Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 11 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 11 - சசிரேகா

Unnaiye thodarven naane

ரவணப்பெருமாள் வரைந்த ஓவியத்தைப் பார்த்ததும் மாதவிக்கு எந்த ஞாபகமும் வராமல் போனதுதான் ஆச்சர்யமே. அதற்கு காரணம் மாதவி தனக்கு நடந்த திருமணத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. அன்றைய நாள் அவள் மிகவும் பயத்துடனும் குழப்பத்துடனும் இருந்தாள் அத்திருமணத்தையே அவள் வெறுத்தாள்.

திடீரென திருமணம் என சொன்னதால் மாதவியால் அன்று எதையுமே யோசிக்க முடியவில்லை. தாத்தாவின் முடிவு தனக்கு பிடிக்கவில்லைதான் ஆனாலும் வேறு வழியில்லாமல் தாத்தாவிற்காக திருமணம் செய்துக் கொள்ள சம்மதித்தாள். திருமண அலங்காரத்தில் இருந்த போது கூட ஒரு நொடி தன்னையே கண்ணாடியில் பார்க்கும் எண்ணம் தோன்றாததால் திருமணத்தன்று தான் எவ்வாறு இருந்தோம் என்று கூட அவள் அறியவில்லை.

அத்திருமணம் செல்லாது என்ற குரல் வந்ததும் அங்கிருந்து சிட்டாக பறந்து சென்றாளே தவிர யார் இருக்கிறார்கள் யாருடன் திருமணம் ஆனது என்று கூட அவள் கவனிக்கவில்லை. அத்திருமணம் செல்லாது என தெரிந்ததுமே அதைப்பற்றி கவலைப்படாமல் 1 வருடத்தை ஓட்டினாள். இப்போது இந்த ஓவியத்தை பார்த்த போது அவளது மனதில் தோன்றியது இதுவே

சரவணன் தன்னை மனப்பெண்ணாக கற்பனை செய்துக் கொண்டு இவ்வாறு வரைந்துள்ளான். சிறந்த ஓவியன் என்றே நினைத்தாள்.

அதே சமயம் சொப்னாவோ உடனே மாதவியை சந்தேகத்துடன் பார்க்க, மாதவி விக்கித்துப் போய் பயத்தில் நின்றாள்.

சொப்னாவின் பார்வையைக்கண்ட மாதவி

ஓ சொப்னா சரவணனை விரும்பறா இந்த சரவணன் எதுக்காக என்னை வரையனும் அந்த மனப்பெண் முகத்துக்கு நான்தான் கிடைச்சேனா சொப்னா முகம் வரைஞ்சிருக்கலாமே ஆனா சரவணன்தான் சொப்னாகிட்ட காலையில பேசிக்கிட்டு இருந்தாரே அப்புறமும் ஏன் சொப்னா என் மேல சந்தேகப்படறா ஒரு வேளை அவர் தெளிவா சொல்லாத காரணத்தால இன்னமும் சொப்னா சரவணனை விரும்பறா போல என்னால என் ப்ரெண்ட் கஷ்டப்படக்கூடாது இந்த சரவணனால நானும் என் ப்ரெண்டும் பிரியக்கூடாது ஏதாவது ஒரு வழி பண்றேன்என மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்.

இது இது வந்து எப்படிஎன சொப்னா அதிர்ச்சியில் கேட்க அதற்கு சுந்தரி அந்த ஓவியத்தைக்கண்டு சரவணன் மனதில் இருப்பதை புரிந்துக் கொண்டவள் சொப்னாவிடம் உடனே தன் மனதில் இருப்பதைச் சொன்னாள்.

நான்தான் அப்பவே சொன்னேனே, அண்ணா மனசுல நீயில்லை, அவர் உனக்காக வரலைன்னு, பார்த்தியா, அவர் மனசுல யார் இருக்காங்கன்னு, இப்பயாவது புரிஞ்சிக்க சொப்னா, 5 நிமிஷத்தில மாதவியோட உருவத்தை அப்படியே உயிர்ப்பா ஓவியமா வரைஞ்சிருக்காருன்னு, எந்த அளவுக்கு அவர் மாதவியை விரும்பியிருந்தா இந்தளவுக்கு வரைய முடியும்

அதுலயும் கல்யாண கோலத்தில மாதவியை வரைஞ்சிருக்காரு தன் மனசுல மாதவிதான் இருக்கா அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்னு இதை விட சிம்பாலிக்கா யாராலயும் சொல்ல முடியாதுப்பா இன்னும் சொல்லனும்னா இப்படி ஒரு ப்ரபோசலை நான் எங்கயும் பார்த்ததில்லை ஓவியத்தை விட அவர் அதுல தன் மனசுல இருக்கறத சொன்னவிதம்  சூப்பர்ல” என வியப்புடன் சரவணனை பாராட்டியபடியே சொல்ல சொப்னாவிற்கு கஷ்டமாகிப் போனது. சொப்னாவின் வருத்தத்தைக்கண்ட மாதவிக்கு கஷ்டமாகிப் போனது. யாரிடமும் செல்லாமல் ஆசையாக மாதவியிடம் வந்த சரவணனிடம் எரிந்து விழுந்தாள்

எதுக்காக என் படத்தை நீங்க ஓவியமா வரைஞ்சீங்க வேறு யார் முகமும் உங்களுக்கு தெரியலையாஎன சொப்னாவை பார்த்தபடியே கத்த அவனோ திருதிருவென விழித்தவன் சொப்னாவை பார்த்தான். அவள் முகம் சோகமாகிவிட்டதைக்கண்டு அவள் மன நிலைமையை புரிந்துக் கொண்டவன் சொப்னாவிடம் சமாளிக்கும் விதமாக இயல்பாக பேசினான்.

ஒரு ஓவியனா நான் பார்த்த அழகான உருவத்தை வரைஞ்சேன் அது தப்பாஎன சரவணன் கேட்க அதற்கு சொப்னாவோ

”5 நிமிஷத்தில எப்படி இப்படி அழகா வரைய முடிஞ்சது உங்களால அதுலயும் கல்யாண கோலத்தில மாதவியை எப்படி எப்படிஎன அவள் அதிர்ச்சியுடனும் ஒரு வித கலக்கத்துடனும் கத்த அவனோ பெருமூச்சுவிட்டான்.

மனசுல ஆழமா பதிஞ்சி போன உருவம் மாதவியோடது, அதான் இவ்ளோ அழகா அதுலயும் சீக்கிரமா வரைய என்னால முடிஞ்சது இது போட்டிதானே இதுக்கு ஏன் இப்படி கோபம் வருது உனக்குஎன சொல்ல அது சொப்னாவிற்கு பிடிக்கவில்லை. சுந்தரியோ சரவணனிடம்

வாழ்த்துக்கள் அண்ணா நீங்கதான் ஜெயிப்பீங்க.” என்றாள் சிரித்த முகத்துடன் அதைக்கேட்டு மகிழ்ந்து போன சரவணனோ சிரிப்புடன்

எதுல சொல்ற சுந்தரிஎன மாதவியை பார்த்து கேட்க அவனின் பார்வையைக்கண்ட மாதவியை முறைக்க சுந்தரியோ அதைக்கவனித்து

வாழ்க்கையிலயும் சரி இந்த போட்டியிலயும் சரி நீங்கதான் ஜெய்ப்பீங்க அண்ணாஎன்றாள் அர்த்தமுடன்

எப்படி அவ்ளோ உறுதியாச் சொல்றஎன கேட்க

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 11 - சசிரேகாsasi 2019-06-05 08:03
நன்றி ஆதர்வ் மெடிக்கல் மிராக்கலா wow சரவணன் மாதவி நல்ல ஜோடி பொருத்தம் யாருக்கு யார் கொடுத்து வைச்சிருந்தாலும் சரி அவங்க முதல்ல சேரனும் அதான் முக்கியம் :yes: ஏமாத்தனும்னு இல்லை இப்பவே எதுக்கு உண்மையை வெளிய கொண்டுவரனும் அதுக்கான சரியான நேரம் வர்ற வாரங்கள்ல இருக்கு இந்த உண்மையை முதல்ல மாதவிக்குதான் தெரியனும் அவள் ஒத்துக்கிட்டதானா மத்தவங்க ஒத்துக்குவாங்க சோ சரியான தருணத்துக்காக வெயிட்டிங் :-) மாதவியால கண்டிப்பா மிராக்கல்க்கு பஞ்சம் இருக்காது ரொம்ப நன்றி :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 11 - சசிரேகாsasi 2019-06-05 07:55
Quoting vijayalakshmi:
nice

நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 11 - சசிரேகாAdharv 2019-06-03 19:39
:cool: epi sasi ma'am :clap: :clap: Saravanan and masi eppadi attam pottangandradhai Inga makkalin kondathadhin mulamaga rombha cheerful aga depict seithu irukinga :clap:
kutti kutti medical miracles seithu kitte irukingale madam ji :P hope next epi la overnight miracle aga madhavi will be back to form. Saravanan innum konjam porumai kadaipidinga looks like madhavi is just in dilemma ninga pattaku bayam kudukadhinga ;-) BTW ungala kalyanam seithu madhavi kuduthu vachi irukanum sonna avangalai kalanyam panika ninga kudhu vachirukanum solanum boss :D swapna route clear agidichi :dance: teaser parthu I thought sarvanan would have told abt tripati wedding scene, emathitingale ji facepalm aduthu ena agumnu therinju kola waiting.thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 11 - சசிரேகாvijayalakshmi 2019-06-03 19:15
nice
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 11 - சசிரேகாராணி 2019-06-03 12:02
டான்ஸ் ப்ரோக்ராம் அதற்கு தேர்வு செய்த பாடல்களும் அருமை :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 11 - சசிரேகாsasi 2019-06-05 07:55
Quoting ராணி:
டான்ஸ் ப்ரோக்ராம் அதற்கு தேர்வு செய்த பாடல்களும் அருமை :clap:

நன்றி wow
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 11 - சசிரேகாmadhumathi9 2019-06-03 07:30
wow 14 pages :-) big :thnkx: very cute & fantastic epi.poruththamaana paadalgal koduththathu arumai :clap: aduththa epiyai padikka miga aarvamaaga kaaththu kondu irukkirom. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 11 - சசிரேகாsasi 2019-06-05 07:57
Quoting madhumathi9:
wow 14 pages :-) big :thnkx: very cute & fantastic epi.poruththamaana paadalgal koduththathu arumai :clap: aduththa epiyai padikka miga aarvamaaga kaaththu kondu irukkirom. :thnkx: & :GL:

நன்றி மதுமதி எனக்கும் ஆர்வமாக உள்ளது அடுத்த எபிக்கு உங்களது கமெண்ட் எப்படி இருக்கும் என்று (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 11 - சசிரேகாதீபக் 2019-06-03 06:51
Sis today's episode amazing :clap: . Dance competition part is really super (y) .on the whole it is good entertaining one :dance: . Eagerly waiting for next update :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 11 - சசிரேகாsasi 2019-06-05 07:56
Quoting தீபக்:
Sis today's episode amazing :clap: . Dance competition part is really super (y) .on the whole it is good entertaining one :dance: . Eagerly waiting for next update :GL:

நன்றி தீபக் wow
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top