"ஆனாலும் யாதவியை 5 வருஷமா தொலைச்சு தேடிட்டு இருந்தேனே ம்மா.. யாதவி எப்படியோ சாத்விக்கை தேடித்தான் போயிருப்பான்னு தெரிஞ்சு அங்க போய் பார்த்தேன்.. ஆனா சாத்விக் அவ வீட்டுக்கு போனாளான்னு கூட தெரியாம வெளிநாடு கிளம்பி போயிட்டான். அவங்க அப்பா யாதவியை பத்தி சரியான பதிலே சொல்லல..
யாதவியை சாத்விக் ஏமாத்திட்டதா ப்ரஸ்க்கு சொன்னா, யாதவியை சீக்கிரம் கண்டுப்பிடிச்சிடலாம்னு கூட போலீஸ் ஐடியா கொடுத்தாங்க.. ஆனா யாதவியை பத்தி தப்பா யாரும் நினைச்சிடக் கூடாதுன்னு இதோ உங்க வீட்டு பார்ட்டியில் அவளை கண்ணில் பார்க்கும் வரை ரகசியமா தேடிட்டு இருந்தேன்.. ஆனா சாத்விக் இப்படி சர்வசாதாரணமா அவளை பத்தி பேப்பர்ல வரும்படி செய்துட்டானே.."
"விடுப்பா நடக்கணும்னு இருப்பது நடந்து தான் ஆகும்.. ஆனா உன்னை நினைச்சா தான் சந்தோஷமாவும் பெருமையாகவும் இருக்கு.. உன்னை வேணாம்னு சொல்லிட்டு போனவள விடாம தேடிட்டு இருந்திருக்க.. அதுக்கு எவ்வளவு பெரிய மனசு வேணும்.."
"அம்மா அவ அந்த வயசில் பக்குவமில்லாம தெரியாம செஞ்சுட்டா.. அதுக்காக அவ எப்படி வேணும்னாலும் போகட்டும்னு விட முடியாது.. அப்புறம் நான் அவ மேல வச்ச அன்புக்கு அர்த்தமே இருக்காதும்மா.." என்றவன்,
"சரி அவ உங்கக்கிட்ட எப்படி வந்தாம்மா.." என்று கேட்க, புவனாவும் யாதவி சொன்னதை அப்படியே அவனிடம் கூறினார்.
அதை கேட்டவனுக்கோ, யாதவி அவனை புரிந்துக் கொண்டது இவ்வளவு தானா? என மனதில் நினைத்தாலும், அந்த சூழ்நிலையில் அவள் மனதில் அந்த பயம் இருப்பது நியாயம் தான், அதனால் தான் அவனை தேடி வராமல் அவள் மறைவு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டான்.
"இந்த பேப்பரை யாதவி பார்க்க வேண்டாம் ம்மா.. பார்த்தா அவ மனசு கஷ்டப்படும், அப்புறம் நான் அவளை இத்தனை நாள் தேடின விஷயத்தையும் கூற வேண்டாம்.. அப்புறம் நான் என்னவோ பெரிய தியாகம் செய்தது போலவும், அவ செஞ்ச தப்புக்கு குற்ற உணர்வில் தவிப்பா.. நான் முன்ன சொன்னது போல் அவளை இயல்பா இருக்க விடுங்க.." என்று அவன் சொன்னதற்கு புவனா தலையாட்டிக் கொண்டார் என்றால்,
குளிப்பதற்காக சென்ற யாதவி, நேற்று பாலா வீட்டுக்கு சென்று ட்ரைவர் மூலமாக கொடுத்தனுப்பிய அவளின் ஆடைகளும் அடங்கிய பையை வரவேற்பறையிலேயே மறந்து வைத்துவிட்டதால், அதை எடுக்கச் சென்றவள், அவர்கள் இருவரும் பேசியதை கேட்க நேர்ந்த போது என்னவாக உணர்ந்தாள் என்று அவளுக்கு தெரியவில்லை.
முன்பே அவனைப் பற்றிய நல்ல அபிப்ராயம் அவளுக்கு இருந்தாலும், அவள் செய்த தவறுக்காக தான் ஒதுங்கியிருந்தாள். ஆனால் இத்தனை நாள் அவன் இவளை தேடியிருக்கிறான், இவள் மீது அன்பு வைத்திருக்கிறான். இவளுக்கு கஷ்டம் கொடுத்ததால் ரூபினி அண்ணியின் அன்னையை தண்டித்திருக்கிறான்.
அவனது இந்த அன்பிற்கு அவள் செய்ய போவது என்ன? இனியாவது அவனது மனைவியாக ஒழுங்காக வாழ்வது தானா? அந்த தகுதி தனக்கு இருக்கிறதா? என்று அவள் தனக்கு தானே கேட்டுக் கொண்டாள்.
மையல் தொடரும்..
Go to Maiyalil manam saaintha velai story main page
{kunena_discuss:1211}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.