கிட்ட போனை கொடுங்களேன்.”

ஷுவர் ஜி டேக் கேர்…”,என்றவள் ஸ்பீக்கரை ஆப் செய்து ரேஷ்வாவிடம் கொடுத்துவிட்டுச் சிரித்தாள்.

சொல்லு ஜி

மகனே ஒழுங்கா ஒரு நிமிஷம் ஸ்பீக்கரை ஆப் பண்ணுங்க..இல்லனா உங்களுக்குத் தான் பிரச்சனை.”

ஹா ஹா சொல்லு

என்ன லவ்ஸா சொல்லவே இல்ல கேடி!”

ஏய் அதெல்லாம் ஒண்ணுமில்ல..”

நம்பிட்டேன் ஒண்ணும் இல்லாமதான் இப்படி உக்காந்து மொக்கை போட்டுட்டு இருக்கீங்களா?இதுக்கு முன்னாடி எந்த ஹீரோயினோடையாவது இப்படி பேசிருக்கீங்களா..”

அது அது..எல்லாரோடையும் ப்ரெண்டா ஆக முடியுமா சொல்லு?”

ம்ம் முடியாது தான் கரெக்ட் தான் ஆனா எனக்கு என்னவோ இது ப்ரெண்ட்ஷிப்னு தோணலையே?!”

அம்மா தாயே அதெல்லாம் ஒண்ணுமில்ல நீயா எதையாவது கொளுத்தி போடாத..ஒருத்தன் ஆல்ரெடி இப்படி உசுப்பேத்தி விட்டு தான் பார்க் பார்க்கா சுத்திட்டு இருக்கான்.அடுத்து நானா.?”

அடடடா என்ன ஒரு தன்னடக்கம்..ம்ம் ம்ம் நடக்கட்டும் பார்க்க தான போறோம் உங்க ப்ரெண்ட்ஷிப்பை..

அட இருங்க டா வரேன்..நா நிம்மதியா இருந்தா இவனுங்களுக்குப் பொறுக்காதே..சரி ரேஷ் பை இந்த வானரப் படையை போய் கொஞ்சம் கவனிச்சுட்டு வரேன்டேக் கேர்..”

பை ஜி மச்சானை விசரிச்சதா சொல்லு..”

என்னாச்சு பேஸ் எல்லாம் ப்ளஷ் ஆச்சு என்ன சொல்றாங்க?”

அதெல்லாம் ஒண்ணுமில்ல அவளுக்கு வேற வேலை என்ன எதாவது கலாய்ச்சுட்டே இருப்பா..நத்திங் சீரியஸ் ரினி..”

ஹாங் பட் சோ க்யூட் உங்க ப்ரெண்ட்ஷிப்..லைப் எப்பவுமே எதிர்பார்க்காத ரிலெஷன்ஷிப்ஸ்னால தான் ரொம்ப அழகாய்டுது..கண்டிப்பா சென்னை போனதுக்கு அப்பறம் மீட்பண்ணலாம்..”

உண்மை தான்..யா கண்டிப்பா ப்ளான் பண்ணலாம் ரினி..”

அவளையே பார்த்திருந்தவனுக்கு ஜீவிகாவின் பேச்சுகள் மனக் கண்ணில் காட்சிகளாய் விரிந்து கொண்டேயிருந்தது..

வகுப்பறைக்குள் நுழைந்தவள் தன் கையில் கொண்டு சென்ற புத்தகத்தை வைத்து டேபிள் மீது தட்டினாள்.

அயையே இதென்ன க்ளாஸா சந்தை கடையா இப்படி கத்திட்டு இருக்கீங்க?”

குட்மார்னிங் மேம்.!!”

நல்லா பாட்டு மட்டும் பாடுங்க..சரி இன்னைக்கு எக்ஸாம்னு சொல்லிருந்தேனே எல்லாரும் ப்ரிபேர் பண்ணிருக்கீங்களா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.