(Reading time: 15 - 29 minutes)

மேம்!!!”

நோ மோர் எக்ஸ்கியூஸஸ்..டேக் தி பேப்பர்..”,என்றவள் அனைவருக்குமான கேள்வியை கூறிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தாள்.அனைவரையுமாய் நோட்டமிட்ட படியே பார்வையை சுழற்றியவளுக்கு ஒரு மாணவி ஒன்றும் எழுதாமல் வெளியே எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது கண்ணில்பட்டது.

வைஷ்ணவி வாட் ஹப்பண்ட்?”

நத்திங் மேம்..”,என்றவள் எழுதுவதைப் போன்று தலையை குனிந்து கொண்டாள்.அதன்பின் அவ்வப்போது அவளைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள் ஜீவிகா.அவள் கவனம் இங்கு இல்லை என்பதை அறிந்தவள் வகுப்பு முடிந்ததும் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

என்னாச்சு வைஷ்ணவி நீ இப்படி இருக்குற ஸ்டூடண்ட் இல்லையே எனி ப்ராப்ளம்?”,சட்டென அப்பெண்ணின் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

ஹே ரிலாக்ஸ்..சரி இங்க நிக்க வேண்டாம் வா என் கூட”,என்றவள் அவளை பெண்கள் ரெஸ்ட் ரூமின் அருகில் அழைத்துச் சென்று விஷயத்தை பற்றி விவரம் கேட்டாள்.

மேம்..அது என் மேல எந்த தப்பும் இல்லை மேம்..”

என்னனு சொன்னா தானம்மா புரியும்என்னாச்சு சொல்லு..”

மேம்..அது லாஸ்ட் செமஸ்டர்ல நாங்க போன இன்டர் காலேஜ் மீட்ல ஒரு பையனோட அறிமுகம் கிடைச்சது.என்னை மாதிரியே அவனும் பேப்பர் ப்ரஸெணௌடேஷனுக்கு தான் வந்துருந்தான்.படிப்பை பத்தி ஜெனரலா பேச ஆரம்பிச்சோம்.

அப்பறம் அந்த ரெண்டு நாள்ல நல்லாவே பேசினோம்.போன் நம்பர் எக்ஸ்சேஞ்ச் பண்ணிகிட்டோம்.ஒரு ஒன் மந்த் எந்த பிரச்னையும் இல்லாம தான் போச்சு..அப்பறம் ஒரு நாள் வந்து அவன் என்னை லவ் பண்றதா சொன்னான்.எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுனு கூட தெரில.ஒரு ஒன் வீக் அவனோட மெசெஜ் கால்ஸ் எதுக்கும் ரெஸ்பாண்ட் பண்ணல.

அவனே என்னை நேர்ல பார்க்க வந்துட்டான்.நிறைய பேசினான் எனக்காக தான் வாழ்றேன்னு கூட சொன்னான்.ஒருவிதத்துல பரிதாபப் பட்டு அவனுக்கு ஓகே சொல்லிட்டேன்.அதுக்கப்பறம் வெளில கூப்பிடுவான் நா முடியவே முடியாதுனு சொல்லிட்டேன்.அவனும் என்னை கம்பள் பண்ணல.

ஒரு நாள் காலேஜ் வாசல்ல என்கிட்ட பேசிட்டு இருந்தான்.நான் உள்ளே வந்தப்பறம் பிஜில ஒரு சீனியர் என்னைப் பார்த்து பேச வந்தார்.அவன் கரக்டர் சரியில்லைனும் இதுவே தான் அவனுக்கு வேலைனும் சொன்னார்.

படிச்சவனா பார்க்க வெல் செட்டில் பேமிலி பேக்ரவுண்ட்ல இருக்குறதுனால யாருக்கும் அவன் மேல சந்தேகம் வரதேயில்லை.ஆனா நானும் அவன் ஏரியா தான்.எங்க ஏரியால அத்தனை பேருக்கும் அவனைப் பத்தி தெரியும்.சரியான பொறுக்கி.தங்கைச்சியா நினைச்சு சொல்றேன்.அப்பறம் உன் இஷ்டம்னு சொல்லிட்டு போய்ட்டார்.

அவர் அப்படி சொன்னதுல இருந்தே என்னால அவனோட சாதாரணமா பழக முடில.என்னை அறியாமையே அவனை கொஞ்சம் அவாய்ட் பண்ண ஆரம்பிச்சேன்.நேடியா அவன்கிட்ட எதையும் சொல்லலனாலும் அவனுக்கே ஏதோ புரிஞ்சுருக்கணும்.

கொஞ்ச கொஞ்சமா என் மேல சந்தேகம் வந்து என்ன என்னனு கேட்க ஆரம்பிக்க ஒரு கட்டத்துல நானே பிரேக் அப் பண்ணிக்கலாம் வீட்டுல தெரிஞ்சுடுச்சுனு வாய்க்கு வந்ததெல்லாம் சொன்னேன்.

அதுக்கு அப்பறம் தான் அவனோட சுயரூபம் தெரிய ஆரம்பிச்து.ஒழுங்கு மரியாதையா என்னை லவ் பண்ணு நான் சொல்றதெல்லாம் கேளு இல்ல என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியதுனு கத்தினான்.

முதல்ல நானும் பெருசா எடுத்துக்கல..ஆனா ரெண்டு நாள் முன்னாடி அவன் ப்ரண்ட்ஸ் ரெண்டு பேரோட வந்தவன் இன்னும் இரண்டு நாள்ல உனக்கும் எனக்கும் கல்யாணம் ஒழுங்கு மரியாதையா வந்து சேரு இல்லனா உன்னை உயிரோடயே விடமாட்டேன்னு மிரட்டிட்டு போய்ட்டான் மேம்..

அவன் சொன்ன டேட் நாளைக்குத் தான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு மேம்.அவன் சொன்ன விதத்துலயே தெரியுது என்ன வேணா பண்ணுவான்னு..அதான் ரொம்ப பயமா இருக்கு மேம்”,என்றவள் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

ஹே வைஷ்ணவி அழாத..அதெல்லாம் ஒண்ணும் பண்ண மட்டான் நாங்க எல்லாம் இருக்கோம் தான..சரி வீட்ல சொன்னதுக்கு அப்பா அம்மா என்ன சொன்னாங்க?”

வீட்லயா!!வீட்டுக்குத் தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுருவாங்க மேம்.என்ன தான் அவன் கெட்டவன்னு தெரிஞ்சு விலகினாலும் லவ் பண்ணது பொய்னு ஆகாது தான!”

ம்ம் இப்போ இவ்ளோ தெளிவா பேசு..ஒருத்தனை பார்த்தாலே நல்லவனா கெட்டவனானு தெரியாதா?”

“…..”

சரி விடு அவனுங்க என்ன நெத்தில போர்ட் ஒட்டிட்டா திரியுறானுங்க நாம கண்டுபிடிக்குறதுக்கு..ம்ம் நடந்ததை நினைச்சு யோசிச்சு ஒரு ப்ரோயஜனமும் இல்ல.ஆக வேண்டியதை பார்ப்போம்.ம்ம் உன் பேரண்ட்ஸ்க்கு தெரியாம கண்டிப்பா நாம எதுவும் பண்ண முடியாது.நீ உங்க அப்பாக்கு கால் பண்ணி குடு நான் பேசுறேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.