(Reading time: 15 - 29 minutes)

ஐயோ மேம்!!!”

இங்க பாரு வைஷ்ணவி விஷயம் கை மீறி போய்ருச்சு..சில விஷயங்களை வாழ்க்கையில் பேஸ் பண்ணி தான் ஆகணும்.நீ பண்ணிண தப்புக்கான தண்டனை உன் பெத்தவங்ககிட்ட வாங்குற திட்டோ இல்லை இரண்டு அடியோனு நினைச்சுக்கோ.அதுக்கு பயந்து விஷயத்தை மறைச்சனா வாழ்க்கையே தொலைக்க வேண்டியதா ஆய்டும்.கால் பண்ணி குடு நா பேசுறேன்.”

அவளின் தந்தையிடம் மேலோட்டமாய் விஷயத்தை கூறியவள் மாலையில் கல்லூரிக்கு வருமாறு கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.அன்று முழுவதுமே மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லை ஜீவிகாவிற்கு.

மாலை கல்லூரி முடிந்ததும் அந்த பெண்ணோடு கல்லூரி மைதானத்தில் காத்திருந்தவளைத் தேடி நடுத்தர வயது ஆணும் பெண்ணுமாய் பதட்டமாய் வந்தனர்.

மேம் அம்மா அப்பா…”

ஹாலோ சார்..ஹாய் மேடம்..”

மேம் போன்ல என்னனென்னவோ சொன்னீங்களே எவ்ளோ திமிரு இருந்தா இவ..”

சார் சார் ப்ளீஸ்..உங்க கோபம் எனக்கு புரியுது ஆனாலும் விஷயம் கொஞ்சம் சென்சிடிவ் புரிஞ்சுக்கோங்க..”

ரொம்ப தேங்க்ஸ் மேடம்..விஷயம் தெரிஞ்சு அதை பெருசாக்காம பக்குவமா ஹேண்டீல் பண்றீங்க..”

வீட்ல பசங்க எப்படி உங்க பொறுப்போ படிக்க வந்துட்டா எங்க பொறுப்பு சார்.இதெல்லாம் என் கடமை தான்.சரி சொல்லுங்க நாளைக்கு அந்த பையன் கண்டிப்பா இவளைத் தேடி வருவான்னு தான் தோணுது..என்ன பண்ண போறீங்க போலீஸ் மூலமா போகலாமா இல்ல நீங்களே பார்த்துக்குறீங்களா?”

போலீஸ் மூலமா போறதுதான் நல்லதோனு தோணுது மேடம்..பொண்ணு விஷயம் இல்லையா நாம எதாவது பண்ணிட்டு நாளைக்கே அவன் வேற எதாவது முடிவெடுத்தான்னா இழப்பு நமக்கு தான..”

கரெக்ட் தான் சார்..அப்போ இந்த ஏரியா லேடிஸ் போலீஸ் ஸ்டேஷன்லயே கம்ப்ளைண்ட் கொடுப்போம்..காலேஜ் ஏரியாங்கிறதால மத்த பசங்களுக்கும் இந்த மாதிரி பிரச்சனை வரக் கூடாதுனு உடனே அக்ஷன் எடுப்பாங்க..நான் எதாவது உதவி பண்ணணும்னாலும் சொல்லுங்க…”

பரவால்ல மேடம் நீங்க இவ்ளோ பண்ணிணதே போதும்..நாங்க பாத்துக்குறோம்..இந்த உதவியை எப்பவும் மறக்க மாட்டோம்..”

இருக்கட்டும்ங்க நான் கிளம்புறேன்..”,என்றவள் வண்டியை கிளப்பிக் கொண்டு வீட்டை நோக்கி பயணித்தாள்.

வாடா ஜீவிகா ஏன் இவ்ளோ லேட் வேலையா?”

இல்லை மாமா ஒரு சின்ன பிரச்சனை என் ஸ்டண்ட் ஒரு பொண்ணு..”,என்று ஆரம்பித்தவள் விஷயத்தை கூறி முடிக்க அவளுக்கான காபியோடு சமையலறையில் இருந்து வெளியே வந்தார் அவளின் மாமியார்.

அடக் கொடுமையே..என்னவோ போ ஆனாலும் இந்த காலத்து பிள்ளைங்களுக்கு தைரியம் அதிகம்.அதே நேரம் பெரிய ஆபத்தும் கூட.ஒவ்வொரு நாளும் எத்தனை செய்தி கேள்வி படுறோம் அப்படியாவது பாத்து பத்திரமா இருக்க வேணாம்.”

ம்ம் அடுத்தவனுக்கு நடக்குற எல்லாமே நமக்கு வெறும் செய்தி தான அத்தை..மிஞ்சி போனா ஒரு வாரம் தலைக்குள்ள வச்சுருப்போம் அப்பறம் மறந்துருவோமே!”

அதைச் சொல்லு..ஆனாலும் ஒவ்வொண்ணையும் பத்தி கேட்கும் போது பகீர்னு இருக்கு..இப்போ இந்த பொண்ணையே எடுத்துக்கோ அவ பெத்தவங்க செஞ்ச புண்ணியமோ என்னமோ உனக்கு விஷயம் தெரிய வந்திருக்கு..இல்லைனா அவ நிலைமை என்னாயிருக்கும்?”

கரெக்ட் தான் அத்தை..ஆனாலும் எல்லா பெத்தவங்களும் பிள்ளைகளுக்கு எதை வேணா தங்ககிட்ட தயக்கம் இல்லாம பேசலாம்ங்கிற சுதந்திரத்தை கொடுக்குறதில்ல அத்தை..அதுதான் பாதிக்கு மேல பொண்ணுங்க வாழ்க்கையை தொலைச்சுடுறாங்க

அப்படி சொல்லாத ஜீவிம்மா..இப்படிபட்ட காரியத்தை பண்ணிட்டு வந்தா எந்த அப்பா அம்மாக்கு தான் ஆத்திரம் வராது.பண்ணின தப்புக்கு வெட்டி போடுற அளவு ஆத்திரம் தான் வரும்.”

ம்ம் பாத்தீங்களா உங்களுக்கே எவ்ளோ கோபம் வருது.ஆனா அந்த கோபத்தை சரியா புரிஞ்சுக்குற பக்குவம் எங்க ஜெனரேஷனோட போய்டுச்சுனு தான் தோணுது.இப்போ இருக்குற பிள்ளைங்களுக்கு யாரும் அவங்களை ஒண்ணும் சொல்ல கூடாது அடிக்க கூடாது கண்டிக்க கூடாது.அப்பறம் எப்படி சரி தப்பு புரியும்?

அம்மா திட்டினா அப்பா சப்போர்ட் பண்ணுவார்..அப்பா அடிச்சா அம்மா அப்பாவோட சண்டை போடுவாங்க..டீச்சர் அடிச்சா பெத்தவங்க ரெண்டு பேருமா போய் அவங்களை குற்றவாளி மாதிரி நிக்க வச்சு கேள்வி கேட்பாங்க..இப்படி ஒரு நிலைமைல அவங்களுக்கு தப்பை உணர வைக்குறதுக்கு யாரு இருக்கா சொல்லுங்க?பதிமூணு பதினாலு வயசு வரை அவ்ளோ செல்லம் கொடுத்து கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து பாதுகாக்க வேண்டியது.திடீர்னு பதினைஞ்சாவது வயசுல வந்து நீ இது பண்ணாத அது பண்ணாதனு சொன்னா அதை ஏத்துக்குற பக்குவம் அவங்ககிட்ட இல்லாம போய்டுது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.